search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • பவானி நகர தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது போன்று பல திட்டங்களை முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.

    பவானி:

    பவானி நகர தி.மு.க. சார்பில் பவானியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொது க்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். அவை த்தலைவர் மாணிக்கராஜ், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகர பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராசன் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டு 2 ஆண்டு கால ஆட்சியின் சிறப்பை பற்றி கூடியிருந்த மக்களிடையே விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    276 கோடி முறை பெண்கள் பஸ்சில் பயணம் செய்துள்ளதாகவும், அதன் மூலம் 4426 கோடி ரூபாய் அரசிற்கு செலவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தொகை பெண்களுக்கு சேமிப்பாக உள்ளது. அரசு அதை ஏற்று கொண்டு உள்ளது எனவும், அதேபோல் முதல்- அமைச்சர் இலவசம் என கூற கூடாது கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்கள் என கூறுங்கள் என அறிவுறுத்தி பேசினார்.

    தற்போது 6-ம் வகுப்பு சேர்க்கை உயர்ந்துள்ளது. 8-ம் வகுப்பு இடையில் நின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கி ன்றனர். தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர்.

    வடமாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் நம் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகமாக படிக்கும் மாணவர்கள் இல்லாமல் போய்விடும். இதற்காக முதல்-அமைச்சர் இந்த தேர்வு நடக்கும் முன்னதாக பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன் முறையாக ரூ.7,500, 2-வது முறையாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கி வருகிறார்.

    ஏனென்றால் அவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் எனவும், நம் மாநில மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்ற வேண்டும் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இது போன்று எண்ணற்ற பல திட்டங்களை இந்த 2 ஆண்டில் முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணன், மாவட்ட துணைச்செயலாளர் அறிவானந்தம், மாவட்டத்துணை அமைப்பாளர் சுப்பிரமணி, முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் தவமணி, உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பவானி நகர துணைச்செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    • கடலாடியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்-தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் நீர் பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாத், இளைஞரணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், கருப்பசாமி, புண்ணியவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சர்புதீன், ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, முன்னாள் கடலாடி துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய அவை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலாடி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
    • கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.   இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டையில் தினத்தை முன்னிட்டு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ரமேஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் ஆன்லைன் தொழிற்சங்க கல்வியை உருவாக்கிடவும், நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் சார்பாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், ஒரு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாதவன் நன்றி கூறினார்.

    • மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, கிருஷ்ணமூர்த்தி, செல்லமுத்து, துரைராஜ், கண்ணதாசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் மே தின சிறப்புக்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார். மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்ரமணியம், மீனவர் பிரிவு இணை செயலாளர் தங்கமணி, முன்னாள் எம்பி சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேந்திரன், டாக்டர் நவாப்ஜான், முத்தமிழ்செல்வன் மற்றும் துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன், வக்கீல் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் மின்வாரிய பிரிவு கோட்ட பொருளாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

    • மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஓசூர் ஜூஜூவாடியில் நேற்று மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    மேலும் இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பர்கூர் சி.வி.ராஜேந்தி ரன், ஆகியோர் பேசினர்.

    மேலும் இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொது செயலாளர்-முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    பெத்தானியாபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஆர். சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்குகிறார்.மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா வரவேற்று பேசுகிறார்.

    மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் ரவிச்சந்திரன், மத்திய 6-ம் பகுதி செயலாளர் ராமச்சந்திரன், சக்தி மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கணேஷ் பிரபு, முன்னிலை வைக்கிறார்கள்.

    தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லன், தவசி, சுப்புராஜ், பாலகுமார், ராஜசேகரன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்று கிறார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் முத்தையா, துணைச்செயலாளர் எம். எஸ். பாண்டியன், பேச்சா ளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தொழிலாளர்களின் மேன்மையை சிறப்பிக்கும் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவு நிர்வாகி கள் மற்றும் முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர்கள் தினமான நாளை மே (1-ந்தேதி) தமிழகம் மற்றும் அ.தி.மு.க. செயல்படும் பிற மாநிலங்களில் மேதின விழா பொதுக்கூட்டம் நடத்திட அ.தி.மு.க. பொதுச்செய லாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் 5-வது தெரு மெயின் ரோடு திடலில் சண்முகநாதன் (எனது) தலைமையில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் சரவணன், ராம கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    கூட்டத்தில் தலைமை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கத்தி னரும் கலந்து கொள்கிறார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள், தொண்டர்கள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும். ஏரல் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இன்னும் பல அரசு அலுவலகங்கள் அமைக்க போதிய இட வசதி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பத்திர பதிவு அலு வலகத்தை அவ்விடத்திலேயே கட்டித் தர வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை முன்பு நாளை காலை 10 மணிக்கு சண்முகநாதன் (எனது) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அழைப்பு
    • நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி.சுகுமாரன் தலைமை தாங்குகிறார். 25-வது வார்டு கவுன்சிலர் எஸ்.அக்சயா கண்ணன் வ ரவேற்று பேசுகிறார்.

    கூட்டத்தில் நான் (தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ.), அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ராஜலெட்சுமி, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.பச்சைமால், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் இ.சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெ.கே.திலக், மாவட்ட துணை செயலாளர் எம்.பார்வதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் எஸ்.மெர்லியன்ட் தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
    • கம்யூனிஸ்டு, தி.மு.க., தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆண்டுதோறும் மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்பட உள்ளது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் அரிசிக்கடை வீதியிலும், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் ராயபுரத்திலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அ.தி.மு.க. சார்பில் பெரிச்சிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் திருப்பூர் மாநகர போலீசில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு, தி.மு.க. தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் அணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து கமிஷனர், தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கேயனை தொடர்பு கொண்டு அ..தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து விளக்கங்கள் கேட்டார். பின்னர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். அனைத்து கட்சிகளின் மே தின பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே மாதம் 1-ந்தேதி மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மே தின கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாடும் வகையில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற மே மாதம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.
    • ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்,பாகலூர் ஹட்கோ பகுதியில் இருந்து அணிவகுப்பு தொடங்கி,பாகலூர் சாலை, பஸ் நிலைய சாலை, பழைய பெங்களூரு சாலை, எம்.ஜி.சாலை, ஏரித்தெரு, மற்றும் ராமநாயக்கன்ஏரி வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் பேரணி நிறைவு பெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

    பின்னர், நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சங்கர்லால் முன்னிலை வகித்தார்.

    அகில பாரத துறவியர் சங்கத்தின் துணைத்தலைவர் ராமானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார். வட தமிழக ஆர்.எஸ் எஸ்.மாநில இணைசெயலாளர் பிஷோப குமார் சிறப்புரையாற்றினார்.

    இதில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி,

    ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×