search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ எம்.பி. பேசுகிறார்.
    • திரளாக பங்கேற்க பூமிநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (25-ந் தேதி) வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ரோட்டில் உள்ள ஒபுளா படித்துறை சந்திப்பில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத் திற்கு மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மொழிப்போர் தியாகி களுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திராவிட இயக்க போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் செய லாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார்.

    தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்று கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் அமைப்பு செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, தலைமைக் கழக பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான், பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் மாவட்ட பிரதிநிதி ரம்யா குமார் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் தொகுப்புரையாற்றினார். மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கலை இலக்கியப் பிரிவு துணைச் செயலாளர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வாசுதேவன், செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேசினார்
    • இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசி–றியில் தமிழர் தேசம் கட்சி சார்பில் இடப்பங்கீடு எனது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் கலந்து–கொண்டு பேசியதாவது:- முத்தரையர் மக்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும், ஜாதிவாரிய கணக் கெடுப்பு எடுத்து மக்களுக்கு உரிய இடப்பங்கீட்டை வழங்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எங்களது இடப்பங்கீடு உரிமை குறித்து தமிழகத்தில் 12 இடங்களில் கூட்டம் நடத்தி தமிழக அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து, முசி–றியில் 13-வது கூட்டத்தை நடத்துகிறோம். ஆகவே முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் குரு–மணிகண்டன், மாநில கொள்கை பரப்பு செய–லாளர் தஞ்சை சாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராஜ், முசிறி செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.
    • பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் கே.மதன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கட்சியின் செய்தி தொடர்பாளரும், வக்கீல் பிரிவு இணை செயலாளருமான பாபு முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.

    மேலும் தலைமைக்கழக பேச்சாளர்கள் கோவை புரட்சித் தம்பி, வெங்கட்ராமன் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.

    இதில் ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர்,பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.
    • ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி ஆகியோர் வரவேற்றனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் திருப்பதி, டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி, நகர இளைஞரணி கேபிள் மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நக,ர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவர் அணி டாக்டர் கருப்பையா நன்றி கூறினார்.

    • சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் உதயநிதி என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்றார்.

    மதுரை

    மதுரை ஜீவா நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடிய வில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது.தமிழகத்தில் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். நல்ல நல்ல கருத்துக்களை தன் திரைப்படம் மூலம் எடுத்து சொன்னவர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் இப்போதும் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசு. அரிதாரம் பூசியவன், நடிகன் என எம்.ஜி.ஆரை கேலி பேசினாலும் கேலி பேசியவர் குடும்பத்தையும் வாழ வைத்தார். அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெய லலிதா வும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள் அவர்கள். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். மக்களை தான் தன் வாரிசுகளாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் நினைத்தனர்.

    ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

    ஜெயலலிதா மந்திரி சபையில் 3-வது, 6-வது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார். பொய் மூட்டை களை சட்ட மன்றத்தி லும், பொதுக் கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள் தி.மு.க.வினர்.

    தி.மு.க. அரசில் 35 பேர் அமைச்சர்களாக இருந்தாலும் 10-வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் அவர். நிதி அமைச்சர் கூட 27-வது இடத்தில் தான் இருக்கிறார்.என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என்று பேசியவர் உதயநிதி.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால் சந்தி சிரிக்கிறது.தமிழக மக்களை ஏமாற்றி, பொய், புரட்டை சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர் தி.மு.க. அமைச்சர்கள். இவர்கள் ஏமாற்றுவதை எங்கே போய் சொல்வது.

    தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி எப்போது கையில் செங்கலை தூக்கி னாரோ அன்றில் இருந்தே செங்கல் விலையும் உயர்ந்து விட்டது. போதைப்பொருள் கடத்தல் மாநிலமாக தி.மு.க.வினர் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள்.

    மதுரையில் இப்போது 2 அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி சட்டமன்றத்தில் கரும்புள்ளி ஏற்படுத்திய தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக விரைவில் வர உள்ளது.

    ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவை நடத்த விரும்புவோர் முறையாக 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    திருமணம், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இன்றியமையாத நிகழ்ச்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூரில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்
    • கூட்டத்தில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த தியாக வேள்வியில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்-அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்னையன், அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா. வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ், சென்னை புறநகர் மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி. ம.ராசு, மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா. தென் சென்னை தெற்கு (மேற்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் அசோக்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம்-அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்டம்-மருத்துவ அணி செயலாளர்

    டாக்டர் பி.வேணுகோபால், திரு வள்ளூர் கிழக்கு மாவட்டம்-மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்-மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. காஞ்சீபுரம் மாவட்டம்-மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பி.முனுசாமி

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில்-அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைைம நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் கே.பி.முனு சாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டம்-பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர் ஜக்கையன்.

    கடலூர் கிழக்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்-கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பிதுரை, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நாமக்கல் மாவட்டம்-அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, திருப்பூர் மாநகர் மாவட்டம்-தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.

    விழுப்புரம் மாவட்டம்-அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செம்மலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செல்வராஜ்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்-அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் மேற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சி.த. செல்லப்பாண்டியன், முருகையா பாண்டியன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×