search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • பேராசிரியர் க அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • மாநகர துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் க அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்ட பகுதி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

    மாநகர துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார். இதில், திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் மாநில,மாவட்ட, மாநகர, கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆகிய முக்கியமான இரண்டு ஆறுகள் கடந்து செல்கின்றன. ஆனால் தருமபுரியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதனை தவிர்க்க காவிரியில் இருந்து வெளியேறி வீணாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி சேமித்து பயன்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரியில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகில் மாலை நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.

    இந்த பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு ள்ளது.

    மேலும் தருமபுரி மாவட்ட எல்லை தொடங்கி நகரம் முழுவதும் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சியினர் வரவேற்பு பதாகைகள், தோர ணங்கள் கட்டியுள்ளனர்.

    அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • பொதுக் கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • இலவச பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நேற்று தொட ங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வா தரத்தை பெருக்கி கொள்ள முடியும். கிராம புற பகுதிகளிலும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சர் கடந்த முறை பொங்கல் பரிசு குறித்து குற்றச்சாட்டு வைத்ததன் வெளிப்பாடின் காரணமாக அப்பொருட்கள் வழங்க பட முடியவில்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக கொடுக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதோடு சேர்த்து பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திராவிடம் மாடல் அரசு பதவி ஏற்ற உடன் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று பேசினார்.

    • புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
    • பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள்.

    சீர்காழி:

    சீர்காழி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

    விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், பஞ்சு குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், முத்து குபேரன், செல்வமுத்துக்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக நடைபெற்றது
    • பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ராச்சாண்டர் திருமலையில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூதேரி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், தலைமைக் கழக பேச்சாளர் பொன்னேரி சிவா தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், பேராசிரியர் அன்பழகன் பற்றியும் சிறப்புரை ஆற்றினார், விழாவில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், செயற்குழு உறுப்பினர் சிவராமன், பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, முன்னால் குளித்தலை ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் தோகைமலை ஒன்றிய குழு தலைவர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், மற்றும் தோகைமலை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  





    • காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 5 விளக்கு அருகில் நடந்தது. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார். நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் தாமரை பாரதி, அறந்தை செல்வம், பா.கணேசன், ஓசூர் அப்துல் பாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசிவர்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதாசெந்தில், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா, நகர தலைவர் சன்சுப்பையா, கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், பேராசிரியை கலாகாசிநாதன், ஹரிதாஸ், தனம்சிங்கமுத்து, திவ்யாசக்தி, பூமிநாதன், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், சொக்கலிங்கம், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் முகமதுகனி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • திருமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருமங்கலம் ஜவகர்நகர் ரவுண்டானாவில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். நகர் செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேசன், நகர்மன்ற தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குன்னூர் ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநில அணி நிர்வாகிகள் முத்துராமலிங்கம்,கொடிசந்திரசேகர், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், செல்வம்.மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கேசுவரன், பாண்டி, முருகன், கிருத்திகா தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செய லாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    • அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • பொதுக்கூட்டத்தில் பாண்டித்துரை, அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பாவூர்சத்திரத்தில் தி.மு.க.முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசு ராஜன், ஷேக் தாவூது, சுந்தர மகாலிங்கம், தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, ஷெரிப், அப்துல் காதர், ரஹீம், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சமுத்திரபாண்டி, கதிர்வேல் முருகன், சாமிதுரை, தமிழ்ச்செல்வி, ஆர்.கே. காளிதாசன், சேவியர் ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சீனித்துரை வரவேற்று பேசினார். கம்பம் பாண்டித்துரை, மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சிவன் பாண்டியன், ரவிசங்கர் ஒன்றிய குழு தலைவர்கள் காவேரி, திவ்யா மணிகண்டன், சேக் அப்துல்லா, கடையநல்லூர் சேர்மன் மூப்பன் ஹபிபூர் ரகுமான், நகரச் செயலாளர்கள் சாதிர்,ஜெயபாலன் பேரூர் மன்ற தலைவர்கள் சின்னத்தாய், வேணி, காளியம்மாள், சுதா, சுந்தர்ராஜன், பி.எம்.எஸ். ராஜன் மற்றும் தி.மு.க. பிரதிநிதிகளான மதிச்செல்வன், குருசிங் செல்வராஜ், விஜயன், செந்தூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.

    அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    உடுமலை : 

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வுக்கு உட்பட்ட தாராபுரம் குண்டடத்தில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் இருந்து நகரச் செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள்,சார்பு அணிநிர்வாகிகள்சார்பு அணிநிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 

    • தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.

    தருமபுரி,

    மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் 82-ம் ஆண்டு அவதார விழாவையொட்டி தருமபுரி மாவட்ட ஓம் சக்தி மன்றங்களின் தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு தருமபுரி மாவட்ட தலைவி பழனியம்மாள் மனோகரன் தலைமை ஏற்று பேசும்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா வரும் 23-ம் தேதி தொடங்கி வரும் 4.2.2023 வரை நடைபெற உள்ளது. மறு நாள் 5.2. 2023 மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற உள்ளது.

    இதனை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி செவ்வாடை பக்தர்கள் முதலாம் ஆண்டு முதல் 9 ஆண்டு வரை கோயிலுக்கு இருமுடி ஏந்தி செல்பவர்கள், செவ்வாடை அணிந்து ஒழுக்கம், கட்டுப்பாடு, அறநெறியுடன், இருமுடி ஏந்தி செல்ல வேண்டும். அதேபோல் 9 வருடம், அதற்கு மேல் வாழ்நாள் முழுவதும் செல்லும் பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா லட்சுமணன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் வீரன், மாவட்ட வேள்வி குழு இணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அம்மணியம்மாள்சுகுமார், மாவட்ட பிரச்சாரக் குழு இணை செயலாளர் பஸ்வராஜ், மாவட்ட தணிக்கை குழு இணைச் செயலாளர் ராமசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தரு மபுரி வட்ட தலைவர்கள், பெண்ணாகரம் வட்ட தலைவர்கள், பாலக்கோடு வட்ட தலைவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவர்கள், அரூர் வட்ட தலைவர்கள், மன்ற நிர்வாகிகள், செவ்வாடை தொண்டர்கள், சக்தி பீட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினர்.

    • கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் மேயர் மகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரை விமர்சித்து பேசியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ்,மாநகராட்சி கவுன்சி லர்கள் அய்யப்பன், சுனில் அரசு, வீரசூர பெருமாள்,ரோசிட்டாள், ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை விமர்சித்து பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாளை 10-ந்தேதி நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

    ×