search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223461"

    • கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • தொற்றுநோய்க்குப் பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருந்தது.

    கொரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில், தொற்றுநோய்க்குப் பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றிலும் 52 நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் பற்றிய பொதுவான பார்வை குறைந்து விட்டது.

    இருப்பினும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தில் உறுதியாக இருந்து செயல்பட்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐ.நா. அமைப்பான 'யுனிசெப்' பாராட்டி உள்ளது. பிற இரு நாடுகள் சீனாவும், மெக்சிகோவும் ஆகும்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும்.

    தருமபுரி,

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னி யாகுமரி, ராணிபேட்டை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொேரானா பாதிப்பு அதிகம் உள்ளது.

    தருமபுரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

    அதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

    வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை ேசாப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் நோய் தொற்றை பரவாமல் தடுக்கலாம்.

    தருமபுரி நேற்று மட்டும் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை வீடு மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 28 பேர் வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • நாட்டின் தலைநகரில் கடந்த 15 நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,578 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த 15 நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    டெல்லியில் இன்று (கடந்த 24 மணி) நேரத்தில் 1,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது நேற்றை விட 15 சதவீதம் அதிகமாகும். நேற்றைய எண்ணிக்கை 1,537ஆக இருந்தது. மேலும், புதிய இறப்பு எண்ணிக்கையுடன், டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,578 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், கொரோனாவை சமாளிப்பதற்கான தயார் நிலையைக் கண்டறிய கடந்த 11ம் தேதி அன்று டெல்லி மருத்துவமனைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு
    • தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    31 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மொத்தம் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    முக கவசம்

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை, -

    கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறு த்தப்பட்டு வருகிறது.

    இருமல், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

    இதில் கடந்த சில மாதங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். தற்போது பாதிப்பு காரணமாக 274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.
    • பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளன.தமிழக எல்லை ப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளது. அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இரு மாநில சுகாதார துறையினரும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி கொரோனா நோயாளி களின் தகவ ல்களை பரிமாறி வருகின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தமிழக -கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி கள் கூறுகையில், கேரளா வில் இருந்து அறிகுறி களுடன் வருவோர் குறித்த தகவல்கள் பெற ப்பட்டு, அவர்கள் தனிமை ப்படு த்தப்படுகி ன்றனர்.பரிசோ தனைகளும் மேற்கொ ள்ளப்படுகின்றன என்றார். 

    • 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கைதிகள் உள்பட 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த 2 ½ வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த குழந்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொது இடங்களில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள்
    • சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், முஞ்சிறை பகுதிகளில் தலா 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம், திருவட்டார், தக்கலையில் தலா 4 பேரும், தோவாளையில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்.காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது
    • திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி, சளியை பரிசோதித்த போது அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப் பெண் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் நேற்று இரவு9.20 மணிக்கு அப் பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அக் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ஹாட்ஸ்பாட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு நேரு வீதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் 22ந் தேதி உடல் நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட து. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி இறந்தார்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், மூதாட்டி குடி யிருந்த பகுதியில் முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வை யில், ஆய்வா ளர் கோகுல்நா தன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ப்பட்டது.யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என கேட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது. பொது மக்களிடம் கூட்டமாக உள்ள பகுதியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவு ங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பர வலை தடுக்கும் வகை யில், ஹாட் ஸ்பாட் பகுதி களை கண்டறிந்து தடுப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள சுகாதார த்துறை தீவிரம் காட்டுகிறது.கடந்த 7மாத ங்களில் இல்லாத வகையில் நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்புளூ யன்சா, சுவாச பிரச்னை ஏற்படக்கூடிய பிற நோய் தொற்று, இதற்கு முன் மற்ற காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவிய இடங்க ளை கண்டறிந்து அப்பகுதி களை ஹாட்ஸ்பா ட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட ப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்து றை அலுவலர்கள் கூறுகை யில், தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு, இறப்பை தழுவினால், அதற்கான காரணம் என்ன, இணை நோயா, எப்படி தொற்று வந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது. கடந்த கொரோனா அலையின் போது ஒன்றுக்கும் மேற்ப ட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட பகுதி ஹாட் ஸ்பாட்டாக கருதி, கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்த ப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்ப டுகிறது என்றனர்.

    • கோவை மாவட்டத்தில் போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
    • அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணி ப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளி ட்டவை தற்காலிகமாக அமைக்க ப்பட்டது.

    திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்தும், வழிகாட்டுதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, ஆக்ஸிஜன் அளவு அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். இதில், மாவட்ட சுகாதாரத்து றை துணை இயக்குநர் அருணா, ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர்.

    இந்த ஒத்திகை கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 92 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவ மனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கலெக்டர் கிராந்திகு மார்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை பயிற்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதை பார்வையிட்டு நான் ஆய்வு செய்தேன்.

    கோவை மாவட்டத்தில் தற்போது வரை 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவையில் தேவை யான மருத்துவ உள்கட்ட மைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்து வமனைக்கு செல்வோர் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    மாவட்டத்தில் கொரோனா அறிகுறிக ளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி யில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் 16 ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை. கோவையை பொறுத்தவரை மருத்துவ கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கபட்டுள்ளது
    • மருத்துவமனை டீன் நேரு மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார்.

    திருச்சி:

    திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகளுக்கான அறையை மருத்துவமனை டீன் நேரு மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் உள்ளது.

    தேவையான அளவு ஆக்சிஜன் கான்சென்டரேட்டர்கள், 25,000 பி.பி.இ. கிட், 120 வெண்டிலேட்டர்கள் மற்றும் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது, கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளோம்.குறைந்த அளவு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் எட்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் தினசரி 317 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையும் தீவிர படுத்தப்படும் என்றார்.


    ×