search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223470"

    • மதுபானம்-கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டார்.
    • தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்ற னர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். இதில் 2 பேரிடமும் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட நபர்கள் ஆரப்பாளையம் முருகன் மகன் விஸ்வநாதன் (வயது 19), புட்டுத்தோப்பு, செக்கடி தெரு தங்கராமன் மகன் கிஷோர் (19) என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரம் வினோத், ஆனந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் போலீசார் சோதனையில் நாகமலை புதுக்கோட்டை பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்டி சாக்குடன் வந்த 2 பேர் சிக்கினர்.

    பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது கர்நாடக மதுபாட்டில்கள் 96 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேலக்குயில்குடி, ஆதிசிவன் நகர் சிவபாண்டி (27), கிழக்கு தெரு பசும்பொன் (27) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேங்கிப்பட்டி மாரிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.

    • நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
    • மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.

    அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.

    இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 பேரை சரமாரியாக தாக்கிய 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அர்ச்சுனா நதி படுகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கொட்டகை உரிமையாளர் ராமதாஸ் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதில் ஏற்பட்டுள்ள வாக்குவாதத்தில் ராமதாஸை அந்த கும்பல் தாக்கியது. இதை தடுக்க வந்த விக்ரம் என்பவரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் விசரணை நடத்தி நெல்லையை சேர்ந்த அய்யப்பன், குமரேசன், ராகுல், வெள்ளைபாண்டி மற்றும் 6 பெண்கள் உள்பட 26 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்டம் முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கவுந்தப்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 123 மது பாட்டிலுடன் சென்ற கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த வேலு (36), கோபியைச் சேர்ந்த கவுதம் (24), திங்கள் உரைச் சேர்ந்த கார்த்தி (26) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது. வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றுமுன்தினம் ஏ.டி.எம். மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்ற போது அங்குள்ள ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு :

    உடனே இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளை போனதா? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து பார்வையிட்ட போது ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ .12 லட்சம் பணம் அப்படியே இருந்தது. பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. கேமரா, மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆராய்ந்த போது அதில் ஒருவர் ஏ.டி.எம். அறை முன்பு இருந்த கல்லை எடுத்துக் கொண்டு, ஏ.டி.எம். எந்திர அறைக்குள் செல்வது பதிவாகி இருந்தது.

    தொழிலாளி கைது :

    கண்காணிப்பு கேமராக்களின் பதிவை வைத்து ஆராய்ந்ததில், அந்த நபர் பல்லடம் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மன்னார்குடியை சேர்ந்த நாகேந்திரன் (வயது 66) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில்,கடந்த 2019ம் ஆண்டு கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து ரூ.2ஆயிரம் நோட்டு பெற்று அதை மாற்ற முயற்சித்த போது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். தற்போது கூலி வேலைக்கு செல்லும் போது மது அருந்த ரூ.300 தேவைப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார் என்றனர்.

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பழனிச்சாமியை பவானி போலீஸார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பவானி செங்கோடன் டீக்கடை வீதி பகுதிக்கு சென்று உள்ளனர்.

    அப்போது அந்த இடத்தில் கந்தசாமி மகன் பழனிச்சாமி (52) தமிழக அரசு அனுமதியின்றி பல்வேறு வகையான மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி யை பவானி போலீஸார் கைது செய்தனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      நாகர்கோவில்:

      சுதந்திர தினத்தை யொட்டி டாஸ்மார்க் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்துக்கு புகார்கள் வந்தது.

      இதனால் மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்த அவர் உத்தரவிட்டார். போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த செல்வி (வயது 52), செல்வசிங் (49), சோபனதாஸ் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      இரணியல் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமை யிலான போலீசார் பறையன்விளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு திருட்டுமது விற்பனை செய்து கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (63) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையி லான போலீசார் குருந்தன் கோடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற கஸ்தூரி (65) என்பவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் எறும்புக்காடு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு திருட்டு மது

      விற்பனை செய்து கொண்டிருந்த சுயம்பு லிங்கம் (63) என்பவரை கைது செய்துஅவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

      அருமனை சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நெடுங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த இரும்புலி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (63) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிதறால் பகுதியில் மதுவிற்ற வேலன் (48) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமா ரன் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

      அப்போது மது விற்ற சரண் (36) என்பவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 16 மது பாட்டில்கள் மற்றும் 11 ஆயிரத்து 960 பணத்தையும் பறிமுதல் செய்தனர். அம்பலக்காலை பகுதியில் மதுவிற்ற சுனில் வயது (36) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      மார்த்தாண்டம் புல்லானி பகுதியில் மது விற்ற முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த பத்மசீலன் 34 சசிகுமார் 46 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஆசாரிப்பள்ளம் சப் இன்ஸ்பெக்டர் மேரிமரிபா தலைமையிலான போலீசார் மேலசூரங்குடி சானல் கரை பகுதியில்மது விற்ற நாராயண மணி (39) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 4 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

      நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மது விற்பனை செய்ததாக 3 பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

      • நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
      • ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

      புதுடெல்லி:

      சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர்.

      டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது விற்பனை கடைகளுக்கான லைசென்சு பெற புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

      இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.

      இதனால் தங்களிடம் இருக்கும் மதுபாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் மதுக்கடைகள் ஒரு பாட்டில் சரக்கு வாங்குபவர்களுக்கு 2 பாட்டில் மது இலவசம் என்ற அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டது.

      அவ்வளவுதான் மது பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு பிரபலமான ஸ்டார் சிட்டி, மால் உள்ளிட்ட மது விற்பனை கடைகள் முன்பு திரண்டார்கள். இதனால் மது கடைகள் முன்பு கடுமையாக கூட்டம் அலை மோதியது. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சரக்கு பாட்டில்கள் வாங்கி சென்றனர்.

      மதுபிரியர்கள் குறிப்பிட்ட சில மதுபான வகைகளை வாங்கியதால் விரைவாக அந்த மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தது. அதுவும் குறிப்பாக பீர் வகைகள் அனைத்தும் சில மணி நேரங்களில் விற்று காலியானது.

      ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆனால் பலருக்கு அதிர்ஷ்டம் கிடைக்காததால் அவர்கள் மதுபாட்டில்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்து டன் வீ டு திரும்பினார்கள்.

      இந்த சலுகை அறிவிப்பால் டெல்லி நகர வீதிகளில் உள்ள மதுபான கடைகள் நேற்று மாலை திருவிழா கூட்டம் போல காணப்பட்டது.

      • மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார்.
      • இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர்.

      பு.புளியம்பட்டி

      ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      இதனையடுத்து போலீசார் புஞ்சை புளிய ம்பட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஜே. ஜே. நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

      அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்து செய்தனர். அப்போது அதில் 180 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

      விசாரணையில் மதுவை கடத்தி வந்தவர் கோவை மாவட்டம் சிறுமுகை சித்தார்த்தர் வீதியைச் சேர்ந்த மாரிசாமி (34) என தெரிய வந்தது. இவர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.

      இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

      • புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை
      • ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது

      கன்னியாகுமரி :

      புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

      அப்போது அதே பகுதி ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்றதாக ஜாண் றோஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

      • சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
      • பூலோக பாண்டியன் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

      ஆறுமுகநேரி:

      ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

      விசாரணையில் அந்த நபர் காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த பூலோக பாண்டியன் (47) என்பதும், அவர் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

      அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

      • மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்
      • 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

      நாகர்கோவில் :

      கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது கொல்லங்கோடு மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

      இது தொடர்பாக மது பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் வள்ளவிளை புதுவல்புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த முகம்மது அசிம் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

      இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      ×