search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223502"

    • கோவில் உள்விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டியளித்தார்.
    • விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோபராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் ரங்க நாதர்கோவிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயம் உள்ள கோவில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது.

    கோவில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படு கின்றனர். கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    ஆனால் ஸ்ரீரங்கம்கோவிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனம் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் செய்து முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், விதிமு றைகளை திருத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலை யத்துறை தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் நடைமுறைப்படுத்து வதற்கான அரசாணை வெளியிட்டது.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் போக்கு வரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வகை செய்யும் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் நடைமுறைப்படுத்து வதற்கான அரசாணை வெளியிட்டது.

    தமிழக அரசு அதன்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் புதிய அபராத வசூல் விதிக்கப்படு ம் என விழுப்புர மாவட்ட போலீசார் எச்சரிக்கை செய்து ள்ளனர். இந்த அபராத வசூல் பின்வருமாறு:-

    உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500- ஆக இருந்த அபராதத் தொகை இப்போது ரூ.5,000-ஆக அதிகரிக்க ப்பட்டுள்ளது. மொபைலில் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் இப்போது ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து 2-வது முறை பிடிபட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

    பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், "வீலிங்' எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் ரூ.500ஆக இருந்த அபராதம் ரூ.5,000-ஆகவும், இரண்டாவது முறை பிடிபட்டால் அபராதம் ரூ.10,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1000 அபராதம். காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம். பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் ரூ.2,500 அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம். விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உயத்தப்பட்ட அபராதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறது எனபதை சரிபார்த்துக் கொண்டு சாலைகளில் வாகனங்களில் செல்ல போலீசார் கூறுகின்றனர்.

    • உணவு பொருள் குறித்து புகார் அளிக்க க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருள் தரமின்மை குறித்து விரைவில் புகார் அளிக்க வசதியாக, க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    உணவு பொருள் கலப்படம், தரமில்லாத உணவு விற்பனை, காலாவதியான பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறையில் புகார் செய்யலாம். போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டல், பேக்கரி போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் விரைவாக புகார் அனுப்ப வசதியாக க்யூ. ஆர்., கோடு வசதியுடன் கூடிய, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×