search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாபஸ்"

    • கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட தலைந கரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலத் தலைவர் ஜெயசந்திரனை தாக்கியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். இதையடுத்து நியாய விலைக்கடை பணியா ளர்கள் தங்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கணே சன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பொருளா ளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து மாநில துணைத்தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
    • ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி பாக்கி வைத்தி ருப்பவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த நக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதில் நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், ரகீம், சஜிலா, சந்திர வயோலா, பனிக் குருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண் பிரிட்டோ, சுஜித்திரா, தனலட்சுமி, வினேஷ், லாரன்ஸ், திலகா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்களுடன் ஆணை யர் விஜயகுமார் மாலை பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தார். ஆனால் கவுன்சிலர்கள் அதை ஏற்க வில்லை.

    தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் தி.மு.க. தலைமை ஏற்பாட்டின் படி மாநில தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். காலையில் (நேற்று) ஆணை யாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை யடுத்து நேற்று மதியம் ஆணையர் விஜயகுமார் மற்றும் மேற்கூறிய கவுன்சி லர்களுடன் தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் நகராட்சி வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பெயர் பட்டியலை வார்டு கவுன்சிலர்களிடம் அளித்து வசூல் செய்வது எனவும், ஒத்துழைப்பு அளிக்கா தவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பது எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்ச மின்றி செய்வது எனவும், நடை பாதையோரம் கடை களில் கட்டண வசூல் செய்யக்கூடாது எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு மேற்கூறிய கவுன்சிலர்கள் ஆதரவு அளிப்பது எனவும், நக ராட்சி புதிய கடைகள் குத்தகை வாடகைக்கு விடும்போது நகர்மன்றத்தில் தெரியப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளச்சல் நகராட்சி கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • தூய்மை பணியாளர்கள் முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்நிலையில் ஒப்பந்த முழு ஊதியம் வழங்க ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 132 தூய்மை பணியாளர்கள், காவல் பணியா ளர்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் தினக்கூலி, 707 ரூபாய் வழங்காமல், 310 ரூபாயை வழங்குகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்த 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு தொகை ஊதியமாக வழங்கவும் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம், மருத்துவ துறை அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், முழு ஊதியம் வழங்கவும் ஒப்பந்த நிறுவனம் ஏற்று கொண்டதால் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றனர்.

    • மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.
    • பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே புலவஞ்சி கிராமத்தில் அரசுக்கு ெசாந்தமான தரிசு பாதை நிலம் தனி நபரால் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இது பற்றி காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி போஸ் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய் துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து காவிப்புலிப்படை சார்பில் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.

    இதுகுறித்த செய்தி ஏற்கனவே மாலைமலரில் வெளியாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போஸ், அரசு தரிசு நிலத்தை அடைத்திருந்த தனிநபர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு தரிசு நிலத்தை அடைத்த பாதையை திறந்து விட வேண்டும், பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.
    • கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் கொத்தன் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவரது மூத்த மகன் காஸ்டின் இளைய மகன் சுரேஷ் (வயது 45). அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று சுரேஷ் கூத்தன் குளம் பகுதியில் உள்ள நூலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரரின் மகன் அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தலையில் அடித்தார். இதில் ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அருண் ஜெனிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அருண் ஜெனிஸ் போலீசாரிடம் கூறியதாவது:-

    சுரேஷ் எனது சித்தப்பா ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அந்த திருமணத்தை எனது தந்தை காஸ்டின் மற்றும் தாயார் சரஸ்வதி ஆகியோர் தடுத்ததாக கூறி அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்.இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக என்னிடமும் கூறினார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக குத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட அருண் ஜெனிசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்? என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார்.
    • மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விலகிக் கொண்டார். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு, தி.மு.க மாவட்ட செயலாளர் மணிமாறன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பு, மக்களுக்கு ஆற்றி வருகின்ற பணிகள், அவர் தலைமையில் நல்லாட்சி தொடர்வதால் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் தோல்வி அைடந்து விடுவோம் என்ற பயத்தில் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். செங்கப்படை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரமன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, புவனேஸ்வரி ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலம்பட்டி சண்முகம், ஆதிமூலம், முன்னாள் யூனியன் தலைவர் கொடி சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×