search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223610"

    • இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டவழங்கல் அதிகாரி அதிரடி
    • ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    தமிழக-கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழு எருதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். தொடர்ந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 3 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் குழிக்கோடு பகுதியை சேர்ந்த வினு (வயது 34), கப்பியறை பகுதியைசார்ந்த ஆகாஷ் ( 23), குழிக்கோடு ஜனசிலின் ஆகிய 4 பேரும் ஓரு மோட்டார் சைக்கிளில் குழித்துறை தியேட்டரில் இருந்து படம் பார்த்து விட்டு மார்த்தாண்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அங்கு நிறுத்தி விட்டிருந்த லாறி பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
    • போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலிவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67), மினி பஸ் அதிபர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என விஜயகுமாரின் மகன் விக்னேஷ், போலீசில் புகார் அளித்தார். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையில் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று திருவட்டாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் கந்துவட்டி கொடுமையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அது சாதாரண தற்கொலை என்றும் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

    பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

    • உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கடந்த 29-ம் தேதி சுவர் ஏறி குதித்து புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு உண்டி யலை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மறுநாள் (30-ந்தேதி) மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடு க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணம் ெகாள்ளை போயிருந்தது.

    இதையடுத்து கொள்ளை யர்களை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் டிப்- டாப் தோற்றத்துடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கோயி லுக்கு வந்துள்ளனர்.

    அவர்கள் வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த கோயில் மேல் சாந்தி, ஆலய காம்பவுண்டுக்குள் வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து இருந்த கொள்ளையர்கள் ஆல யத்தின் உள்ளே சட்டையை கழற்றி விட்டு வந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வது போன்று நோட்மிட்டுள்ளனர்.

    இதை பார்த்த ஆலய மேல் சாந்தி பிரசாதம் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் பிரசாதம் வாங்காமல் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனி படை போலீசார் கோவில் கொள்ளையர்களின் போட்டோக்களை கொண்டு வந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மேல் சாந்தியிடம், அடையாளம் காட்டும் படி கூறியுள்ளனர்,

    அதில் பார்த்தபோது வட இந்தியாவில் உள்ள பிரபல கொள்ளையனின் ஒருவன் அடையாளம் காட்டப்பட்டது, மேலும் மற்றொரு கொள்ளையன் நாகர்கோயிலை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது,

    கோயிலை கொள்ளை யடிக்க வடநாட்டு கொள்ளை யர்கள் நோட்ட மிட்டு உண்டியலை கொள்ளை யடித்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
    • இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
    • 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.

    இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.

    போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை சந்திப்பில் தேவசம் போர்டுக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்று வருகிறது, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் காம்பவுண்ட் சுவருக்குள் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த 2½ அடி ஸ்டீல் உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். இதை யடுத்து ஆலய பக்தர் சங்க நிர்வாகி ராஜேஷ், தேவசம் போர்டு ஸ்ரீகாரியம் முத்தமிழ்செல்வன் ஆகியோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் எங்கு தூக்கி செல்லப்பட்டது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் உண்டியலை தேடிப் பார்த்தனர் மேலும் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆனால் எந்த துப்பும் துலங்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. உண்டியலை கைப்பற்றிய போலீசார், உண்டியலை பார்த்தபோது உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். அந்த கோவில் உண்டியல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேவசம்போர்டு அதிகாரி களால் திறக்கப்படுவது வழக்கம்.

    தற்போது ஒரு வருடமான நிலையில் திறக்க உள்ள நிலையில், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்
    • குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறை களை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறை கள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லப்பட்ட 2 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படு கிறது.

    இதன் உரிமையாளர் யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட விரிகோடு, பாண்டியன் விளையை சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீமா.

    இவர் திக்குறிச்சியில் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக வேலை ஆட்களை வைத்து அதில் நின்ற மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தார். அப்போது மார்த்தாண்டம் போலீசார் மற்றும் பலர் சேர்ந்து அங்கு சென்று இந்த பகுதியில் வேலை செய்ய கூறியது யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டு சீமாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் பறித்து சென்றதாக தெரிகிறது.

    இதற்கு அந்த பெண் தரப்பில் ஏன் எதற்காக வேலையை தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு உன்னிடம் கூற தேவையில்லை என கூறி கூட்டாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்ததை தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த சீமா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து, போலீசாரும் அந்த கும்பலும் அங்கிருந்து சென்று விட்டனர். இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சீமாவை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சீமா மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சர் ஆ கியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

    ×