search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழித்துறை"

    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் நாளை (23-ந் தேதி) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரிகோடு, மாமூட்டுக்கடை, நெட்டி யான்விளை, காட்டவிளை, மஞ்சக்குளம், கரைக்காடு, பரக்குன்று, சாத்தன்கோடு, துவரச்சன்விளை,

    வாழ்வச்சான்பாறை, மூடோடு, சாண்டிபாறை, செழுவன்சேரி, தூப்புர மூலை, மணப்பழஞ்சி, நுள்ளிக்காடு, அயக் கோட்டிவிளை, மடத்து விளை, மாங்கோடு, காளை விழுந்தான்கோயில், ஐந்துளி, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    குழித்துறை சந்திப்பிலிருந்து குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு -தாலுகா அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படுகின்ற 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர கடும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயார்

    கன்னியாகுமரி: 

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வாவுபலி பொருட்காட்சி இந்த ஆண்டு நாளை (13-ம் தேதி) தொடங்குகிறது. 97-வது வாவுபலி பொருட்காட்சியின் துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு வி.எல்.சி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி திட்ட உரையாற்றுகிறார். கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார்.

    தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முன்னிலை வகிக்கிறார்.

    நிகழ்ச்சியில் பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பி னர்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி, பிரின்ஸ், எம். ஆர் காந்தி, தளவாய் சுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட ராகன் ராட்டினங்கள், மரணக்கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், மாய க்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்தமான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகை கன்றுகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வாவுபலி பொருட்காட்சி நடத்துவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • பொதுமக்கள் சேர்ந்து பஸ்சை தள்ளி சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
    • சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    புத்தன் சந்தையில் இருந்து மார்த்தாண்டத்தை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    பஸ் குழித்துறை சந்திப்பில் வந்தபோது சாலையில் பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அரசு பஸ் சாலையில் பழுதாகி நின்றதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து பொது மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் 1 மணிநேரமாகி யும் போலீசாரும், அதிகாரி களும் வர தாமதமானதால் பொதுமக்கள் சேர்ந்து பஸ்சை தள்ளி சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    அரசு பஸ் பழுதாகி நின்றதால் குழித்து றையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை துணை கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (4-ந் தேதி) மற்றும் செவ்வாய், புதன்கிழமைகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சாங்கை, கல்லுத்தொட்டி, ஈடன் கார்டன், நாகச்சன்விளை, சீனிவிளை, பாட்டவிளை, பிராணிவிளை, குஞ்சாலுவிளை, தச்சூர்கோ ணம், குழிஞ்ஞான்விளை, மீனச்சல், மேலோட்டுவிளை, செம்மன்காலை, மடத்து விளை, நடப்பாறவிளை, நுள்ளிக்காடு, கண்ணன்புரம், பேயோட்டுகோணம், ஆலம்பாறை, செறக்கோ ணம், கட்டச்சல், சிற்றாற்ற ன்கரை ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாங்கை, கோட்டகம், பாண்டி யான்விளை, காஞ்சிரகோடு, நரியன்வி ளை, படப்பாறவிளை, இடை விளாகம், கல்நா ட்டி, தலக்கோணம், மங்க லத்துவிளை, மலை க்கோயில், நாகராஜாகோவில், கருந்தூர், பூதப்பிலாவிளை, பணியன்விளை, பனவிளை,

    ஈந்திக்காலை, மலமாரி, குளவிளை, குருவிக்குந்நு, வைகுண்டம், அரகநாடு ஆகிய பகுதிகளுக்கும், புதன்கிழமை (ஜூலை 6) ஆம் தேதி மார்த்தாண்டம் சந்தை, பஸ் நிலையம், ரயில் நிலையம், மதிலகம். வால்குளம் விளவங்கோடு, புலிப்பாறைகாவு, ஈத்தவிளை, பாலவிளை, தேவிநகர். குரூர், தெற்றிவிளை. மழுவன்சேரி, காமராஜ்நகர், தெங்கம்பழஞ்சி, பாஞ்சிவிளை, அதங்கோடு, ஆயவிளை, நாரகத்தன்குழி, குருவில்விளை,

    பாக்கோடு, தெக்கே கோணம், தோலடி, ஆயோட்டுகோணம், மச்சக்கோணம், மாங்காலை, கிலாத்தூர், சிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை, ஜூன்.30-

    மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்கோடு கல்லறைவிளை பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 73).

    இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று காலை பால் வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் பதறி போன உறவினர்கள்- உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

    இந்நிலையில் அருகாமையிலுள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாலம மாள் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
    • இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் சப்பாத்து கடவு பகுதியில் இன்று காலை பொது மக்கள் குளிக்க சென்றபோது 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்த உடலை மீட்டு கரை சேர்த்தனர். இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். தலையில் காயம் உள்ள நிலையில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக மிதந்தவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மிதந்த ஆண் உடலால் குழித்துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அரசியல் பிரமுகர்.

    குழித்துறை பகுதியில் இவர் காய்கறி மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு விற்பனை முடிந்த பின்பு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடைக்கு சென்ற போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.56 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கேமிராக்களும் மாயமாகி இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த ராஜூ, அருகில் உள்ள கடைகளில் விசாரித்த போது, காய்கறி கடையின் அருகே உள்ள ஒரு ஓட்டலிலும் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. அங்கும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது.

    ஓட்டல் மற்றும் காய்கறி கடையில் மொத்தம் ரூ.62 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி ராஜ், மற்றும் ஓட்டல் உரிமையாளர் முகமது ரிபாய் ஆகியோர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் குழித்துறை தபால் நிலையம் அருகே இருந்து நடந்து வந்து இரண்டு கடைகளையும் நோட்டமிடுவது பதிவாகி இருந்தது.

    இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகளை கொண்டு கொள்ளை அடித்த நபரை தேடிவருகிறார்கள்.

    கொள்ளை நடந்த ஓட்டலில் ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பலத்த காயம் அடைந்த முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி என்ற அலிகான் (வயது 58), பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்.

    இவர் அழகியமண்டபம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செய்யது அலி என்ற அலிகான் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் முகம்மது சர்ஜுன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    • தனியார் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிதிஷ் லால்(வயது 28). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து விஜயகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.


    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிதிஷ்லாலை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று குழித்துறை ஆற்றில் நிதிஷ் லால் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த நிதிஷ் லால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மாயமான கல்லூரி பேராசிரியர் நிதிஷ் லால் ஆற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொ ண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.

    அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசார ணையில் நிதிஷ் லால் மாயமா வதற்கு சில நாள்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிணமாக கிடந்தார். எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


    தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆற்றின் கரையில் இருந்த நிதிஷ் லால் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    ×