search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223651"

    • சின்னமுட்டம்துறைமுகத்தில் இருந்து கடல்வழியாகபடகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவே கானந்தா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த சீரமைப்பு பணியில் சென்னையை ேசர்ந்த என்ஜினீயர் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். இந்த படகு பராமரிக்கும் பணி 2 மாத காலம் நடந்தது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை ெதாடர்ந்து விவேகானந்தா படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவேகானந்தா படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணி களை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    மேலும் கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் இன்று 2-வது நாளாக திடீரான தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து வெகு நேரமாகி யும் தொடங்கப்ப டாமல் இருந்தது.

    இதனால் விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப் படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் சுற்றுலா பயணி கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • பாறைகள் வெளியே தெரிந்தன
    • திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நேற்றிரவு திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.

    இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வானதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிடவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 9மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். அதே சமயம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    • மீனவர் தேவதாசனுக்கு மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
    • மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40). இவர் கடந்த 18-ந்தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரை கடந்த 3 நாட்களாக போலீசாரும், உறவினர்களும் தேடி வந்தனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடினர்.

    இந்நிலையில் மாயமான மீனவ ரின் லுங்கி கடல் அலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என குடும்பத்தினர் பீதியடைந்தனர். இந்நிலையில் தேவதாசன் உடல் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குளச்சல் துறைமுக பகுதியில் மிதந்து சென்றது.

    இதனை விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து கரையில் சோகமாக அமர்ந்திருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மீனவர்கள் வள்ளத்தில் சென்று அவரது உடலை மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவதாசன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலில் மாயமாகி பலியான மீனவர் தேவதாசனுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

    • மீனவர் உடை கரை ஒதுங்கியதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்
    • சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்ததில் அலையில் சிக்கிக் கொண்டார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40), மீன்பிடித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பகலில் வலையை கடலில் வீசிவிட்டு இரவில் வழக்கம்போல் வலையை இழுக்க சென்றார்.

    அப்போது சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்தார். இதில் அலையில் அவர் சிக்கிக் கொண்டார். மேலும் அலை யில் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் அவ ரது உறவினர் ஸ்டான்லி புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனவர் தேவதாசனை தேடும் பணி யில் ஈடுபட்டார்.

    இன்று 3- வது நாளாக மரைன் போலீசார் மற்றும் உறவினர்கள் 5 வள்ளங்களில் சென்று தேவ தாசனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயமான மீனவர் தேவதாசனின் லுங்கி கடல் அலையில் இன்று கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாமோ? என குடும்பத்தினர் பீதியடைந்து உள்ளனர். அவர்கள் சோகத்துடன் கடற்கரையிலேயே அமர்ந்துள்ளனர்.

    மாயமான மீனவர் தேவதாசனுக்கு, ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

    • மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.
    • போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 58). மீனவரான இவர், கட்டுமரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    அங்கு அவர் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது கட்டுமரம் கவிழ்ந்து சண்முகம் கடலில் மூழ்கி மாயமானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடல் கரை ஒதுங்கியது அதன் பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்கு சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை கொட்டாய்மேடு கடற்கரையில் சண்முகம் உடல் கரை ஒதுங்கியது.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2½ மணி நேரம் தாமதமாக தொடக்கம்.
    • கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை 3-வது நாளாக தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும்செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து 2½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து காலை10.30மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டுவந்தனர். இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • மீன்வளத்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி சென்றனர்
    • மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று இரவு சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்டனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டு மீறி சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கீழமணக்குடி முதல் சங்குத்துறை வரை கரை ஒதுங்கியது
    • வௌ மீன்கள் அதிகளவு சிக்கியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    கடற்கரை கிராமங்களி லும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதை யடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்ற னர். அவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. குறை வான அளவு மீன்கள் விற்ப னைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.

    குளச்சல் பகுதிகளில் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலுக்குள் இருந்த மீன்கள் கரை ஒதுங்கியது. கீழ மணக்குடி முதல் சங்குதுறை கடற்கரை வரை மீன்கள் கரை ஒதுங்குவதாக தகவல் பரவியது.

    இதையடுத்து அதன் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரை பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலையிலும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் கடற்கரை பகுதிகளில் குவிந்திருந்தனர். ராட்சத அலைகளில் மீன்கள் கரை பகுதிக்கு வருகிறது.

    பின்னர் அந்த அலை திரும்ப கடலுக்குள் செல்லும்போது மீன்களை வாலிபர்கள் கையால் பிடித்து வருகிறார்கள். வாலிபர்கள் கையில் ஏராளமான மீன்கள் சிக்கி வருகிறது. குறிப்பாக அதிக அளவு வெளமீன்கள் சிக்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர்கள் கையில் டன்கணக்கில் வெளமீன்கள் சிக்கி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாலிபர்கள் கையில் தினமும் டன் கணக்கில் மீன்கள் சிக்கிவரும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து இன்று காலை யிலும் ஏராளமான வாலி பர்கள் கடற்கரையில் குவிந் திருந்தனர்.

    இது குறித்து வாலிபர்கள் கூறுகையில், கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுக்கு மீன்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    இதையடுத்து கரைக்கு வந்த மீன்களை கையால் பிடித்தோம். அதிகளவு மீன்கள் எங்களிடம் சிக்கி உள்ளது. சிக்கிய மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்க உள் ளோம். மீன்கள் கரை ஒதுங்குவதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் பகுதி யில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலில் குளிர்ந்த தண்ணீர் ஏற்பட்ட தால் வெள மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம்.
    • குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கடல் நீர் மூடிய மணற்பரப்பில் உட்கார முடியாமல் திரும்பி சென்றனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடற்கரையில் தினமும் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம்.

    அவர்கள் கடற்கரை காற்றில் மாலை சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை ரசித்துவிட்டு செல்வர். சிலர் மணற்பரப்பில் குடும்பம்குடும்பமாக அமர்ந்தும், 'செல்பி' எடுத்தும் களிப்புற்று செல்வர்.

    இந்நிலையில் குளச்சல் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சீற்றம் காரணமாக அலை நீர் மணற்பரப்பு முழுவதும் பாய்ந்து மணற்பரப்பை மூடி உள்ளது.நேற்று மாலை குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கடல் நீர் மூடிய மணற்பரப்பில் உட்கார முடியாமல் திரும்பி சென்றனர்.சிலர் அலை தடுப்பு சுவர் கற்கள் மீது அமர்ந்து கடலை ரசித்து சென்றனர்.

    விடுமுறை நாளில் நேற்று பொழுது போக்க குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் திரும்பி சென்றதால் கடலை, பொரி, ஐஸ் வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டனர்.

    • சேதுக்கரை கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
    • இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ் மாதங்களில் அனைத்து மாதங்களிலும் அமாவாசை வந்த நிலையிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தை, ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை புனிதமாக கருதுகின்றனர். இதன் காரணமாக இந்த அமாவாசை நாட்களில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். அன்றைய தினம் பிதுர்பூஜை செய்வ தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர், மூக்கையூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.

    ஆடி அமாவாசையான இன்று திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

    இதனால் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புனித நீராடிய பின் பக்தர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் சாமி கோயிலில் வழிபட்டனர்.

    பின்னர் 108 வைணவ தலங்களில் 44-வது திவ்யதேசமாக உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சாமி கோவிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

    இதனால் சேதுக்கரை தரிசனத்தை முடித்து வந்த பக்தர்கள் ஆதிஜெகநாத பெருமாள் சாமி கோவிலில்; நீண்ட வரிசையில் காத்திருந்து மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை பய பக்தியுடன் வாங்கி குடித்து சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் கடலில் புனித நீராடினர்.

    இதேபோல் ஆர்.எஸ்.மங்களம், தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து வந்து தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் பகுதியில் உள்ள கடலிலும் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • படகு போக்குவரத்து 1மணி நேரம் தாமதம்
    • குறைந்த அளவு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்ப ட்டது. வங்க கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி யது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்து உள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதி கொந்தளிப்பாக இருந்தது.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவ ளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாவும் கொந்தளி ப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்ட பத்துக்கு இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாலை முதலே படகுத் துறையில் வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமா ற்றம் அடைந்தனர்.

    அவர்கள் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து சென்றனர். இந்த நிலை யில் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது.

    ×