என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டதாரி"
- அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
- உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.
இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
- மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.
வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் வாகையடி மேலரத வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சத்யா (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து சத்யாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சத்யா கிடைக்கவில்லை. அவரது தாயார் மாரியம்மாள் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் டவர் உதவி யுடன் சத்யாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.
இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. ராணுவ வீரரான இவரது கணவர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், சித்தார்த்தா (வயது25) என்ற ஒரு மகனும் உள்ளனர்.2 மகள்களுக்கும் திருணம் செய்து கொடுத்த லோக நாயகி, தனது மகன் சித்தார்த்தாவுடன் வசித்து வந்தார்.
சித்தார்த்தா என்ஜினீயரிங் முடித்துவிட்டு தைவான் நாட்டில் எம்.எஸ்.படித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக படிப்புக்கேற்ற வேலையை தீவிரமாக தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று லோகநாயகி மட்டும் திருச்சியில் வசிக்கும் தனது சகோதரரை பார்க்க சென்று விட்டார். .
இதற்கிடையில் சம்பவத்தன்று திருச்சியில் இருந்த லோகநாயகி மகனின் செல்போனுக்கு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த லோகநாயகி ராஜபாளையத்தில் உள்ள தனது சகோதரி ராம திலகத்திடம் தகவல் தெரி வித்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனே அவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேக மடைந்த ராமதிலகம் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் சித்தார்த்தா தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்தார்த்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வாலிபரின் உடலை பார்த்து தாய், அவரது சகோதரிகள், கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலை கிடைக் காத விரக்தியில் சித்தார்த்தா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராசிபுரம்:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அரசாணை வழங்கிட வேண்டும்.
மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வேண்டும்.
2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 12 ஆயிரத்து 830 கிலோ மீட்டர் தூரத்தை 14 மாதத்தில் கடந்து வந்தார்
- இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி:
பீகார் மாநிலம் ஜெகானா பாத் மாவட்டத்தை சேர்ந்த வர் தீரஜ்குமார் (வயது 30). இவர் எம். பில். பட்டதாரி ஆவார். இவர் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாட்டை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து தனது தேசிய அளவிலான சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.
இவர் இமாச்சலப்பிர தேசம், அரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகார், உத்ரகாண்ட், சிக்கீம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக கடந்த ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்றுகன்னியாகுமரி வந்தார். இவர் 22 மாநிலங்கள் வழியாக 12 ஆயிரத்து830 கிலோ மீட்டர் தூரத்தை1வருடம்2 மாதம் 29 நாட்களில் கடந்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சைக்கிள் பயணத்தின் போது அந்தந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி வந்த அவருக்குகன்னியாகுமரி முக்கடல்சங்கமம்கடற்கரை யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூரா ட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், சினிமா நடிகர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ரூபின், ஷியாம் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரியில் படிக்கும் சகோதரியை பார்க்க தந்தையுடன் வந்த போது விபத்தில் பலியான சோகம்
- டிரைவர் மீது போலீசார் வழக்கு
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை இறச்சகுளம் சாஸ்தா நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் ஓட்டிச் சென்றார். பெரு விளையை சேர்ந்த பத்ம குமார் கண்டக்டராக பணி யாற்றினார். பஸ்சில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோர கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் மற்றும் ஆட்டோ மீது பஸ் அடுத்தடுத்து மோதியது.
இதையடுத்து பொது மக்கள் சிதறி ஓடினார்கள்.அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 46) தனது மகள் மகராசி (23)யுடன் வந்தார். அவர்கள் மீதும் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியது. இதில் அவர்கள் இருவ ரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகராசி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பு மகள் இறந்ததை பார்த்து ஜெயபால் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். மகராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயபாலின் 3-வது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பார்ப்ப தற்காக தனது 2-வது மகள் மகராசியுடன் ஜெயபால் வந்துள்ளார். அப்போது தான் விபத்தில் சிக்கி மகராசி பலியாகி உள்ளார்.
சகோதரியை பார்க்க வந்த இடத்தில் மகராசி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. பலியான மகராசியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
- மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- கொட்டாம்பட்டி பகுதியில் வேளாண் பட்டதாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுபாசாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோர்களாக மாற்ற ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் பெற இளங்கலை வேளாண், தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் பயின்றவராகவும், 21 வயதில் இருந்து 40 வயது வரை இருக்க வேண்டும். பயனாளி அரசு, தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.
மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க கூடாது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் தேர்வான வலைச்சேரி பட்டி, குன்னாரம் பட்டி, மேலவளவு, 18 சுக்காம்பட்டி, பதினெட்டாங்குடி, பூதமங்கலம் கிராம த்தினருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பீரோவில் இருந்த மணப்பெண்ணின் செயின், ஆரம், வளையல், மோதிரம் ஆகிய நகைகள் மாயமாகி இருந்தது.
- போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்தினர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்.
இவரது மகளுக்கு கடந்த 18ந்தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு காவலர்கள் திருமுருகன், மோகன், சிவசங்கரி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேலும் விசாரணையில் அவர் எம்சிஏ பட்டதாரியான வினிதா, மணப்பெண்ணுடன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.
பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந்தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார் அப்போது மணப்பெண் நகைகளை கழட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார்.
பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார்.
பின்னர் மன்னார்–குடிக்கும் சொந்த ஊர் திருத்துறை ப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நகைகளை கைப்பற்றி வினிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் முத்து ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
- இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது30). இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்த நிலையில் இதே ஊரில் உள்ள சித்தி அமுதா வீட்டில் வளர்ந்து வந்தார்.
எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள ஆனந்த் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சிலநாட்களுக்கு முன்பு காணாமல்போன ஆனந்த் குறித்து அவரது உறவினர் தமிழரசன் காடுபட்டி போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன பட்டதாரி வாலிபர் ஆனந்தை தேடிவந்தனர். நேற்று காலை சோழவந்தான் அருகே உள்ளவைகையாற்று தடுப்பணையில் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஆற்று நாணலில் சிக்கி ஆண் பிணம் மிதப்பதாக காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவஇடத்திற்கு போலீசார் சென்று சோழவந்தான் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றினர்.
முழுக்கை சட்டை மற்றும் கைலியுடன் அழகிய நிலையில் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த உடல் மன்னாடிமங்கலத்தை சேர்ந்த காணாமல் போன பட்டதாரி வாலிபர் ஆனந்த் என்பது தெரியவந்தது.
ஆனந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்