search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீப்"

    • இந்திய சந்தையில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
    • இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4x4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், பின்புற பம்ப்பரில் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், 360 டிகிரி சரவுண்ட் வியூ, டிரௌசி டிரைவர் டிடெக்‌ஷன், 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் occupant டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    • ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    ஜீப் நிறுவனம் கடந்த மாத துவக்கத்தில் புதிய அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இதன் பவர்டிரெயின் மற்றும் ரேன்ஜ் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் புதிய ஜீப் அவெஞ்சர் மாடல் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் STLA சிறிய பிளாட்பார்ம் பயன்படுத்திய முதல் கார் என்ற பெருமையை அவெஞ்சர் பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய அவெஞ்சர் மாடலில் 54 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும். எனினும், பயணிக்கும் நிலைகளுக்கு ஏற்ப இந்த கார் அதிகபட்சம் 550 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    புதிய ஜீப் அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 100 கிலோவாட் கேபிள் கொண்டு 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 24 நிநிடங்களே ஆகும். இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 154 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த கார் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இத்துடன் ஜீப் நிறுவனத்தின் செலக்-டிரெயின் ஆப்-ரோடு மோட்கள் (நார்மல், இகோ, ஸ்போர்ட், ஸ்னோ, மட் மற்றும் ஸ்னோ) உள்ளிட்டவை அவெஞ்சர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன் பின் எதிர்காலத்தில் இந்திய சந்தையிலும இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
    • இந்த கார் சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் செரோக்கி மாடல் அம்சங்கள் மற்றும் சில விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.


    கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி L என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பானரோமிக் சன்ரூப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    Photo Courtesy: Motor Beam

    • ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.

    முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.


    முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.

    முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


    இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.

    விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.


    இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ×