search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223891"

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சவேரியார் ஆலயம் - செட்டிகுளம் சாலை; கோட்டார் சாலை இருவழி பாதையாக மாற்றம்
    • செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச்ரோட் டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலையில் பாதாள சாக்கடை பணி கள் நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சாலை மூடப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பீச்ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதான ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.

    நேற்று முதல் போக்கு வரத்து மாற்றப்பட்டுள்ள நிலையில் ராமன்புதூர் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அதற்கு மாற்றாக பஸ்களை எப்படி இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை ஒருவழிப்பாதையாக இருந்த நிலையில் இன்று முதல் அந்த சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அனைத்து பஸ்களும் நாராயணகுரு மண்டபத்தில் இருந்து கம்பளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செட்டிகுளம் வந்தது.

    இதே போல செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் ஆலயம் செல்லும் சாலை ஒரு வழி பாதையாக இருந்த நிலையில் அந்த சாலையும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் செட்டிகுள த்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றப் பட்டதால் சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, நாராயண குரு மண்டபம் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த 2 சாலைகளும் இரு வழியாக சாலையாக மாற்றப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகருக்கு வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமின்றி எளிதாக வந்தனர். வழக்கமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து பீச்ரோடு வழியாக சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது பாதாள சாக்கடை வேலை நடைபெற்று வரும் நிலையில் நாராயண குரு மண்டபத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வழியாக பஸ்கள் மற்றும் 4 சக்கர, இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றி செல்லாமல் நேராக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் வாகனங்களை இதே போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நுகர்வோர் அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரி வித்துள்ளது.

    இந்த இரு சாலைகளும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி சங்க தலைவர் ஸ்ரீராம் கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • கலெக்டர்-மேயர் வழங்கினர்
    • இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நாகர்கோவில்:

    பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

    20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
    • பொருட்களின் அளவு சரியாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ரேசன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேசன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அரிசி, பருப்பு, சீனி, மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டார்.

    மேலும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தையும் கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து புதுகுடியிருப்பில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற கலெக்டர் ஸ்ரீதர் அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் அளவு சரியாக வழங்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பொருட்களின் இருப்பு விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அணில் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ
    • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.பெண்கள் பலரும் இந்த வாகன சோதனையில் சிக்கி னார்கள். குடும்பத்தோடு வந்தவர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்து போலீ சாரிடம் மாட்டிக் கொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை தடுத்த போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவ ணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தனர். அப்போது போலீசார் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறி அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார்.

    நடு ரோட்டில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க செய்தது. மேலும் வாகன சோதனையில் சிக்கியிருந்த பொதுமக்கள் பலரும் வாலிபரின் இந்த செயலை செல்போனில் படம் பிடித்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.போலீசாரை வாலிபர் வசைபாடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
    • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணை யர் மணிகண்ட பிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    குமரி மாவட்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதரின் அறிவு ரையின்படி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கல்லூரியில் கொத்த டிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிராமிய கலைஞர் பழனியாப்பிள்ளை குழுவி னர் கலைநிகழ்ச்சிகள் மூலம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் வடசேரி பஸ் நிலையம், செண்பக ராமன்புதூர், ஆரல்வாய் மொழி அரசு பள்ளி மற்றும் தோவாளை பகுதி களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சி யில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஈவ்லின் சர்மி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலு மாக தடை செய்யப்பட் டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்த டிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே, தொழிலாளர் களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்
    • இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோ வில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

    மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்காத குப்பைகளை மட்டும் குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகைமண்டலங்கள் வந்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

    பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து வரும் துர்நாற்றத் தின் காரணமாகவும் புகை மண்டலத்தின் காரணமாக வும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகுள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
    • தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

    இவர் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் லாரி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் மாரியப்பன் ஒர்க் ஷாப்பை திறந்து பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்து இரவு 7.45 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் அவரது ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாரியப்பன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்க ளும் அங்கு நின்ற லாரியும் தீயில் எரிந்தது.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணமக்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வாழ்த்து
    • அல்பிரியஸ் லாரன்ஸ் ஜோக்கும் மெர்லின் அஜய்ஷா என்ற கயல்விழிக்கும் திருமணம்

    நாகர்கோவில்:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணை ப்பாளர் சீமான் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ குடும்ப திருமண விழா ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள லேன்ஸ் மேரேஜ் ஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது.

    அமராவதி விளை இருதயராஜ்-ஆஸ்டின்ஸ் மேரிலியோ தம்பதியின் மகன் அல்பிரியஸ் லாரன்ஸ் ஜோக்கும், காட்டு சூரை சவரிராஜ் என்ற தமிழ்செல்வன்-லாரன்ஸ் மேரி என்ற அன்பரசி தம்பதியரின் மகள் மெர்லின் அஜய்ஷா என்ற கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது.

    திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணை ப்பாளர் சீமான், மதுரை உயர்நீதி மன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ, நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் வைரவன், நாம் தமிழர் தனுஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் அரசியல் பிரமு கர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    வள்ளியூர்-நாங்குநேரி இடையே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தை சேர்ந்தவர் சுதர்வேல் (வயது 37) கார் டிரைவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுதர்வேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுதர்வேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டவாளத்தில் பிண மாக கிடந்த சுதர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுேவாம்
    • தமிழ்நாட்டில் அண்ணாமலையால் சுதந்திரமாக செயல்பட முடியாது

    நாகர்கோவில்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாயை தோற்றம் ஆகும். மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம். நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை .ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள்.கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமலஹாசன் காங்கிரசுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது.மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.தற்பொழுது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.அது வீண் செலவாகும்.

    சிவாஜி சிலை கண்ணகி சிலை மாற்றப்பட்டது. அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது சிலை வைத்தால் தூக்கி மாற்றப்படும். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது. கருணாநிதி சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்காரும் தான். ஆர்எஸ்எஸ் தடையை நீக்க உதவியதற்காக வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டையில் குடிநீரில் மனிதக் கழிவு களை கலந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடன் மாடல் ஆட்சி என்பது வேடிக்கையானது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு எதை செய்து உள்ளார்கள். மலைகள் இல்லாவிட்டால் மழை இல்லாமல் சென்று விடும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மலைகளை கை வைக்க முடியாது. வளங்களை பாதுகாப்போம். தமிழகத்தில் பாரதிய ஜனதா செயல்படவில்லை. அண்ணாமலையால் தமிழ்நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியாது.

    இலங்கையில் 12 மீனவர்களை சங்கிலியால் கட்டி இழுத்து செல்லப் பட்டனர். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்பட எந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.நாம் தமிழர் கட்சி மட்டுமே கண்ட னம் தெரிவித்தது.மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வட மாநிலத்தினர் 2 கோடி பேர் தமிழகத்திற்குள் வந்துள்ளனர்.தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள்.அதை சீரமைப்பதை விட்டுவிட்டு கலைஞருக்கு சிலை வைக்க பணம் செலவு செய்கிறார்கள்.

    பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அந்த பணங்களை செலவு செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை சேமித்து வைக்க குளிர் பான அரங்குகளை கட்டும் அரசு டெல்டா மாவட்டங்களில் நெல்களை பாதுகாக்க தவறிவிட்டது. பாரதிய ஜனதா தற்போது வெளியிட்ட பட்ஜெட் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் அமலாக்கத்துறை, வருவாய் துறை உள்பட பல்வேறு துறைகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் இன்று தொடங்கியது
    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவி களுக்கான போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று 6-ந்தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று போட்டியில் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி, ஆக்கி போட்டி, வாலிபால் போட்டி, டேபிள் டென்னிஸ் போட்டி, கால்பந்து போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கபடி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார். மாவட்ட விளை யாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி வரை விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    ×