என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223891"
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் செட்டி குளம் சகோதரர் தெருவை சேர்ந்தவர் ஆதி லிங்கம் (வயது 72), வில்லுப்பாட்டு கலைஞர். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் ஆதி லிங்கத்தின் குடும்பத்தினர் அவர்களது குடும்ப கோவிலுக்கு சென்றனர்.
வீட்டில் ஆதிலிங்கம் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஆதிலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ஆதிலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் சீருடையை மாற்றிவிட்டு வேறு உடையில் தப்பிசென்ற வாலிபர்
- சி.சி.டி.வி. காட்சியில் உருவம் சிக்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவில் தெற்கு திருப்பதி சாரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பெர்னாட். இவர் நாகர்கோவில்-நெல்லை நான்கு வழிச்சாலையில் திருப்பதி சாரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பெர்னாட் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தயாரானார். அப்போது போலீஸ் சீருடை அணிந்து வந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார். தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் காலியாகி விட்டதாகவும் கூறினார்.
பெர்னாட்டிடம் மோட்டார் சைக்கிளை தந்தாள் பெட்ரோல் வாங்கிவிட்டு வந்து விடுவதாக தெரிவித்தார் அந்த நபர். போலீஸ் சீருடை அணிந்திருந்ததால் பெர்னாட் தனது மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்து அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் வரவில்லை.
இதையடுத்து வடசேரி போலீசில் புகார் செய்தார்.வடசேரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் சீருடையில் சென்ற வாலிபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.
பெர்னாட்டின் மோட்டார் சைக்கிள் எடுத்துச்சென்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.மேலும் வடசேரி, நாக்கால் மடம், திருப்பதிசாரம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வாலிபர் ஒருவர் சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. போலீஸ் சீருடையில் யாரும் செல்லவில்லை. எனவே அந்த வாலிபர் போலீஸ் உடையை மாற்றி விட்டு சாதாரண உடையில் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். எனவே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில், வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் நாளை (21-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதி புரம், அனந்த நாடார்குடி. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தடிக்கா ரன்கோணம், மாறாமலை, பால்குளம், அவ்வை யாரம்மன் கோவில், கனகமூலம் குடியிருப்பு, சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், அருமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் அரவிந்த் ஆலோசனை
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.
குடியரசு தின விழா விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உடன் இருந்தார்.
- டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் குத்தாலம் பிள்ளை (வயது 48). இவரது மகன் சிவகார்த்திகேயன் (19).
இவர் வாடகை கார் மற்றும் வேன் ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பினுராஜ் (24). இவர்கள் இருவரும் நேற்று மாலை ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த னர்.மோட்டார் சைக்கிளை சிவகார்த்திகேயன் ஓட்டினார்.
நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் துணி எடுத்துவிட்டு ஆசாரிப் பள்ளம் பகுதியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிவகார்த்திகேயன், பினு ராஜ் இருவரும் படுகா யம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவ கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பினுராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். மேல் சிகிச் சைக்காக தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த சிவகார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிவகார்த்திகேயன் மோட்டார் சைக்கிளில் கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த வேன் மீது கண்ணி மைக்கும் நேரத்தில் மோதி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பலியான சிவகார்த்திகேயன் மீது போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நண்ப ரை பார்க்க சென்ற இடத் தில் விபத்தில் சிக்கி சிவ கார்த்திகேயன் பலியான சம்பவம் அவரது உறவி னர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
பலியான சிவகார்த்தி கேயன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத் திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள், உறவினர்கள் அங்கே திரண்டு இருந்தனர்.
- 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது.
இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது.
இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தே ரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச் சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.
10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழி பாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
- 3 வாலிபர்கள் கைது
- 4 பேர் தலைமறைவு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கைது செய்பவர்களை போலீசார் குண்டச்சட்டத்தின் கீழ் ஜெயலில் அடைத்து வருகின்றனர்.
இதையடுத்து தற்போது குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆலம்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் அவர்களிடம் சோதனை நடத்திய போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவரிடம் விசாரித்த போது கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த சொரிமுத்து (வயது 21) கோட்டாரை சேர்ந்த தனுஷ் ஆலம்பாறை அழகர் கோணம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (29) என்பது தெரிய வந்தது.
போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோட்டார், வடசேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கஞ்சா பதுக்கல் வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கோட்டார் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் 45 குணால், மணி, சக்தி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். தலைமறைவாக 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
- மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
- தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.
முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.
நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
- கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் இருந்து 21 பெட்டிகளில் 1326 டன் புழுங்கல் அரிசி இன்று நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மாணவிகளின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
- விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கலை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி துறை வாரியாக மாணவிகள் பொங்கலிட்டனர். அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு உறியடித்தல், வடமிழுத்தல், முறுக்கு கடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாணவி களின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி செயலர் அருட்சகோதரி மேரி ஹில்டா, முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தி வழங்கினர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.
- நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
- இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கோசல்ராம், கவிதா ராமமூர்த்தி. செல்வம், ஜான்சி, ரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- இன்று 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த முகாமில் ஏற்க னவே போலீஸ் நிலை யத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது மக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.
முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
மேலும் மனு அளிப்ப தற்காக மாற்றுத்திறனாளி களும் வந்திருந்தனர். அவர்களை போலீசார் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்று லிப்ட் மூலமாக கூட்ட ரங்கிற்கு கொண்டு சென்ற னர். அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கினார். அதோடு அவர்கள் அருகில் அமர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்