search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223934"

    • முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது.
    • இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

    கொழும்பு :

    கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியும் இலங்கையை பாதித்து உள்ளதால், நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக ஸ்தம்பித்து உள்ளது. இதனால் சர்வேதச பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை 'வேர்ல்டுபேக்கர்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணி இடத்தை பிடித்து உள்ளது.

    குறிப்பாக முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான கலாசாரம் பவுத்தமாக இருக்கும் நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால், பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டு உள்ளது.

    இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. அந்த இணையதளத்தின் வரிசைப்படுத்தலை சுட்டிக்காட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    • கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது.
    • கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

    கொழும்பு :

    கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

    கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

    சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவது குறிப்பிட்டத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான, சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

    • இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்கள் அருகில் உள்ள குகை கோயிலுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். திருமலாபுரம் பகுதியில் இரு மையங்கள் செயல்படுகிறது.

    மையத்திற்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்றுள்ள குகை கோவில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகே உள்ள சிவன் குகை கோவிலுக்கு இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குகைக் கோவில் குறித்து விளக்கப்பட்டது.

    இந்த பகுதியில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள பகுதிகளையும் மாணவர்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    • இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினரில் 45.5 சதவீதத்தினர் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
    • தாஜ்மகாலுக்கு வந்தவர்கள் 12.21 சதவீதத்தினர் ஆவார்கள்.

    சொர்க்கமே என்றாலும்

    அது நம்மூரைப் போல வருமா?

    - 'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தில் கங்கை அமரன் எழுதி இளையராஜா, எஸ்.ஜானகி பாடிய பாடலைக் கேட்கிறபோது, நம்முள் சிலிர்க்குமே அது உண்மைதான்.

    ஆமாம், தாஜ்மகால் என்ற உலக அதிசயத்துடன் ஒப்பிடுகையில் நம்ம ஊரு மாமல்லபுரம் அதிக பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி அசத்தி இருக்கிறது என்றால் நம்புகிறீர்களா?

    உண்மைதான்.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் சுற்றுலா தலங்கள் எல்லாம் 'அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல' ஆள் அரவமற்றுப்போயின.

    ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 2021-22 நிதி ஆண்டில் இந்திய சுற்றுலா தலங்களைப் பார்க்க உலகமெங்கும் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வந்திருக்கிறார்கள்.

    அதுவும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி பார்க்கிற நினைவுச்சின்னங்களில் தாஜ்மகாலை நமது மாமல்லபுரம் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது என்ற தகவல் மனதுக்குள் சாரலாகிறது.

    இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள், பல சுவாரசியங்களை அள்ளித்தந்திருக்கின்றன.

    அதில் இருந்து சில துளிகள்:-

    * ஓராண்டில் சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற மாமல்லபுரம் வந்து அங்குள்ள குடைவரைக்கோவில்கள், ரதங்கள், சிற்பங்கள் என பார்த்து ரசித்துச் சென்றுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 ஆகும்.

    * இதே காலகட்டத்தில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் வீற்றிருக்கும் காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகாலை கண்டு களித்துச் சென்ற வெளிநாட்டவரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 922.

    * முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் இன்னும் 4 நினைவுச்சின்னங்கள் உண்டு. அவை:-

    • சாளுவன்குப்பம் முருகன் கோவில் (மாமல்லபுரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புலி முகத் தோற்றம் கொண்ட இந்தக் கோவில் 2005-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டதாகும்.) இங்கு 25 ஆயிரத்து 579 வெளிநாட்டினர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.

    • செஞ்சிக்கோட்டை. இது இந்தியாவில் உள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது என மராட்டிய மாமன்னர் சிவாஜியினால் பாராட்டப்பட்டதாகும். இங்கு 10 ஆயிரத்து 483 வெளிநாட்டினர் வந்து வியந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள்.

    • திருமயம் மலைக்கோட்டை மியூசியம். 8,422 வெளிநாட்டினர் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

    • சித்தன்னவாசல் சமணர்கள் குகைக்கோவில். (புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது. ) இங்கு 5,432 பேர் வந்துள்ளனர்.

    இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினரில் 45.5 சதவீதத்தினர் மாமல்லபுரம் வந்துள்ளனர். தாஜ்மகாலுக்கு வந்தவர்கள் 12.21 சதவீதத்தினர் ஆவார்கள்.

    இந்தியாவின் கலாசார தலைநகரம் தமிழ்நாடு என்பதற்கு இந்த தரவுகளே சான்றாக அமையும்.

    • ஆன்மீக சுற்றுலாவாக குஜராத்தை சேர்ந்த மொபட்லால் சிவராம் பாய் (வயது 67) என்பவர் தனது உறவினர்களுடன் வந்தார்.
    • திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் சுவாமியை தரிசிப்பதற்காக திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்தனர்.

    திருச்சி,

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 960 சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் அடிப்படையில் அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ெரயிலில் ஆன்மீக சுற்றுலாவாக புறப்பட்டனர். இதில் குஜராத்தை சேர்ந்த மொபட்லால் சிவராம் பாய் (வயது 67) என்பவரும் தனது உறவினர்களுடன் வந்தார்.

    இதில் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்கள் அதிகமாக எண்ணிக்கையில் இருந்தனர். சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தரினத்ததை முடித்துக்கொண்ட அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் சுவாமியை தரிசிப்பதற்காக திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்தனர். பின்னர் அந்த சிறப்பு ெரயில் பெட்டி சுத்தம் செய்யும் யார்டில் நிறுத்தப்பட்டது.

    அப்போது மொபட்லால் மட்டும் வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. சக பயணிகள் அவரை தட்டி எழுப்பும் என்றபோது எந்த பேச்சு மூச்சும் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் ெரயில்வே டாக்டர் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருச்சி ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும் இதுதொடர்பாக தகவல் அளித்துள்ளனர். ஆன்மீக சுற்றுலா வந்தவர் நிறைவடையும் முன்னரே மரணம் அடைந்தது அவருடன் வந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
    • பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    அவர்கள் வேன், கார், பஸ் என பல வாகனங்களில் வருவதால் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தில் சுற்றுலா பயணி களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் புறப்பட்டது.

    இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பள்ளி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில்2வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. பள்ளி வாகன டிரைவர் பாக்கியராஜ் மற்றும் சுற்றுலா பஸ் டிரைவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும்.
    • வெளி இடங்களுக்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது.

    பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும்.

    குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும். அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

    குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்:

    குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம்.

    அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.

    உற்சாகத்தை தூண்டும்:

    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும்.

    தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

    • rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    மும்பை :

    மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை முடிவுக்கு வருவதை தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் பயணிகள் வருகை தரலாம்.

    கவர்னர் மாளிகையைில் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரத்தின் திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தவிர தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்ததேதி வரை கவர்னர் மாளிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

    கவர்னர் மாளிகையில் சூரிய உதயம், தேவி கோவில், பதுங்கு குழிகள், புரட்சியாளர்களின் கேலரி, தர்பார் அரங்கு, ஜல் விகார் மற்றும் மராட்டிய மாநிலத்தின் உருவாக்கத்தின் நினைவகம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • திரிவேணி சங்கமம் கடற்கரை களைகட்டியது

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம்தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் அங்கு பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பின்னர் காலை10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து10மணிக்கு பிறகுதான் படகு போக்குவரத்து தொடங்கியது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்த ர்மண்டபத்தை மட்டும் பார்வையிட்டுவந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள்வி வேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர்.

    ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
    • இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.

    இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர்.
    • இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.

    சேலம்:

    காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதையும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகுகள் வழியாக சீறிப்பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. அந்த வகையில் மேட்டூர் அணை பூங்காவுக்கு 20 ஆயிரத்து 656 பேரும், அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 2694 பேரும் வந்து சென்றனர். இதனால் நுழைவு கட்டணம் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைத்தது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான போலீசார், அணை மற்றும் பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×