search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் இன்றி விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடிதொடங்கிஉள்ளது. விளைச்சல் அதிகரித்து அதிக வருமான தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும் போது தமிழ்நாடுஅரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான நிலக்கடலை விதைகளை வாங்கவேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை வாங்கும் போது விதைக்கான விற்பனை ரசீதை கேட்டுப் பெறவேண்டும்.

    மேலும், தாங்கள் வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கவேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள் விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவாதியான விதைகளை விற்பனை செய்தாலோ, ரசீதுவழங்காமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431 -2420587 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 28 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இதன்அருகே மது பாட்டில்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிலுவை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடை பார் அருகே ஒருவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்பனைசெய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர்துரைசாமி (வயது 52) என்றும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 28 குவாட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

    உடுமலை

    உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 37) என தெரியவந்தது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

    • 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும்,

    திருச்செங்கோடு:

    69-ஆவது அனைத்திந்தி ய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு நிறுவன தயாரிப்பு பொருட்கள், ஆவின் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தயாரிப்பு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விற்பனை மேளாவினை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் விற்பனை மேளாவினைப் பார்வையிட்டார்.

    இந்த விற்பனை மேளா வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் எனவும், பொதுமக்கள் விற்பனை மேளா நடைபெறும் நாட்களில் பொருட்களைப் பெற்று பயனடையுமாறும் கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

    • கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-

    மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.

    வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

     காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 56 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 36 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்து நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 54 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.

    • அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
    • இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.

    திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.

    இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

    ×