search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

    ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழ வர்சந்தைக்கு புதுச்சத்திரம், உடுப்பம், அகரம் மோகனூர் கங்காநாயக்கன்பட்டி, பரளி, ஆரியூர், பாலப்பட்டி, திண்டமங்கலம், பெரியா கவுண்டம்மாளையம், மின்னாள்பள்ளி, பொட்ட ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் விவரம் வருமாறு-

    பீன்ஸ் கிலோ ரூ. 76, பீட்ரூட் ரூ.48 கேரட் ரூ.76, பாகற்காய் ரூ.46 புடலைங்காய் ரூ.20, முருங்கைகாய் ரூ.30 வெண்டை ரூ. 20, முள்ளங்கி ரூ. 16 , பீர்க்கிங்காய் ரூ. 28, சின்ன வெங்காயம் ரூ.18, பெரிய வெங்காயம் ரூ.27, கீரை கட்டு ரூ.10, சுரைக்காய் ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, தேங்காய் ரூ. 27, கொய்யாபழம் ரூ .35, , பச்சைமிளகாய் ரூ. 32 -க்கு விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளை சுமார் 5000 பேர் வாங்கி சென்றனர். உழவர் சந்தையில் 27 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மல்லிகா தெரிவித்தார்.

    • வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.

    திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது. அதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது. அஞ்சலகங்களில் தலா 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகளின் யோசனைப்படி தையல் தொழில் செய்து வரும் மகளிர் குழுவினர் தேசியக்கொடி தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளனர்.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வரும் 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் கொடுத்து தலா 2,000 தேசியக்கொடிகள் வீதம், 20 ஆயிரம் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- தேசிய அளவில், வீடுகள் தோறும் தேசியக்கொடி கட்டும் மக்கள் இயக்கம், விமரிசையாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டுப்பற்றை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் துணிகள் கொள்முதல் செய்து, 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கொடி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக மகளிர் திட்ட விற்பனை மையம் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரையில் தேசியக்கொடி விற்பனையாகி வருகிறது.
    • பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

    மதுரை

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பேசுகையில், வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய க்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேன்சி ஸ்டோர், மளிகை கடைகள், டிபா ர்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பொது இடங்களில் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. மதுரையில் 50-க்கும் மேற்பட்ட ஆப்செட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தேசிய கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தையல் கடைகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து உள்ளது.

    மதுரை கீழஆவணி மூல வீதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறுகையில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் தேசிய கொடி விற்பனை அதிகமாக இருக்கும். அரசு நிகழ்ச்சி உள்ளிட்ட தினங்களில் தேசியக்கொடி விற்பனை ஓரளவு இருக்கும். பிரதமர் மோடி தற்போது வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகாசி, திருப்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தேசியக்கொடிக்கு கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளோம். 8 செமீ. உயரம்-12 செ.மீ. நீளம் முதல், 48-க்கு 72 செ.மீ. வரை பல்வேறு அளவுகளில் காட்டன் தேசியக்கொடி உள்ளது. இவற்றை ரூ.30 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம்.

    பாலியஸ்டர் கொடி 18க்கு 27 செ.மீ-ரூ.95, 24க்கு 36 செ.மீ- ரூ.140க்கு விற்கப்படுகிறது. சட்டை பாக்கெட்டில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடி 120 எண்ணம்-ரூ.100, சாதாரண பாக்கெட் கொடிகள் 5000 எண்ணம்-ரூ.500க்கு விற்கிறோம்.

    வாகனங்களின் முன்புறம் பறக்கவிடும் கொடி, விசிறி, தொப்பி என்று பல்வேறு வகைகளில் தேசிய கொடிகள் உள்ளன. வீடுகளில் ஏற்ற 8-க்கு 12 செ.மீ., அல்லது 14க்கு 21 செ.மீ., அளவுள்ள தேசிய கொடி பொருத்தமாக இருக்கும் என்றனர்.

    மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஆர்வமாக உள்ளதால், பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.77குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 70தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.86-க்கும், குறைந்த விலையாக ரூ.21.29-க்கும், சராசரி விலையாக ரூ.24.36-க்கும் என ரூ.87ஆயிரத்து 109-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 234.87 குவிண்டால் எடை கொண்ட 502 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ84.39-க்கும், குறைந்த விலையாக ரூ82.20-க்கும் சராசரி விலையாக ரூ83 .76-க்கும் விற்பனையானது.

    இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.40-க்கும், குறைந்த விலையாக ரூ.66.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.99-க்கும் என ரூ.18லட்சத்து 86ஆயிரத்து 644-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 81.98½ குவிண்டால் எடை கொண்ட254 மூட்டை நிலக் கடலைக்காய் விற்ப னைக்கு வந்தது. இதில் நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ69.40-க்கும், குறைந்த விலையாகரூ 62.30-க்கும் சராசரி விலையாக ரூ67. 60க்கும் என 5 லட்சத்து39 ஆயிரத்து357 -க்கு விற்ப னையானது.

    இந்த வாரம் சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    • விவசாயிகள் மட்டு மின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர்.
    • இதனால், வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி,பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை ஆகிய மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தைமுக்கிய தொழிலாக கொண்டுள்ள னர். விவசாயிகள் மட்டு மின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர்.

    வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கட்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

    பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வருகின்றன. தீபாவளி, பொங்கல்,

    ஆடி-18, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும், இந்த சந்தையில் கூடுகின்றனர்.

    இதனால், வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில்,

    ஆடி-18 பண்டிகையை, அசைவ விருந்தோடு, பொதுமக்கள் வெகு விமரி சையாக கொண்டாடுவது வழக்கம்.

    நாளை மறுநாள்( புதன்கிழமை) ஆடி-18 பண்டிகை என்பதால், இன்று காலை பேளூரில் கூடிய ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் கொள்முதல் செய்ய பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர்.

    நூற்றுக்கணக்கான விவசாயிகளும் வியாபாரி களும் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்த னர். ஆடிப் பண்டிகை விருந்துக்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை கொள்முதல் செய்ததால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு ஆட்டிற்கு ரூ.ஆயிரம் வரை விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.9,000 வரை விலைபோன ஒரு ஆட்டுக்கிடா இந்த வாரம் ரூ.10,000 வரை விலை போனது. கூடுதல் விலை கொடுத்து இறைச்சி வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.

    • கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

    நாமக்கல், ஆக.1-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை யும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

    கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்கா ரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

    சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்ப டுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதி.

    வடகிழக்கு பருவ காலங்களில் நிரம்பி வழியும் இந்த அணைக்கு கல்லுப்புள்ளம், வரட்டு பள்ளம், கும்பரபாணி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்து சேரும்.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் இருப்பு வைத்து வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து மீன்வளத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக கூட்டுறவு மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெண்டர் மூலம் மீன் பிடிக்கும் அனுமதி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு மீன் பிடிக்கும் குத்தகைக்காக 18 லட்சம் ரூபாய் கூட்டுறவு சங்க மூலம் அரசுக்கு செலுத்தப்பட்டு ள்ளது.

    கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதால், மீன்பிடி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அணையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்க–ளுக்கு ஒரு பங்கு, கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பங்கு என பிரித்து கொடுக்கப்படுகிறது.

    அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் பங்கு மீன்கள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை சூழ்நிலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், அணையில் பிடிக்கும் மீன்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பிடிக்கும் ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக பங்கு மீன்கள் வழங்க அரசாணை எதுவும் கிடையாது.

    இந்தச் சூழ்நிலையில் அணையில் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்து கிலோ 100 ரூபாய்க்கும், பங்கு மீன்கள் என்ற முறையில் 50 சதவீத தொழி லாளர்களிடம் கொடுத்து ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    மேலும் மீன் வாங்கும் பொது மக்களுக்கு முறையான ரசீது வழங்குவதில்லை. இது மட்டுமின்றி மீன் பிடித்து விற்பனை செய்யும் வரை மீன்வளத்துறை அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர் உடன் இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதில்லை.

    இதனால் டெண்டர் எடுத்தவர்கள் எவ்வளவு மீன் பிடித்தார்கள்? விற்பனை செய்தார்கள்? என்ற கணக்கும் கேள்விக்குறியாக உள்ளது.

    இங்கு தன்னிச்சையாக செயல்படும் சில உறுப்பி னர்கள் நாள்தோறும் மீன்வளத்துறை அதிகாரி–களுக்கு தாங்கள் பிடித்ததா–கவும் விற்பனை செய்ததா–கவும் அனுப்பும் கணக்கு மட்டுமே பதிவு செய்யப்படு–கிறது. இதனால் இந்த அணையின் மூலம் விற்பனை செய்யப்படும் மீன் வர்த்தகத்தில் பல லட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி ஒரு கிலோ தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது .
    • ஆடி மாதம் என்பதால் முகூர்த்தம் இல்லாததால் தேவை குறைந்ததாலும் இந்த விலை குறைந்துள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி ஒரு கிலோ தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது . கடந்த மாதத்தை விட வரத்து அதிகரித்துள்ளதாvvலும், ஆடி மாதம் என்பதால் முகூர்த்தம் இல்லாததால் தேவை குறைந்ததாலும் இந்த விலை குறைந்துள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். மற்ற காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு வருமாறு-

    உருளைக் கிழங்கு ஒரு கிலோ ரூ.34, சின்ன வெங்காயம் 20, பெரிய வெங்காயம் 26, மிளகாய் 46, கத்திரி 24, வெண்டைக்காய் 16, முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 28, சுைரக்காய் 14, புடலங்காய் 22, பாகற்காய் 36, தேங்காய் 25, முள்ளங்கி 14, பீன்ஸ் 58, அவரை 34, கேரட் 70, மாங்காய் 40, மாம்பழம் 60, வாழைப்பழம் 20, கீரைகள் 18, பப்பாளி 24, கொய்யா கிலோ ரூ.35-க்கும் விற்பனையாகிறது. 

    • 87 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 473 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.70.89க்கும், குறைந்தபட்சம் ரூ.56.59க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்திவிதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று வியாழக்கிழமை 87 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 473 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.70.89க்கும், குறைந்தபட்சம் ரூ.56.59க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 64ஆயிரத்து 805க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை வாரந்தோறும் புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் ஆய்வு நடந்தது.
    • 22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    திருப்பூர் :

    தொழிலாளர் ஆணையாளர் டாக்டர் அதுல் ஆனந்த் அறிவுரைப்படியும், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தலின்படியும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் பொட்டலப்பொருட்கள் விதிகளை மீறியது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் ஆய்வு நடந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகளை மீறப்பட்டுள்ளதா என்று கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 5 விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி, ஒரு பொருள் விற்பனை செய்யப்படும் போது பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப்பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவர் முழு முகவரி, பொருளின் பொது பெயர், தயாரிப்பாளர், பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி, வரியுடன் விற்பனை விலை ஆகியவை அச்சிடப்பட வேண்டும். இந்த விவரங்களை அச்சிடாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • விலை கிலோ ரூ. 81.10 முதல் ரூ. 93.20 வரை விற்பனையானது.
    • மூட்டை கொப்பரை வரத்து இருந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10.35 டன் வேளாண் விளைபொருள்கள் ச விற்பனையாயின.இந்த விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமைதோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 9 மூட்டைகள் சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 293 கிலோ. விலை கிலோ ரூ. 81.10 முதல் ரூ. 93.20 வரை விற்பனையானது.

    15,595 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 6,947 கிலோ. விலை கிலோ ரூ.20.35 முதல் ரூ.25.85 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.25.25. 80 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 3,083 கிலோ. விலை கிலோ ரூ.61.30 முதல் ரூ.84.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.35. ஏலத்தில் மொத்தம் 96 விவசாயிகள், 19 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத்தொகை ரூ.4.50 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    ×