search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ஆடு வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடி வியாபாரம்
    • இடைத்தரகர்கள் இல்லாததால் மகிழ்ச்சி

    கிருஷ்ணராயபுரம்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப் பட்டி, அந்தரப்பட்டி, கிராமங்களில் விவ சாயிகள் வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த வளர்ப்பு ஆடுகளை வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.இதனால் விவசாயிகள் அலைச்சல் இல்லாமல் ஆடுகள் விற்று வருகின்றனர். தற்போது, 5 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று, 4,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் நல்ல தரத்துடன் ஆடுகள் கிடைப்பதால் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.




    • ளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8,040 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.7,600 முதல் ரூ. 8,799 வரையும், கொட்டுப் பருத்தி ரூ. 4,399 முதல் ரூ. 5,999 வரையும் விலை போனது.

    மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் முகவர்கள் ஏலத்தில் பங்கேற்று விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு;

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரிகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு பால், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் வீடுகளில் பெரும்பாலா னவர்கள் பிரிட்ஜில் தண்ணீர் வைத்து பருகி வருகின்றனர்.

    அதேபோன்று மண்பானையி லும் தண்ணீர் வைத்து குடிக்க தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இது குறித்து மண்பானை விற்பனை செய்வோர் கூறியதாவது:-

    தரமான மண்பானை செய்வதற்காக மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறை அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    சாதாரண மண் பானை 350 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட மண்பானை ரூ. 450-க்கும் விற்பனை ஆகிறது. உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள் அலுவலக ங்களு க்காக வாங்கி செல்கின்றனர்.

    மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி பொதுமக்கள் விரும்பி குடித்து, சாப்பிட்டு வருகின்றனர்.
    • ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சு ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னரே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து, சாப்பிட்டு வருகின்றனர்.

    இவற்றில் வெள்ளரி பிஞ்சு விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.உடலுக்கு குளிர்ச்சியும் அதே வேளையில் மருத்துவ குணங்கள் வாய்ந்த வெள்ளரிப்பிஞ்சுவை ஏராளமானார் வாங்கி செல்கின்றனர்.

    ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சு ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. தனி பெரிய அளவிலான வெள்ளரிப்பிஞ்சு ரூ.15 வரை விற்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளையும் வெள்ளரிப்பிஞ்சுகள் அறுவடை செய்யப்பட்டு தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தற்போது அவற்றின் விற்பனை மும்முரமாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

    • தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலை–கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்

    (வயது 38) என்பதும், கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதேபோல் வெவ்வேறு இடங்களில் கள் விற்பனை செய்த துலுக்கம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (36), ராகவன் (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25 முதல் 30வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.45 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர், இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள்
    • 140 ரூபாய் வரை விற்பனை

    கரூர்,

    கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் உள்ளூர் மீனவர்கள், வலை கட்டி மீன் பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப் படும் மீன்கள், பழைய கரூர் சாலையில் சிறிய பாசன வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஜிலேபி ரக மீன், கிலோ 140 ரூபாய்க்கு பிடித்து விற்பனை செய்யப் பட்டன. லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென் றனர். நேற்று மட்டும் 100 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

    • 2 மெட்ரிக் டன் அளவு விற்பனை செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா, உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் அச்சு வெல்லம் மறைமுக ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் அதிகபட்சம் சிப்பம் ஒன்றிற்கு ரூ.1100, குறைந்தபட்சம் சிப்பம் ரூ.1000 மற்றும் சராசரியாக சிப்பம் ஒன்றிற்கு ரூ.1040 என 2 மெட்ரிக் டன் அளவு விற்பனை செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    ஏலத்தில் இலுப்பக்கோரை, வீரமாங்குடி, அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், இளங்கார்குடி ஆகிய பகுதிகளைச் சேரந்த விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வேலைக்கு செல்வோர், சமைக்க நேரமில்லாத தம்பதிகள், வெளியூர்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பெரும்பாலும் ஓட்டல்கள் மற்றும் கையேந்தி பவன்களில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில ஓட்டல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற உணவுப்பொருட்களை வைத்து உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

    மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் இதுபோன்ற நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் சாலையோர திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. திறந்த வெளியில் எந்த சுகாதாரமும் இல்லாத இடத்தில் இட்லி, தோசை, வடை, இறைச்சி, பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பசிக்காக அவசர கதியில் வாங்கி உட்கொள்ளும் மக்கள் வயிற்று உபாதை, வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக எண்ணை பலகாரம் பயன்படுத்தும் வடை, புரோட்டா கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    மதுரை நகரில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு மற்றும் சாலையோரங்களில் செயல்படும் சில கடைகளிலும் முதல் நாள் விற்பனையாகாத உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேேபால சில பெரிய ஓட்டல்களிலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை நகரில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க வேண்டிய சேவை தொழிலை மேற்கொள்ளும் உணவகங்கள் அதனை மீறி வணிக நோக்கத்தில் செயல்படுகின்றன.

    குறைந்த விலையில் கிடைக்கும் ரேசன் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி அதன்மூலம் உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. இதனை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் அடிக்கடி உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றன. இதற்கு முறையான விலை பட்டியலை கடையில் வைப்பதில்லை. இதனால் சாப்பிட்டு விட்டு பலர் அதிக பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தூக்கத்தில் உள்ளனர். அவர்கள் இனிமேலாவது விழித்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை.
    • தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவற்றின் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் அருகே உள்ள சின்ன புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி.

    இவரது மனைவி ராணி (வயது 44).

    இவர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.

    இதேபோல் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (36) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை.
    • 1 கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் பகுதியில் சில தினங்களாக பனிப்பொழிவு குறைந்து பகலில் வெயில் வெயில் அதிகரித்துள்ளது.

    இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக முலாம்பழம் என்னும் கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருவாரூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்திலும் கொட்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் ஆந்திராவில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் நகருக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் வருகிறது.

    வியாபாரிகளுக்கு 1கிலோ ரூ 25 க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    • போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி தடை பட்டுள்ளது.
    • நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுக்கா களில் மொத்தமாக 170-க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நடப்பு பருவத்தில் இயங்கி வருகிறது.

    100-க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்த கட்டிடம் இருப்பதால் பெரும் பகுதி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில், கோயில்கள், சமுதாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் 8ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    நெல்மூ ட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் வராததால் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

    பல மையங்களில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியும் தடைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கூறியதாவது:-

    கடுமையான மழை வெள்ள பாதிப்பு, அதன் பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த போது பாதிப்பு என விவசாயிகள் பெரும்பாடுப்பட்டு அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்தால் அடுக்கி வைக்க இடம் இல்லாமலும்,ஏற்கனவே அடுக்கி வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் முறையாக அனுப்பாததே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

    எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மாவட்டம் முழுவதும் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நுகர்வோர் வணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ×