search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224097"

    • நியாய விலை கடை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • நியாய விலை கடை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பிச்சை, செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். தனுஷ்கோடி, மந்தகாளை, பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு நியாய விலை கடை சங்க பொதுச்செயலாளர் பொன்ராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கூட்டுறவு சங்க நியாய விலை கடை பணியாளர்க ளுக்கு அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக நிறைவேற்றி இருக்கிறார்.

    கருணை உள்ளத்துடன் தீபாவளி முன்பணம் வழங்கி நியாய விலை கடை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கருணாநிதி, ராமர், பக்ருதீன், பாஸ்கரன் அழகுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியவரை மீட்ட நம்பிக்கை மனநல காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, நகர பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இந்திரா (65) மற்றும் மற்றும் மராட்டி மொழி பேசும் சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்ட நம்பிக்கை மனநலக் காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு உதவிய நம்பிக்கை மனநல காப்பக நிறுவனர் சவுந்தர்ராஜன் மற்றும் திட்ட மேலாளர் விஜயா அதற்கு உறுதுணையாக இருந்த இன்ஸ்பெக்டர் கழனியப்பன், திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ், முன்னாள் செயலாளர் மதன், உறுப்பினர் குமார் மற்றும் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும்.
    • நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பாக நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

    விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் எனவும், நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுபேரன் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் தியாகராஜன் நன்றிக் கூறினார்.

    • இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கோடும், 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நடமாடும் மருத்துவ குழுவினர் புறப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். நேற்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் பேரூராட்சி பகுதியில் 80 சதவீத தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முழு நேரம்- அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 - 23 ஆண்டிற்கு முழு நேரக் கல்வி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலா–ண்மை, நகை மதிப்பீடு ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்ச கல்வி தகுதியான பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 28-ந் தேதி வரை ரூ.100 செலுத்தி நேரில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணி–புரியும் இந்த பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி.டிப்போ எதிரில், சாத்தூர் என்ற முகவரியில் தபால் மூலமாக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு, 88071 59088 என்ற முதல்வரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • இவர்களுக்கு வசந்தா என்ற பெண், பணிகளை பிரித்து வழங்கி வரும் வேலையை செய்து வருகிறார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வசந்தா என்ற பெண், பணிகளை பிரித்து வழங்கி வரும் வேலையை செய்து வருகிறார்.

    இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்த வசந்தா அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக கொடுப்பதாக பேசிக் கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை துப்புரவு பணியாளர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மற்றும் நரசிங்கபுரம் நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற துணைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் கூறும் போது சரியாக பணிகளை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அதிகாரிகள் சத்தம் போடுகின்றனர். ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பருத்திச்சேரியில் உள்ள மின்மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது.
    • அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி- பருத்திச்சேரியில் மின் மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி மின்சார வாரிய பணியாளர்கள் சாய்ந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கத்தில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
    • இதில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநா தசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் ராமேசுவரத்தில் இயங்கி வரும் பர்வதவர்த்தினி அம்மன் மேல்நிலைப்பள்ளியில், தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் மத்தியில் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படை க்கும்படி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்துவேன். பிளா ஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    பள்ளிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு ப்போட்டி, ஓவி யப்போட்டி, கட்டுரை ப்போட்டிகள் நடை பெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சரிவர பணி வழங்காததை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அருகே உள்ள நத்தகாடு பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்று ஒவ்வொரு நாளும் பகுதி வாரியாக வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு சரிவர பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் டீ களத்தூர்- மணச்சநல்லூர் செல்லும் சாலையில் நத்தக்காடு பஸ் நிலையத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், இணையவழி சேவை பாதிப்பு காரணமாக அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. இதன்காரணமாக எங்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இணையவழியில் பதியாத தொழிலாளர்கள் வேலை செய்தால்கூட அன்றைய சம்பளமும் அவரது கணக்கில் வரவு வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு நாள்தோறும் பணி வழங்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.
    • ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் முகமது உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு யூனியன் ஆணையாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். யூனியன் தலைவர் ராதிகா பிரபு திருப்பாலைக்குடியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், கறிக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகளை கைப்பற்றினர். மீண்டும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் கூறினார்.

    ஊர்வலத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) ஆறுமுகம் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனந்தூர் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் துரத்தி நிஷா தலைமையிலும், சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் தலைமையிலும் பிளா ஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது. இதில் ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர்மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் தொகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 செம்மறியாடு, வெள்ளாட்டு குட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே உள்ள சொக்க நாதன்புத்தூரில் நடந்தது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் (2021-22) சார்பில் 100 பயனாளிகளுக்கு 500 ஆட்டு குட்டிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், யூனியன்சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விதவை என்ற பெயரை கைம்பெண் என மாற்றியமைத்து அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    அதுபோல் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களின் வளர்ச்சிக்காக அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம், மாணவி களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன்வழியில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தி.மு.க.வும், தமிழக முதல்வரும் தான். விரைவில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரப்பப்படவுள்ளது.அதில் ஏழை, எளிய, கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ராஜேஸ்வரி முனியசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள் அமுதரசன், சின்னதம்பி, சீதாராமன், தங்கப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி சொர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூ.4.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
    • தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 15 மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டன.

    இதையடுத்து மாவ ட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 71 குற்றவியல் வழக்குகளும், 86 காசோலை மோசடி வழக்குகளும், 262 வங்கிக் கடன் வழக்குகளும், 198 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், மின்வாரியம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 1, 37 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 981 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 1807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

    இதில் 1066 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 399 வரையில் வழக்காடிகளுக்கு நிவாரணமாக கிடைத்தது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 450 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 192 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 50 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர்கள், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். வழக்காடிகள் திரளாக கலந்து கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×