search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224097"

    • நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
    • 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் தர்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப்படித்தால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் அவர் இதுபோலநபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கூறி கொள்கிறேன்.

    20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள்குழு அமைத்து உரிய நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் கூறியதாவது:

    பொது வினியோக திட்டத்துக்கு தனிதுறை தேவை. நிறுத்தி வைக்கப்பட்ட 17சதவீத அகவிலைப்படி வழங்குவதோடு அரசு ஊழியர்களை போன்று 31சதவீத அகவிலைப்படி வேண்டும்.

    ரேஷன் பொருட்களை சரியான எடையில் வழங்க, அதை பொட்டலமாக வினியோகித்தல் என்பன உள்பட 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 7-ந் தேதி முதல், 9-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் செய்கிறோம். அத்துடன் மாவட்ட தலைநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். வரும் 10ந் தேதி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். இதனால், நாளை முதல் 9-ந் தேதி வரை ரேஷன் மூடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராஜி, மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன் உடன் இருந்தனர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 7 -ந் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவதாக மாநில துணைதலைவர் தகவல் தெரிவித்தார்.
    • 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மாநில துணைதலைவர் தினகரன், இணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:-

    கூட்டுறவுதுறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம், ஓய்வூதியம்,பணிவரன் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுகிறோம்.

    31 சதவீத அகலவிலைப்படி, தனித்துறை, புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் ஆகிய 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகிற 7 முதல் 9 வரை 3 நாட்கள் மாநிலம் தழுவிய தொடர்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் செல்வம் உடன் இருந்தனர்.

    ×