search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224170"

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் 3 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    • திற்பரப்பில் 3-வது நாளாக குளிக்க தடை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்தகன மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் விட்டு விட்டு மழை பெய்தது. குளச்சல் பகுதி யில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர் கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி, கொட்டா ரம், மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரவு சாரல் மழை நீடித்தது.இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை பேச்சிப் பாறை அணைக்கு வரக் கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இதை யடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக் கப்பட்டுள் ளது. நேற்று 4000 கனஅடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 3057 கனஅடி உபரி நீரும் 488 கன அடி தண்ணீர் மதகு கள் வழியாகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.94 அடியாக உள்ளது. அணைக்கு 2198 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படு வதையடுத்து குழித்துறை, கோதை யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று 3-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-6, பெருஞ்சாணி-6.6, சிற்றாறு-1-3, சிற்றாறு-2-5.6, பூதப்பாண்டி- 2.2, கன்னிமார்-2.2, நாகர் கோவில்-2, குருந்தன் கோடு-3, சுருளோடு-2, தக்கலை- 3.2, குளச்சல்-84.6, இரணியல்-6.4, பாலமோர்- 2.6 மாம்பழத்துறையாறு- 3, கோழிபோர் விளை- 6.2, ஆணைக்கிடங்கு-2, அடையாமடை-2.4, முள்ளங்கினாவிளை-12.6.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு திருவட்டார் தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந் துள்ளது. கும்பப்பூ சாகுபடி பணி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. சுசீந்திரம், தெரிசனங்கோப்பு, பூதப் பாண்டி பகுதிகளில் உழவு பணி நாற்று பாவுதல் பணி போன்ற பணிகளில் விவ சாயிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

    • குளச்சல் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது
    • கரை மடி வலை முலம் நெத்திலி மீன் பிடிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப் படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.பைபர் வள்ளங்கள் மாலை கடலுக்கு சென்று விட்டு மறுநாள் காலை கரை திரும்பும்.சில வள்ளங்கள் காலையில் சென்று அன்று மதியமே கரை திரும்பும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதி யில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது.காற்று வீசவில்லை.இத னால் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற வள்ளங்கள் நேற்று காலை கரை திரும்பின.

    இதில் நெத்திலி, அயரை, சாளை, ஊளா போன்ற மீன்கள் கிடைத்தன. நேற்று காலையிலும் தூறல் மழையில் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.இவற்றுள் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத் தன. அவற்றுகளை மீனவர் கள் ஏலம் போட்டு விற் பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1300 வரை விலை போனது.இதனை உள்ளூர் மீன் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கடந்த வாரத்திற்கு முன்பு ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.700 முதல் ரூ.1000 வரைதான் விலைக்கு போனது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கரைமடி வலைகள் மூலம் அருகில் மீன்பிடித்து கரை திரும்பும்போது மழையால் தொழில் பாதிக்காது. காற்று வீசினால்தான் கட்டுமரங்கள் கடலுக்கு செல்ல முடியாது.நேற்று மழை மட்டும் பெய்தது.காற்று வீசவில்லை.அதனால்தான் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றன என்றார்.

    கடலில் கவரமடி வலையை கட்டுமரம் முலம் அதிகாலையில் கடலுக்குள் வீசி வருவார்கள். பின்பு வீசிய வலையை சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இழுப்பார்கள் அதில் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இன்று கரைமடி வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்ததில் நெத்திலி மற்றும் சாலை மீன்கள் ஏராளமாய் கிடைத் தன மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 2 பேர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பெத்தேல்புரம் குழிவிளையை சேர்ந்தவர் மரியதாஸ் (60).

    இவரது மனைவி ஆன்லெட் புஷ்பம் (58). இவர் திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆசிரியை தினமும் வேலைக்கு செல்ல குழிவிளை பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது அதே பகுதியை சேர்ந்த சுயம்பு மற்றும் வீரமணி ஆகியோர் கிண்டல் செய்வார்களாம். இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மரியதாஸ் மனைவியுடன் காரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். குழிவிளையில் ஒரு கோவில் முன்பு செல்லும்போது சுயம்பு, வீரமணி அவரது காரை வழிமறித்தனர். மரியதாஸ் உடனே காரை வீட்டை நோக்கி ஓட்டினார்.

    இதில் ஆத்திரமடைந்த இருவரும் காரை துரத்தி கொண்டு பின்னால் சென்றனர். வீட்டு முன் நின்ற காரிலிருந்து ஆன்லெட் புஷ்பம் இறங்கும்போது அவரை பிடித்து இழுத்து தாக்கினர். இதை தடுத்த கணவர் மரியதாசிற்கும் அடி-உதை விழுந்தது.இதில் படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மரியதாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சுயம்பு, வீரமணி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 54 மனுக்களுக்கு தீர்வு
    • காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காண குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் குளச்சலில் நடந்தது.

    இதில் குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சுந்தர மாணிக்கம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, மகளிர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    • உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 52) தொழிலாளி. கடந்த 3-ந் தேதி இரவு இவர் உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் குளச்சல் போலீசில் புகார்
    • பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பத்தறை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை தொழிலாளி. இவரது மனைவி அபிஷா (வயது 30). இருவருக்கும் கடந்த 2017-ல் நெய்யூரில் வைத்து திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 12-ந்தேதி அபிஷா பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த தங்கத்துரை வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அபிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிஷாவை தேடி வருகின்றனர்.

    • சங்கிலியை பறித்த.உடன் பெண் கூச்சல் போட்டதால் செயினை பறித்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது 31). கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா ஆலய விழாவிற்கு சென்றார். ஆலய வழிபாடு முடிந்து இரவு அவர் வீடு திரும்பினார்.

    ராதிகா வீட்டு முன் வரும்போது மர்ம நபர் ஒருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.உடனே ராதிகா கூச்சல் போட்டார். இதனால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராதிகா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பறிக்கப்பட்ட செயின் வீட்டின் அருகே கிடந்தது. இதனை போலீசார் கண்டு பிடித்து மீட்டனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபர் பயந்து செயினை வீசிவிட்டு சென்றாரா? அல்லது ராதிகாவிடமிருந்து செயினை பறிக்கும்போது அவர் சத்தமிட்டதால் மர்ம நபர் தப்பும்போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு
    • னிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள காரியாவிளையைச் சேர்ந்தவர் சுஜிலா. மருந்தாளுநர் பணி செய்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுஜிலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் ஏற்பட்ட சந்தே கத்தின் அடிப்படையில் போலீசார் சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்ய ப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கும்,தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றப்பட்டது.

    இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய மினி பஸ் டிரைவர் சிபின் கைது செய்யப்பட்டார்.

    • நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
    • மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28).

    இருவரும் 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் பரிசோதனை செய்ய ப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஆனந்தின் சகோதரி வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.

    அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியது திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது.

    நேற்று முன்தினம் அவர் இறந்த பின்பும் அவரது செல் போனுக்கு அழைப்பு வந்தது.செல்போனை போலீசார் எடுத்து பேசினர்.அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் கோபத்தில்தான் பேசியுள்ளார்.இதனால் இவர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் கூறினர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த மினிபஸ் டிரைவர் தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என கூறினர்.

    தற்கொலை செய்து கொண்ட சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில் மினிபஸ் டிரைவர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 'ஐ மிஸ் புருஷா'என காதல் கணவன் ஆனந்தை குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்'எனவும் ஆனந்தை அவர் கேட்டு எழுதியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

    சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.மினி பஸ் டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மினி பஸ் டிரைவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பாராம்.சுஜிலா வெளிநாடு செல்வதை மினிபஸ் டிரைவர் விரும்பவில்லையாம்.இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.நேற்று முன்தினமும் அவர் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.

    சுஜிலாவுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்த மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றும் சுஜிலா செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனை போலீசார் எடுத்து பேசினர். அப்போது பேசிய வாலிபர் கோபத்தில்தான் பேசியுள்ளார். இதனால் இந்த வாலிபர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • டிரைவர்கள் படுகாயம்
    • பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 55).டெம்போ ஓட்டி வருகிறார்.நேற்று காலை இவர் ஜல்லி ஏற்றிக்கொண்டு சவாரி சென்றார்.

    டெம்போ பெத்தேல்புரம் அருகே செல்லும்போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திங்கள்நகர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது எதிர்ப்பாராமல் டெம்போ மோதியது.

    இதில் டெம்போ டிரைவர் வர்கீஸ், அரசு பஸ் டிரைவர் பாஸ்கரன் (55) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.வர்கீஸ் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், அரசு பஸ் டிரைவர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிர்ஷ்டவசமாக பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று மாலை குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்'என அறிவுறுத்தி சென்றனர்.இது போல் திங்கள்நகர், பேயன்குழி பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் அவர் சோதனை செய்தார்.இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    ×