search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திருவிதாங்கோடு அடுத்த அந்தோணியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவரது மகள் ஜெனிஷா (வயது 19). களியங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த ஜெனிஷாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது தாயார் மரியபுஷ்பம் (44). இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மூலச்சன்விளையை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 60). இவர் சொந்தமாக லாரி ஓட்டி வந்தார். சிவதாஸிற்கு லாரி வாங்கியதிலும் வீடு கட்டியதிலும் கடன் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று வீட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சிவதாஸ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 64) இவருக்கு மரியபுஷ்பம் (55) என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இருபது வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீவை குண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் செல்வி (52) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு சிபில் (21) என்ற மகன் உள்ளார். சிவபெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதி பட்டார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது மகன் சிபில் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீங்கான் சிலை கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைப்பு
    • சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தில் சில வாலிபர்கள் அய்யன்குளத்தில் நீராட சென்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் குளித்தனர். அப்போது திடீரென ஒருவர் காலில் ஏதோ பொருள் இடறி விட்டது அதனை மூழ்கி எடுத்தபோது அது ஒரு பெண் தெய்வம் சிலை என்று தெரிய வந்தது.

    இதனையடுத்து குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலருக்கும், இரணியல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து பீங்கான் சிலையினை கைப்பற்றி கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தகராறு
    • டீ கடை உரிமையாளர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் பசுபதி (வயது 37).

    இவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த சுனில் மனைவி அருள்மேரி (38) என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பார்வதிபுரம் கிறிஸ்டோபர்காலனியை சேர்ந்த ராம்ஜித் என்பவருக்கு கடனாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. ராம்ஜித் சுங்கான்கடை அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இதில் ரூ.53 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த ராம்ஜித் ரூ.47 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுபற்றி பசுபதி மற்றும் அருள்மேரி இருவரும் சேர்ந்து சுங்கான்கடை டீக்கடையில் இருந்த ராம்ஜித்திடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் அருள்மேரியை கையால் தாக்கிய ராம்ஜித், பசுபதியை டீ போடும் ஜக்கால் தலையில் தாக்கி யுள்ளார். இதில் காயமடைந்த பசுபதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், அருள்மேரி வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ராம்ஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கீழமணியன்குழியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பேபி. மகள் ரேவதி (வயது 20). ரவி இறந்து விட்ட நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் ரேவதி வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற ரேவதி அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் பேபி இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை தேடி வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகியவை காணவில்லை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் ஜோசப் அலெக்சாண்டர் (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி மேரி ரெத்னா ஜோதி (80). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர. இருவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக மனைவியுடன் வசித்து வந்த ஜோசப் அலெக்சாண்டர் தங்களை கவனித்து கொள்ள வில்லுக்குறி ஆர்.சி தெரு வைச் சேர்ந்த மெல்டா (42) என்பவரை பணிக்கு வைத்திருந்தார்.

    இவர் கடந்த 2 ஆண்டு களுக்கும் மேலாக ஆசிரியர் வீட்டில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று ஜோசப் அலெக்சாண்டர் பணம் எடுப்பதற்காக வீட்டில் இருந்த பீரோவை திறந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகிய வற்றை காணாது அதிர்ச்சி யடைந்தார்.

    இதுகுறித்து ஜோசப் அலெக்சாண்டர் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.அதில் வீட்டில் வேலை செய்யும் மெல்டா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மெல்டா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்றபட்டதால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததுள்ளார்.
    • இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே கண்டன்விளை என்ற இடத்தை சேர்ந்த வர் லாசர் (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்ற பட்டதாக தெரிகிறது இதனால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஏதோ விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் பரிசோதனை செய்து விட்டு வரும் வழியிலேயே லாசர் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது மகன் ஜாய்லாசர் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பலி எண்ணிக்கை 3 ஆனது
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரா ஜசேகர் (வயது 40).

    பொன்மனை ஈஞ்சக் கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34). இருவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர். இருவரும் முட்டத்தில் முள்வேலி அமைக்கும் பணியை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பினர். பைக்கை ராஜசேகர் ஓட்டி னார்.

    இருவரும் இரணியலில் இருந்து தக்கலை நோக்கி செல்லும் போது, எதிரே நெய்யூர் ஆத்திவிளை காமராஜர்தெருவை சேர்ந்த பிரதீஷ் (28) பைக்கில் வந்தார். அவரது பின்னால் நெய்யூர் பால் தெருவை சேர்ந்த ரெஜு (38) அமர்ந்திருந்தார். இரணியல்கோணம் ரயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரதீஷ், ராஜ சேகர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ரெஜுவை சுங்கான் கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆமத்தான்பொத்தையில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.அப்போது அங்கு வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்த போது எந்த விதமான அரசு அனுமதியும் இன்றி ஜல்லி கற்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடி விட்ட தாக கூறப்படுகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகுமார்அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகாரளித்தார்.

    புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியலை அடுத்த இரணியல்கோணம் கீழ மணியன்குழியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 55).

    இவர், சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் ராஜகேசவதாசுடன்ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த ஷர்மிளா திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந் தார்.

    இது குறித்து அவரது சகோதரர் ராஜகேசவதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    ×