search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224328"

    • கோட்டைப்பட்டினம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை:

    நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரசர்குளம், மாங்குடி நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின் உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்."

    • பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நடைபெற உள்ளது
    • குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குளச்சல் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தள வாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நாளை (27-ந் தேதி) மற்றும் மறுநாள் (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், நெசவாளர் தெரு, பள்ளி விளாகம்அழகனார் கோட்ட விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை இரணியல் மின் விநியோகம் உதவி செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் நாளை (27-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி,திருமூலநகர், வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம்,கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், சின்னமுட்டம் மற்றும் பால்குளம் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

    மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணன்கோவில் விநியோக பிரிவிற்குட்பட்ட டென்னிசன் ரோடு உயர்அழுத்த மின்பாதையில் நாளை மறுநாள் (28-ந் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டென்னிசன் ரோடு, மணி மேடை, நாகராஜா கோவில் குறுக்கு சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பார்வதிபுரம் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் ரமணிபாய் தெரிவித்து உள்ளார்.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாணார் பாளையம், மேட்டுக்கடை, நத்தக்காட்டு பாளையம், புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், சாலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

    இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினி யோகம் இருக்காது.
    • இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.

    ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, நேரு வீதி, முத்துசாமி வீதி, சத்தி ரோடு பிருந்தா வீதி, கிருஷ்ணா செட்டி வீதி, ஏ.பி.டி. வீதி, இந்திரா வீதி, பழைய பாளையம், கவுந்தப்பாடி மார்க்கெட், சத்தி ரோடு, நால் ரோடு, சிறுவலூர் ரோடு, ஈரோடு ரோடு பாரதியார் வீதி, பவானி ரோடு, பைபாஸ், அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி, செட்டி பாளையம், ஏ.கே. வலசு, எஸ்.பி. பாளையம், எல்லீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இரு க்காது.

    இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ்-மேயர் மகேஷ் கூட்டறிக்கை
    • தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை செல் கிறார். இந்த நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இந்த பாத யாத்திரையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். இது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் நடை பெறும் காங்கிரஸ் பேரியக் கத்தின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நாளை (7-ந்தேதி) குமரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி வருகிறார். குமரி வருகை தருவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு குமரி எல்லையான காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் வைத்து குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் எங்களது தலைமையில் காலை 11 மணிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஆகவே குமரிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரை வரவேற்பதற் காக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர் வாகிகளும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு மாலையில் நடைபெறும் ராகுல்காந்தி யின் பாதயாத்திரை நிகழ்ச்சி யில் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறி உள்ளனர்.

    • ரகுநாதபுரம், ஆர்.எஸ். மடை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) வெளியிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (3-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 5 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளதை, ஒப்பந்தத்தினை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றியதை, பணப்பலன்கள் வழங்கப்படாததை கண்டித்து நடக்கிறது.

    நாகர்கோவில்:

    அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 5 சதவீதம் என அறிவிக்கப் பட்டுள்ளதை கண்டித்தும், 3 ஆண் டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் களின் நலன் கருதி போடப்படும் ஒப்பந்தத்தினை 4 ஆண் டுகளுக்கு ஒரு முறை என மாற்றியதை கண் டித்தும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிைலப்படி மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படாததை கண்டித்தும் நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சார்பில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைைமயில் நடை பெறுகிறது. நான் (தளவாய் சுந்தரம்) அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சமால், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஆகிேயார் பங்கேற்று பேசுகின்றனர். கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா பீட்டர், நாகர்கோவில் மண்டல போக்குவரத்து பிரிவு அண் ணா தொழிற்சங்க தலைவர் சந்தனராஜ் ஆகிேயார் முன்னிலை வகிக்கிறார்கள்.

    நாகர்கோவில் மண் டல போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் வரவேற்று பேசுகிறார். நாகர்கோவில் மண்டல போக்கு வரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறுகிறார். ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பணிமனை நிர்வாகிகள், அண் ணா தொழிற்சங்க உறுப்பினர்கள், குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர், கிளை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்க சார்பு அணி நிர்வாகிகள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளை (2-ந்தேதி) மாலை 2 மணி முதல் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

    திருச்சி,

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளை (2-ந்தேதி) மாலை 2 மணி முதல் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 6 மணி வரை கீழ்கண்டவாறு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    1. துறையூர், அரியலுார், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து சென்னை பைபாஸ் ரோடு வழியாக பழைய பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், கரூர் பைபாஸ் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதுப்பாலம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

    2. லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லுர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய கொள்ளிடம் பாலம், சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, ஜே.ஏ.சி. கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

    3. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, ஒய் ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண் 6, டிரங்க்ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி ரோடு, ஜே.ஏ.சி. கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மீண்டும் ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி திருவானைக்கோவில் சோதனைச்சாவடி எண் 6, ஒய் ரோடு சந்திப்பு, சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி.சந்திப்பு, மேரிஸ் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

    4. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர், துவாக்குடி சென்று மீண்டும் பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், மாரிஸ் மேம்பாலம், காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.

    5. கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவிரி பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

    6. தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தை கடைபிடித்து, சீரான போக்குவரத்து இயங்க பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளை (26-ந்தேதி) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டல-3 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இதில் மத்திய மண்டலம்- 3 பகுதிக்கு உட்பட்ட தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்கலிங்கநகர், துரைசாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். என மாநகராட்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×