search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • ஓடும் பஸ்சில் முதியவர் திடீரென இறந்தார்.
    • சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பாண்டகபாடி காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்கு நேற்று காலை பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் அவர் சொந்த ஊர் செல்வதற்கு பெரம்பலூா் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    பஸ் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையத்தை கடந்து சோமண்டாபுதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சின்னசாமிக்கு வாந்தி, மயக்கம் வருவதாக சக பயணியிடம் கூறியுள்ளார்.இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து சின்னசாமி பஸ்சின் பின்படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தவர், திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக சக பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் சின்னசாமியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த சின்னசாமியின் மகன் நாகராஜன் தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்துவிட்டார் என்று கூறியதன் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் எழுதி வாங்கி கொண்டு சின்னசாமியின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.


    • வலிப்பு நோயால் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரிய வடகரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் சுந்தர் நகர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மதியம் வலிப்பு ஏற்பட்டு முத்தையன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையனுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பலன் அளிக்கவில்லை
    • உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் டாஸ் மாக் கடை முன்பு கடந்த மாதம் 31-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை யில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற கோணங்க ளில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன முதிய வரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள விராலிகாட்டு விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தங்கதாஸ் (வயது 78), தொழிலாளி.

    இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று தங்கதாஸ் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மதில்சுவர் மீது உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறினார்.

    உடனடியாக சுவரில் இருந்து இறங்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. இதனால் தங்கதாஸ், பக்கத்து வீட்டின் காம்பவுண்டிற்குள் விழுந்தார். இதில் அவரது தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் தங்க தாசின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் சுனில், பிரேம்குமார் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் கிடந்த தந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கதாசை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    அவரது மகன் பிரேம் குமார் புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.
    • இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் மேலஉரப்பனூர், இந்திரா காலனி, நேதாஜிநகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது32). இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராமநாதன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

    அவர் எஸ்.ஆர்.கண்ணன் தோப்பு கண்மாய் முன்பு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமநாதன் உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

    மதுரை பசுமலையில் நேற்று நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மணியனூர் பொடரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 90). இவர் மேல்மாடியில் வசித்து வருகிறார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி குழந்தையம்மாளுக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது.

    இதனால் மன உடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்ததுள்ளது.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது.
    • இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). ஜோதிடர். இவர் நேற்று வீட்டி லிருந்து அவரது தாயார் பாக்கியத்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் அருகே உள்ள பாச்சலுக்கு சென்றார். அங்கு அவரது தாயாரை விட்டுவிட்டு நேற்று இரவு மங்களபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ராசிபுரத்தில் இருந்து திரும்பினார். அவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது. இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த சிவகுமாருக்கு நந்தினி (25) என்ற மனைவியும் ருத்ரா, ஸ்ரீ சுபா என்ற 2 மகள்களும் உள்ளனர். சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர்.

    கடலூர:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50) தொழிலாளி. இவர் சிதம்பரத்தி லிருந்துகந்தமங்கலம் திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போதே திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்து ள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்

    உடனே ஆட்டோவில் இவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர். இதனையடுத்து இவரது மனைவி வைஜெய ந்திமாலா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். 

    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி குளுமைக்காடை பகுதியை சேர்ந்தவர் எஸ்தாக் (வயது 58), கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் குடிபோதையில் எஸ்தாக் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு தூங்க சென்றார். நேற்று காலை அவரது மனைவி எஸ்தாக்கை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் உள்ள டாக்டர்கள் எஸ்தாக்கை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து எஸ்தாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக எஸ்தாக் மகள் சுஜி (27) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மாமியாரை பார்க்கச் சென்ற வாலிபர் உயிரிழந்தார்
    • சாலையில் சுருண்டு விழுந்தார்

    திருச்சி:

    திருச்சி மணப்பாறை கிருஷ்ணா கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவர் நாகமங்கலம் பார்வையற்றோர் குடியிருப்புகள் அருகாமையில் வசிக்கும் தனது மாமியாரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது செல்லும் வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அவர் சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். . இது குறித்து அவரது தாயார் ராஜம்மாள் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்திலிருந்து விழுந்த முதியவர் உயிரிழந்தார்
    • மது போதையில் வந்த போது சம்பவம்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட வைத்தியநாதபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராசு (வயது 65). இவர் நேற்று மாலை வீமது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பெருமத்தூரில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது
    • பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி திருவானைக்காவல் காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 58). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரியின் கணவர் சுந்தரம் இறந்துவிட்டார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக ராஜேஸ்வரி, பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவில் உள்ள தனது சகோதரர் கமலக்கண்ணன் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.ராஜேஸ்வரிக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதற்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்து விட்டு மாத்திரைகளை பெற்றுக் கொண்டு கமலக்கண்ணனுடன் ேமாட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.பெரம்பலூரில் பாலக்கரை பகுதியில் உள்ள வேகத்தடை மீது கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது ராஜேஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக ராஜேஸ்வரியின் மகள் கல்பனா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ×