search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
    • வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

    அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.

    • ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் ராஜதுரை(வயது 22). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று விடுப்பு எடுப்பதாக ஓட்டலுக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்கி இருந்துள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அவர் ஓட்டலுக்கு சாப்பிட செல்லவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து, கதவை திறந்து பார்த்தனர். அப்போது ராஜதுரை பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார்.
    • இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் புளூ கலர் சட்ைட, கிரே கலர் கருப்பு பார்டர் வேட்டி அணிந்திருந்தார்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் கடந்த 23-ந்தேதி பள்ளப்பட்டி மெய்யனூர் சாலை முனியப்பன் கோவில் ஆட்டோ நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர் பச்சை கலர் அரை கை சட்டை, சாம்பல் கலர் பேண்ட் அணிந்திருந்தார். வலது நெற்றியில் வெட்டு காய தழும்பு காணப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் இறந்த 2 பேருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் உறவினர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.

    இதனால் உடலை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.

    கரூர்

    நச்சலூர் அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் முத்தன் (வயது 56). இவர் கடந்த 24-ந்தேதி நெய்தலூர் காலனிக்கு செல்வதாக அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மந்தையூர் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்தன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முத்தனின் மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்துணவு பணியாளர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகை மலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டியை சேர்ந்தவர் ஆரியமாலா (வயது 45). இவர் தெலுங்கப்பட்டி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் ஆரியமாலா பள்ளிக்கு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். தெலுங்கப்பட்டி முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    தகவலின் பேரில் ேதாகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆரியமாலாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தோகைமலை போலீசார் ஆரியாமாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).

    இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ரெத்தினம் (வயது 30). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் பொறியியல் பட்ட படிப்பை முடித்த அனிஷ் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.

    இதற்காக அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் சிகிச்சை யளித்தும் நோய் குணமாகாத நிலையில் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறையின் உள்ளே கால் வழுக்கியதில் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதில் அனிஷ் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    உறவினர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் அனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏதோ விஷ பூச்சி கடித்துள்ளது.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது36), தொழிலாளி.இவர் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏதோ விஷ பூச்சி கடித்துள்ளது. இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உடலில் வீக்கம் ஏற்பட்டதால் தாயாரிடம் கூறியுள்ளார்.

    அவர், தக்கலை அரசு மருத்துவமனைக்கு வினோத்தை அழைத்துச் சென்றார்.அங்கு மயங்கி விழுந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வினோத் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைக்ரோவன் வெடித்து பேக்கரி மாஸ்டர் உயிரிழந்தார்
    • பணி செய்து கொண்டிருந்த போது நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன் (வயது 39). இவர் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஒரு கடையில் ஸ்வீட் உணவுகளை தயார் செய்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி உணவுகள் ஆர்டரின் பேரில் அதிகளவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மைக்ரோவன் வெடித்து சிதறியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • விசாரணை நடத்த கலெக்டரிடம் மனு
    • கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் அருகே உள்ள தேனாந்தோட்டம் வீடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார்.

    அதில், எனது மனைவியின் தாயார் ராமலட்சுமி, கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பாததால் 11-ந் தேதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தேன். இந்தநிலையில் கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

    அங்கு கிடந்த ஆடைகளை வைத்து, அது எனது மாமியார் என உறுதியானது. அதன்பிறகு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் கூறினர். ஆனால் ஒன்றரை மாதம் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே பரிசோதனையை விரைந்து முடித்து எங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.

    • குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    கன்னியாகுமரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்தநகர் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில்

    6-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின் கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் வைத்து மர்மநபர்கள் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்துள் ளான்.

    இதில் மாணவன் அஸ்வின் உயிருக்கு ஆபத் தான நிலையில் நெய் யாற்றின் கரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் 17-ந்தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளார். இதற்கு காரண மான சமூக விரோதிகளை உடனடியாக போலீ சார் கைது செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.முதல்-அமைச்சர் இக்கடி தம் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 52) தொழிலாளி. கடந்த 3-ந் தேதி இரவு இவர் உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×