search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவடைந்தார்.
    • பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    திருமங்கலம்

    மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சங்கர் கடந்த 9-ந் தேதி திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டிற்கு சென்றார். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கர், சிவகுமார் இவர்களது நண்பர் சிவன்ராஜ்(வயது24) ஆகியோர் செங்குளத்தில் இருந்து திருமங்கலம் செல்லவதற்காக மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமார் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமார் இறந்தார். இதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவன்ராஜூ நேற்று (13-ந் தேதி) சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக சென்றபோது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் பாகுலேயன் (வயது 60), முடிதிருத்தும் தொழிலாளி.இவர் நேற்று காலை பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது தக்கலை அருகே சாமிவிளை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாகு லேயனை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பாகுலேயன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் அஜிகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்திய குழிச்சல் பகுதியை சேர்ந்த ஜாண்சன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 அடி கிணற்றில் இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்
    • பூ பறிக்க சென்றபோது விபரீதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் ஹெல்வினா சைனி ( வயது 18 ).

    இவர் நேற்று முன்தினம் அங்குள்ள வீட்டு தோட்டத்தில் பூ மற்றும் கத்தரிக்காய் பறிக்க சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாரன்ஸ் தோட்டத்து கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் மகளின் காலணி மற்றும் துப்பட்டா மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது பற்றி கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    இந்த கிணறு சுமார் 100 அடி ஆழத்தில் உள்ளது. கிணற்றின் பாதி தூரத்திற்கு கீழ் புதர் மண்டி கிடப்பதால் தீயணைப்பு துறையினர் உடனடியாக இறங்க முடியவில்லை.

    அதைத் தொடர்ந்து மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா வரவழைக்கப்பட்டது.

    பின்னர் அதனை தண்ணீரில் இறக்கி சோதித்த போது கிணற்றுக்குள் சைனி பிணமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. பூப்பறிக்க சென்றபோது அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    அதன் பின்னர் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் களமிறங்கியுள்ளனர். சுமார் 31 மணி நேரத்தை கடந்தும் இளம் பெண் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் பல வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மேற்கண்ட பகுதியில் திரண்டனர்.

    • இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்‌. பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் கைதி உயிரிழந்தார்
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்

    திருச்சி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 68). இவர் நடு காவேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதை தொடர்ந்து அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்
    • வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது67). இவரது மனைவி முறுகாயி (59). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூரில் இருந்து மருவத்தூர் சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டி செல்ல பின்னால் அவரது மனைவி முருகாயி உட்கார்ந்திருந்தார்.

    இந்த நிலையில் பேரலி மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது முருகாயி மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென மயங்கி கீழே விழுந்தார். கணவர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே டாக்டர்கள் முருகாயிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழந்தார்
    • டயர் வெடித்தால் விபரீதம்

    திருச்சி

    திருச்சி திண்டுக்கல் ரோடு கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர். இவரது மனைவி அவ்வாபி (வயது 73). இவரும், இவரது உறவினர் சபீர் அகமது மனைவி பரீதா ( 43) ஆகியோர் அவ்வாபீவியின் மகன் இலியாஸ் அகமதுவின் ஆட்டோவில் திருச்சி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே சென்றபோது முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. இதில் அவ்வாபீ பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பரீதாவும், ஆட்டோ டிரைவர் இலியாஸ் அகமதுவும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் வழக்கு பதிந்து ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • மினிபஸ் டிரைவர் சிபின் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே காரியாவிளையை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி சுஜிலா (வயது 28). இவர் மருந்தாளுநர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் சுஜிலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் சுஜிலாவிற்கு அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இவர் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புது அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் அதே பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். ராமமூர்த்தி கடந்த 7-ந் தேதி இரவு அருகே உள்ள அடைக்கம்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.களத்தூர் பிரிவு ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமமூர்த்தி படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமமூர்த்தி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி பரிதாபமாக இறந்தார்.
    • வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி அலறி துடித்தார்.

    கரூர்

    கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 81). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சுந்தரி (69). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சோமசுந்தரம்-சுந்தரி தம்பதி கரூர் மாவட்டம் புஞ்சை புகழூர் முதலியார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுந்தரி யு.பி.எஸ்.-ல் சவுண்ட் வருகிறது என்று கூறி அதை அணைக்க நடந்து சென்ற போது தரையில் கிடந்த எலக்ட்ரிக் வயரில் திடீரென வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி அலறி துடித்தார்.

    இதனைக்கண்ட சோமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சுந்தரியை சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சோமசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் அடித்ததில் சிறுமி உயிரிழந்தார்
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது36). இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்து ஓவியா (வயது10) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பானுப்பிரியாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 6- ந் தேதி இரவு பானுப்பிரியா தன்னுடைய மகள் ஓவியாவை கையால் அடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சரவணக்குமார் மகளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த நிலையில் ஓவியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணகுமார் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது அருந்திய தொழிலாளி உயிரிழந்தார்
    • அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார்

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவரது நண்பர்கள் அண்ணாமலை (26), தாமரை. இவர்கள் மூவரும், வெள்ளை அடிக்கும் வேலை செய்து வந்தனர்.சம்பவத்தன்று இரவு, வேலை முடித்துவிட்டு, ஊட்டியில் இருந்து 'பொலிரோ பிக்அப்' வாகனத்தில் ஊருக்கு வந்தனர். வாகனத்தின் பின்னால் அமர்ந்த ரமேஷ், மது அருந்திக் கொண்டே வந்துள்ளார். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் கே. பேட்டையில் சாலையோர ஹோட்டலில் வாகனத்தை நிறுத்தி, சாப்பிட சென்றனர். அப்போது, ரமேஷை எழுப்பியபோது, அவர் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து, அண்ணாமலை கொடுத்த புகாரின்படி, லாலாப் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகினறனர்.

    ×