search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • திருமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலியானார்.
    • கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    திருமங்கலம்

    மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் கவுதம் (வயது21). இவர் பைப் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அவனியாபுரம் நோக்கி வந்தார். அவர் பாரபத்தி கியாஸ் கம்பெனி பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற கவுதம் மீது மோதியது. இதில் கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுதம் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் முத்துக்கருப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள், தனியார் பஸ்கள் அதிவேகமாக வந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை முந்திசெல்ல முயற்சிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த விபத்தும் அதுபோல்தான் நடந்துள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் வேகமாக வரும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை மணி சதாசிவம் மூலிகை பறிக்க முளகுமூடு அருகே உள்ள ஆள்காட்டி குளத்தின் கரையில் சென்ற போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார்
    • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் மணி சதாசிவம் (வயது80). இவரது மகன் குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். நேற்று காலை மணி சதாசிவம் மூலிகை பறிக்க முளகுமூடு அருகே உள்ள ஆள்காட்டி குளத்தின் கரையில் சென்ற போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி சதாசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுத்தடுத்து விபத்துகளில் விவசாயி-முதியவர் இறந்தனர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது43). விவசாயான இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். சமயநல்லூர்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பாரதி நகர் அருகே சாலையை கடக்க முயன்றார்.

    விவசாயி சாவு

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரான தனக்கன்குளம் வள்ளுவர் நகரை சேர்ந்த மணி மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர்

    மதுரை உத்தபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(67). இவர் உசிலம்பட்டியில் இருந்து உத்தப்புரத்துக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலை- உசிலம்பட்டி ரோட்டில் வேகத்தடையில் ஏறிய போது ஆட்டோ நிலை தடுமாறியது. இதில் எதிர்பாராத விதமாக லட்சுமணன் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவா் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரான அழகுராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி தவறி விழுந்து இறந்தார்.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (56). மாற்றுத்திறனாளி. நேற்று மதியம் இவர் ஏணிப்படியில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • வாடிப்பட்டி அருகே மயங்கி விழுந்து இறந்த முதியவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கட்டம் போட்ட டார்க் ப்ளூ கலர் சட்டையும், பொடி கட்டம் போட்ட ப்ளூ கலர் கைலியும் அணிந்திருந்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை அருகே கடந்த திங்கட்கிழமை 80 வயது முதியவர் நடந்து வந்த போதுமயங்கி விழுந்தார். நீரோதான் கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை செய்தபின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை. கட்டம் போட்ட டார்க் ப்ளூ கலர் சட்டையும், பொடி கட்டம் போட்ட ப்ளூ கலர் கைலியும் அணிந்திருந்தார். மொட்டை அடித்த தலையில் சிறிது முடி வளர்ந்து இருந்தது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார்.
    • இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆண்டார் கொட்டாராம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி.

    சம்பவத்தன்று இரவு ராஜகோபால் பெரியார்- சக்கிமங்கலம் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அந்த பஸ் நள்ளிரவில் சக்கிமங்கலத்தில் நின்றிருந்தபோது தூங்கியிருந்த ராஜகோபாலுக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அடுத்த நாள் காலையில் டிரைவர் எழுப்பிய போது, ராஜ கோபாலிடம் பேச்சு மூச்சு இல்லை. எனவே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
    • உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த உரல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 69 ).இவர் தனது மனைவி மற்றும் 3 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.இதில் இளைய மகன்(வயது 33) மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மணிகண்டனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு போதை அடிமை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.ஆனால் சிகிச்சையில் விருப்பமில்லாத மணிகண்டன் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு உடுமலை பஸ் நிலையத்தில் படுத்திருந்த மணிகண்டனுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.போதைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே சானிப்பட்டி பகுதியில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே சானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலையாளி. இவரது மனைவி ராமாயி(வயது 75 ). கூலி தொழிலாளி. இவர் அவரது வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் நேற்று தென்னை மட்டைகளை வைத்து எரித்து சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அடுப்பில் இருந்த தென்னை மட்டை வெடித்து அதிலிருந்து நெருப்பு பொறி ராமாயின் சேலையில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதனால் ராமாயி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இராமாயின் மகன் வரதராஜ்( 56 )என்பவர் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கடலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). வாடகை கார் டிரைவர். இவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதற்கான மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வடிவேல் வந்தார்.

    அவர் ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணுடன் பழகியதை கண்டித்ததால் விஷம் குடித்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 31). இவர் ரெடிமேடு ஆடை கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். தனது வீட்டு மாடியில் ரெடிமேடு ஆடைகளை உற்பத்தி செய்யும் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி வந்தார்.

    அப்போது அவர் அங்கு வேலைக்கு வந்த ஒரு இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்தார். இதுபற்றி அறிந்த முத்துக்கிருஷ்ணனின் தாய் கண்டித்துள்ளார். மேலும் அவரது மனைவி ரேசிகா கணவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த முத்துக்கிருஷ்ணன் விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சற்று உடல்நலம் பெற்றதும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது முத்துக்கி ருஷ்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தி னர் அவரை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார்.

    இதுபற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்
    • 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

    அரியலூா்:

    அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ண மகாராஜன் மகன் அருள்முருகன் (வயது15). இவா் வெற்றியூா் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அருள்முருகனை, அவரது தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த அவா் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.

    இதையடுத்து அரியலூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அருள்முருகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

    • மதுரை அருகே பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறி இறந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பெத்தானியாபுரம், மேட்டுத்தெரு, பாண்டியராஜபுரத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து 2 நாள் ஆகிறது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    பெற்றோர் குழந்தையை ,மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அலுவலர் விஜய சரவணன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×