search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர் ராகவன்நாயர் மகன் ஸ்ரீகண்டன் நாயர் (வயது 46). குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

    ஸ்ரீகண்டன் நாயருக்கு சொரியாசிஸ் நோய் இருந்ததால் சிகிச்சைக்காக அவரது நண்பர் வில்லுக்குறி திருவிடைக்கோடு தவசிமுத்து வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் ஸ்ரீகண்டன் நாயர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது குளியல் அறைக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரது நண்பர் தவசிமுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீகண்டன்நாயர் இறந்த தகவல் அவரது சகோதரர் மணிகண்டன் நாயருக்கும் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் இறந்து கிடந்தன.
    • நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பழைய பல்லகச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அகற்றப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரேஷன் கடை அருகே கட்டப்பட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவரின் நான்கு பசுமாடுகள் மீது விழுந்ததில் மாடுகள் சம்பவ இடத்தில் இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசு மாடுகளை மீட்டனர். பழுதடைந்த ரேஷன் கடை இடிந்து விழுந்து நான்கு மாடுகள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடிபோதையில் பாலத்தில் அமர்ந்திருந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரைச் சேர்ந்தவர் மணி.இவரது மகன் பாபு(33) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி மது அருந்தி விட்டு சின்னமருதூரில் உள்ள ஒரு பாலத்தின் மீது அமர்திருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வந்த பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் வழுக்கி விழுந்து தொழிலாளி பலியானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி புது கந்தப்பா காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவர் நேற்று வீட்டில் திடீரென வழுக்கி விழுந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் கந்தம்பட்டியில் லாரி டிரைவர் திடீர் பலியானார்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மைசூர் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50). இவர் கர்நாடகாவில் இருந்து லாரியை ஓட்டி வந்தார் நேற்று இரவு அந்த லாரி சேலம் கந்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது லாரியை நிறுத்தி விட்டு குளிப்பதற்காக சென்றார் .

    அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் எப்படி இறந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (வயது26) இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

    இதுபற்றி பிரியங்காவின் தந்தை எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா எப்படி இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரியங்கா திருமணமான 6 ஆண்டுகளில் இறந்து விட்டதால் இது தொடர்பாக தேவகோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.
    • பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி அனிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (54). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரோஜாதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் கிரி தொழில் சம்மந்தமாக கோவைக்கு சென்றிருந்தார். அங்கு பணியை முடித்து விட்டு மீண்டும் நேற்று காலை கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.

    அப்போது நடு வழியில் பஸ் சென்ற போது ஒரு பக்கமாக சாய்ந்தபடி காணப்பட்ட கிரியை கண்டு சந்தேகம் அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரின் அருகே சென்று எழுப்ப முற்பட்டனர். ஆனால் கிரி எந்தவித அசைவும் இல்லாமல் சுயநினைவு இழந்தநிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முயற்சித்த நிலையில் நடுக்காட்டில் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.

    இதையடுத்து டிரைவர் நவநீதகுமார் பஸ்சை விரைவாக செலுத்தி மஞ்சூர் சென்றடைந்தபின் பிற பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் கிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மஞ்சூர் எஸ்.ஐ.தனபால் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் வழுக்கி விழுந்து தொழிலாளி பலியானார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி புது கந்தப்பா காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவர் நேற்று வீட்டில் திடீரென வழுக்கி விழுந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்த வாட்ச்மேன் பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பாவடி தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 48). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பரமத்தி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வேலூரில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை சின்னப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்மமாக இறந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் பண்டரிபாய் (வயது 51). இவர் பரளச்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். இதன் காரணமாக பண்டரிபாய் தனியாக வசித்து வந்தார். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் தீபக்ராஜ் என்பவர் பண்டரிபாயை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதியினர் கதவை உடைத்து பார்த்தபோது பண்டரிபாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பண்டரிபாய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருப்பவர் ஆனந்தன் (வயது 56). அலுவலக பணி தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு பணிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ×