search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • ருச்சி பி.கே.அகரம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியபோது பாம்பு கொத்தியது
    • சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த பரிதாபம்
    திருச்சி,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம்பி.கே. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கலையரசி. மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பி. கே. அகரத்தில் உள்ள சோள குட்டை வரத்து வாரியில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது விஷப்பாம்பு கடித்தது.இதில் கலையரசி மயங்கி விழுந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு பொறுப்பாளர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் கலையரசியை திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் பாரீஸ் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சல்மான் பாரீஸ் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் பிருந்தாவன் சர்க்கிளில் உள்ள பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    பூங்காவிற்கு சென்ற சல்மான் பாரீஸ் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் பூங்காவிற்கு விரைந்து சென்று சல்மான் பாரீசை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சல்மான் பாரீசை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனைப் பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
    • கிருஷ்ணமூர்த்தி கடந்த 14 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது23), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    இதனைப் பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த 14 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

    இதனை பார்த்த அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து திருநங்கை சாவு
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி உறையூர் காவேரி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பால நாகேந்திரன் என்கிற நர்மதா (வயது 27). திருநங்கையான இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டாக்டர் பாபு ஆனந்த், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருநங்கை தீராத வியாதியால் சிகிச்சை பெற்று வந்ததாகவும், வழக்கம்போல் சிகிச்சைக்கு வந்தவர் திடீரென இறந்து விட்டதும் தெரிய வந்தது.

    • நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.
    • இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் ஏற்படும் கரைகளை துடைப்பதற்காக ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மித்திக், இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகனம் ேமாதி புள்ளிமான் உயிரிழப்பு
    • வனப்பகுதியில் புதைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கருப்பண்ணசாமி கோவில் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர், புள்ளிமானின் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.

    • ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.
    • இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாமக்கல்:

    நல்லிபாளையம் காவல் நிலையம் பாப்பநாயக்கன்பட்டி கருங்கல் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ். இவர்தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு கஸ்தூரியின் தந்தை சுந்தரம் உள்ளிட்ட 6 பேர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று கவிதாவுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு வேண்டும் என்று கேட்டனர்.

    அப்போது பிரகாஷின் தாய் பழனியம்மாள் தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை,

    மதுரை புதுராமநாதபுரம் சாலை சிமெண்ட் ரோடு மின்வாரிய அலுவலகம்- மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள குப்பை ெதாட்டியின் அருகில் கடந்த 28-ந்தேதி சிறுகாயங்களுடன் 38 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இறந்த வாலிபரின் பெயர் லக்ஸ்கோ என்று மட்டும் தெரியவந்தது. வலது பக்க நெற்றியில் காயத்தழும்பும், மார்பின் நடுவில் கருப்பு மச்சமும் காணப்படுகிறது.

    வெள்ளை கலர் அரைக் கை சட்டை அணிந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அருகே இரை தேடி ஊருக்குள் வந்த அரிய வகை மரநாய் இறந்தது.
    • காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வைப்பாற்று கரையில் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான்கள், காட்டு பன்றிகள், மிளா, வரையாடு, செந்நாய், உள்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இவை உணவுக்காக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் பகுதியில் நேற்று நாய்கள் விரட்டியதில் தப்பிய விலங்கை அந்த பகுதி வாலிபர்கள் மீட்டனர். பெயர் தெரியாத அரிய விலங்கு பிடிபட்டதாக வெம்பக்கோட்டை கால்நடைத்துறைக்கும், வனத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் கண்ணன் தகவல் தெரிவித்தார்.

    காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர் வந்த வனச்சரக அலுவலர் பழனிக்குமார், கால்நடை மருத்துவர் திலகவதி ஆகியோர் அந்த விலங்கை பரிசோதித்த போது அழிந்து வரும் இனத்தை சேர்ந்த மரநாய் என்பது தெரியவந்தது.

    மேலும் இந்த வகை விலங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இறந்த மரநாய்க்கு 3 வயது என்பதும், பெண் இனத்தை சேர்ந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மரநாய் அருகிலேயே புதைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால் அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

    • மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
    • இதனால் உடல் கருகி வேதனையால் அலறினார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரத்னா (40).

    சம்பவத்தன்று இரவு ரத்னா மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு அருகில் பாய் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பட்டு அருகில் இருந்த மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    இதனால் ரத்னா உடல் கருகி வேதனையால் அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்னா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரத்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மத்திய சிறையில் இருந்த தண்டனை கைதிகள் திடீர் என்று உயிரிழந்தனர்
    • கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த 9-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் அவர் பரிதாபமாக நேற்று இறந்து விட்டார். இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன். இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ந் தேதி ஜெயிலில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார்.ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு சதீஷ் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு வழக்குகளில் குற்றம் நிரூபி க்கப்பட்டு தண்டனைப் பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்ட பட்டு இருந்த நிலையில் இறந்துள்ளார்.

    • தாரமங்கலம் அருகே மனநல காப்பகத்தில் நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.
    • இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள அழகுசமுத்திரம் கிராமம் களர்பட்டியை சேர்ந்த லட்சுமி மகள் ஸ்வேதாமேரி (வயது 17). இவர் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் மயங்கிய விழுந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுபற்றி காப்பக இயக்குனர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×