search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிப்பாறை"

    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.10 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளு குளு சீசன் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித் தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. சுசீந்திரம், ஆரல்வாய் மொழி, தக்கலை, தடிக்கா ரன் கோணம், கீரிப்பாறை பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.25 அடியாக இருந்தது. அணைக்கு 1674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 588 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 66.45 அடியாக உள்ளது. அணைக்கு 873 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றாறு-2-நீர்மட்டம் 8.62 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மாம்பழத்து றையாறு அணையின் நீர் மட்டம் 34.53 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.10 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-75, பெருஞ்சாணி-8, சிற்றாறு- 1-38.2, சிற்றாறு-2-23.6, பூதப்பாண்டி-1.2, களியல்- 20.5, கன்னிமார்-12.2, குழித்துறை-9.8, சுருளோடு- 10.4, தக்கலை-9.3, பாலமோர்-16.2, மாம்பழத்துறையாறு-1, கோழிபோர்விளை- 14.6, அடையாமடை-2.2, முள்ளங்கினாவிளை-8.2, ஆணைகிடங்கு-18.2.

    • விவசாய அமைப்புகள் மரியாதை
    • திருவட்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் 1895 ஆண்டு தொடங்கி 1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பிரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார். இவரது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைத்தது. பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் பிறந்தார்.

    1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்மதிப்பால் மன்னர் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவிலிருந்து ஊர்வலமாக எடுத்து வர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதேபோன்று 154-வது பிறந்த தினமான நேற்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக சென்று மலரஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர். விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், மாவட்ட உற்பத்தி குழு உறுப்பினர் ஹென்றி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், துணை தலைவர் பீனாகுமாரி திருவட்டார் ஒன்றிய தி.மு.க. தொண்டரணி முன்னாள் அமைப்பாளர் ஜெறோம், விவசாய சங்க பிரதிநிதிகள் முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • டெம்போ டிரைவர் பலி
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38) சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும் சிவஜித் என்ற மகனும் உள்ளனர்.

    இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி சென்றார். திருநந்திக்கரை செங்கோடு பகுதியில் சென்ற போது, சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ராஜேஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நடவடிக்கை
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு கணிச மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் களியல், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகளவு வரும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.64 அடியாக இருந்தது. அணைக்கு 1560 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 1000 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.27 அடியாக உள்ளது .அணைக்கு 1127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.63 அடியாக உள்ளது. அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.73 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    • அணைகளுக்கு நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்தது
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட் களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவ தும் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய் தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்த வாறு சென்றனர். காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி, தக்கலை, குலசேகரம் பகுதிகளிலும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    பேச்சிப்பாறையில் அதிக பட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சி பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சி பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.31 அடியாக உள்ளது.அணைக்கு 1321 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 572 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 976 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.04 அடியாக உள்ளது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 12.13 அடியாகவும் பொய்கை அணையின் நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் சாரல் மழை யின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது.திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி யில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    • குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள்
    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை, பேச்சிப் பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குன்னுவிளை, சானல்கரை, சாஸ்தான்குளம், கோட்டை குளம், மணிவிளை, வட்டியூர் கோணம், கட்டச்சல், வைகுண்டம், நெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை துணை கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (4-ந் தேதி) மற்றும் செவ்வாய், புதன்கிழமைகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சாங்கை, கல்லுத்தொட்டி, ஈடன் கார்டன், நாகச்சன்விளை, சீனிவிளை, பாட்டவிளை, பிராணிவிளை, குஞ்சாலுவிளை, தச்சூர்கோ ணம், குழிஞ்ஞான்விளை, மீனச்சல், மேலோட்டுவிளை, செம்மன்காலை, மடத்து விளை, நடப்பாறவிளை, நுள்ளிக்காடு, கண்ணன்புரம், பேயோட்டுகோணம், ஆலம்பாறை, செறக்கோ ணம், கட்டச்சல், சிற்றாற்ற ன்கரை ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாங்கை, கோட்டகம், பாண்டி யான்விளை, காஞ்சிரகோடு, நரியன்வி ளை, படப்பாறவிளை, இடை விளாகம், கல்நா ட்டி, தலக்கோணம், மங்க லத்துவிளை, மலை க்கோயில், நாகராஜாகோவில், கருந்தூர், பூதப்பிலாவிளை, பணியன்விளை, பனவிளை,

    ஈந்திக்காலை, மலமாரி, குளவிளை, குருவிக்குந்நு, வைகுண்டம், அரகநாடு ஆகிய பகுதிகளுக்கும், புதன்கிழமை (ஜூலை 6) ஆம் தேதி மார்த்தாண்டம் சந்தை, பஸ் நிலையம், ரயில் நிலையம், மதிலகம். வால்குளம் விளவங்கோடு, புலிப்பாறைகாவு, ஈத்தவிளை, பாலவிளை, தேவிநகர். குரூர், தெற்றிவிளை. மழுவன்சேரி, காமராஜ்நகர், தெங்கம்பழஞ்சி, பாஞ்சிவிளை, அதங்கோடு, ஆயவிளை, நாரகத்தன்குழி, குருவில்விளை,

    பாக்கோடு, தெக்கே கோணம், தோலடி, ஆயோட்டுகோணம், மச்சக்கோணம், மாங்காலை, கிலாத்தூர், சிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×