search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார்.
    • விழாவில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய வெங்காடம்பட்டி ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொருள்செல்வி, சரஸ்வதி, தமிழ்செல்வி, விஜயா அம்பிகா, குருசாமி, நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வை யாளர் கார்த்திகேயன், திடக்கழிவு மேலாண்மையின் ஒருங் கிணைப்பாளர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் மயிலரசன், அரசு ஒப்பந்ததாரர் குமார், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    • தோரணமலை முருகன் கோவிலானது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட கோவிலாகும் ஆகும்.
    • விழாவில் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமையும், பழமையும் உடைய கோவிலாகும்.

    தோரணமலை முருகன் கோவில்

    தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, ரெயில்வே காவல்துறை போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக சுற்று வட்டார கிராமப்புறம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் திறனை மேம்படுத்தும் மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கான மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ள மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் எலும்பு- மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    நீளம் தாண்டுதல்

    விழாவில் திரளான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்பட பயிற்சிகளை திறம்பட செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மைதானம் அமைத்துக் கொடுத்த கோவில் நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. ‌
    • நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்யலாம்.

    கடையம்:

    கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்டு ள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையம் வட்டாரத்தில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடனா மற்றும் ராமநதி அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.

    இந்த காலகட்டத்தில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்ய நெல் நாற்று விடும் பணி நடக்கிறது. பின்வரும் காலங்களில் மழை பெய்ய தவறி விட்டால் நெல் பயிரை காப்பாற்ற முடியாது. எனவே விவசாயிகள் குறைந்த வயது நெல் ரகங்களான ஐ.ஆர். 50, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்கள் அல்லது தண்ணீர் தேவை குறைவாக உள்ள உளுந்து, சோயா மொச்சை, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து தண்ணீரை சேமித்து கொள்ளலாம்.

    மேலும் நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நாற்று பாவி நடவு செய்யாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் நெல் பயிரை அறுவடை செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகராஜ் வைத்திருந்த செல்போனை 2 மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • கருத்தபாண்டி என்ற கார்த்தி,மருதுராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 26). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிச்சென்றனர். அதில் அவர் ரூ.3 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.

    இந்நிலையில் செல்போன் திருட்டு போனது குறித்து அவர் அளித்த புகாரில் ஆழ்வார்க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி அதே கிராமத்தில் வசிக்கும் கருத்தபாண்டி என்ற கார்த்தி மற்றும் இடைகாலை சேர்ந்த மருதுராஜ்(வயது 20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். கைதான கார்த்தி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.
    • இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்ராப்பகுதியான பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், மந்தியூர், நரையப்பபுரம், அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், ஒட்டல் நடத்துபவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த மின்வெட்டால் இரவு நேரங்களில் வீடுகளில் பெண்கள் சமைக்கவும் மற்றும் தூங்கும்போது மின்விசிறியை இயக்க முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் போதிய மின் பணியாளர்களை நியமிக்கவும், மின் வெட்டை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    கடையம்:

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கோபி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நுண்ணீர் பாசன திட்ட மானியம்

    கடையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான் பாசனம் வழங்கப்பட உள்ளது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டேர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்களில் பதிவு செய்து, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான தாசில்தாரிடம் பெறப்பட்ட இணையதள சான்று உள்ளிட்ட அனைத்தையும் கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.

    திட்டத்தின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கு முன் மானியம் பெற்ற விவசாயிகளுக்கு புதிதாக சொட்டுநீர் பாசனம் இந்த நிதி ஆண்டில் அமைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.

    கடையம்:

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அ.முகைதீன்பீவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணிக்கு கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார்.
    • பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கடையம் போலீசாரும் இணைந்து உலக போதை பொருள் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குளோரி தேவ ஞானம் வாழ்த்தி பேசினார்.

    கடையம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் ஊரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதில் கடையம் பெரும்பத்து தொழில் அதிபர் பரமசிவன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.
    • ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமையில் செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஏ.பி. நாடானூர் அழகுதுரை, பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், மேலஆம்பூர் ஊராட்சி குயிலி லட்சுமணன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் மற்றும் ரவணசமுத்திரம் முகமது உசேன், தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம், பாப்பான்குளம் முருகன் கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிர்வாகம் சம்பந்தமாக அடிக்கடி கூட்டம் வைப்பதால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கடையம் பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் மடைகள் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், ராமநதியில் இருந்து இரண்டாத்துமுக்கு வரை செங்கல் சூளையில் உள்ள மோட்டார்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்க முடியும். ராமநதி, கடனாநதி ஆறுகளில் உள்ள சீமை கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் விபத்து நடைபெற்றது.
    • இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்கள்

    கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் களக்காட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

    இது போன்று குற்றா லத்தில் பள்ளி செல்லும் சிறுவன் மீது வாகனம் ஏற்றி விபத்துக் குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறான். அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

    இது போன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு, பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாத சாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகிற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

    திரும்ப பெற வேண்டும்

    இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

    எனவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு- பகலாக குவாரிகள் இயங்குவதை பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒரு விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • முகாமில் விதை சான்று அலுவலர் சந்துரு மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள துப்பாக்குடி பஞ்சாயத்து அம்மன் கோவில் வளாகம், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து செல்லபிள்ளையார்குளம் கிராமத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினர்.

    கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி முன்னிலை வகித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

    ஆர்.வி.எஸ். ஆராய்ச்சி மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுகுமார், ஆலங்குளம் விதை சான்று அலுவலர் சந்துரு, உதவி விதை அலுவலர் சேர்மன், வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் கருப்பசாமி, கால்நடைத்துறை சார்பில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் இசக்கி முத்து, தோட்டக்கலை உதவி அலுவலரும், துப்பாக்குடி நோடல் அதிகாரியுமான கோவிந்தராஜ், வேளாண்மை உதவி அலுவலரும், அணைந்த பெருமாள் நாடானூர் நோடல் அதிகாரியுமான தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மாரியப்பன் என்ற விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப் பட்டது.

    வி.எஸ்.டி, இயற்கை அக்ரோ நிறுவனங்கள் மூலம் வேளாண் கருவிகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.

    மேலும் கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள மற்ற பஞ்சாயத்துகளான திருமலையப்பபுரம் முதலியார்பட்டி, தெற்கு மடத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம், பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    • குட்டிகுளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகிறது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது குட்டி குளம். இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது.

    இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    ×