search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
    • புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துக்குட்பட்ட வெய்க்காலிபட்டியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் உள்பட பல பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் ஏற்பாடு செய்திருந்தார்.

    விழாவில் நலத்திட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் புதிய அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் விழாவில் கடையம் பெரும்பத்து பகுதியில் வாறுகால் இல்லாத பகுதிகளில் வாறுகால் அமைக்க கோரிக்கை மனுவை அமைச்சரிடம் கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் சுதாசின்னதம்பி, மைதீன் பீவி , மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன், ஜெயக்குமார், தொழிலதிபர் பரமசிவன், ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார், ரம்யா ராம்குமார், முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அசன் பீவி மற்றும் கவுன்சிலர்கள் பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகனரக கனிமவள வாகனங்கள் புளியரை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகனரக கனிமவள வாகனங்கள் செல்வதால் அதிகாலை 3 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அவ்வழியாக பஸ்சில் செல்லும் பொதுமக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

    எனவே முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு அதிகனரக வாகனங்கள் செல்வதை தடுத்து போக்குவரத்தை சீர் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கோவிந்தபேரி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டி. கே. பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ருக்மணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன் , ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தென்னங்கன்று நடுதல், வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்குதல் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் இசேந்திரன் ,வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டி, இளவரசி, பொன்னுத்தாய்,நாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கரவேல், கிராம உதவியாளர் சக்தி,வேளாண் அலுவலர் ஜெகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மூக்காண்டி , ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ரேசன்கடை பணியாளர் மங்களம், மாரித்துரை ,ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன், முன்னாள் தலைவர் சி. ராசு,முன்னாள் துணைத்தலைவர் கணேசம்மாள், முருகன், செல்லப்பா, சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

    • கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் குழந்தைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

    கடையம்:

    கடையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்படு வதை தடுக்க கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமையில் ஏராளமான போரா ட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பூமிநாத் மகன் அஸ்வின் சுவநாத் மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் மகள்கள் சுப பிரியங்கா (வயது 11), சுபிதா (8) ஆகிய 3 பேரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். மேலும் தமிழ்ப்புத்தாண்டு நாளை முன்னிட்டு பட்டினி போராட்டம் நடத்த இருப்ப தாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 3 பேரும், அவரது பெற்றோருடன் கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதி இல்லாத காரணத்தினால் பூமிநாத், சந்திரசேகர், கீழக்கடையம் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து குழந்தைகள் 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று பட்டினி போரா ட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அம்பை எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்புச் சங்க தலைவருமான ரவி அருணன், செயலாளர் ஜமீன், தெற்கு கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அந்த குழந்தைகளை சந்தித்து ஜூஸ் வழங்கி, பேச்சு வார்த்தை நடத்தி போராட்ட த்தை கைவிட செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றவர்களும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டதால் அங்கேயும் இவர்கள் சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஜூஸ் வழங்கினர். தொடர்ந்து மாலையில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    • முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார்.
    • டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் ஐந்தாங்கட்டளை ஊராட்சி பகுதியில் மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    காசநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் வெள்ளைச்சாமியின் ஆணைக்கிணங்க நடைபெற்ற முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில் பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் விஜயராணி, இடைநிலை சுகாதார பார்வையாளர் செல்வ ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சாமுவேல் ஞானராஜ் செய்திருந்தார்.

    • இரப்பனையில் இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது
    • கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    கடையம்:

    கடையம் - தென்காசி சாலையில் இரப்பனையில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பெயர்ந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கட்டிடத்தால் தகனம் செய்யும் போது, இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இறந்தவர்களை தகனம் செய்யும் நேரத்தில் பலர் அப்பகுதி அருகே நிற்கின்றனர். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்தால் பல உயிர்சேதத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புது மயான கட்டிடம் கட்ட சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தர்மபுரம் மடம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி, ரூ. 7 லட்சத்து13 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை திறப்பு விழா மற்றும், சமையல் கூடம், ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், சசிகுமார், மோகன், அர்ஜுனன், முருகன், இளங்கோ, அந்தோணி சாமி, முல்லையப்பன், அந்தோணி தாமஸ் அருள் சதாம் உசேன், ஜஹாங்கீர், முருகன் முத்தையா, பக்கீர் மைதீன், பிவி கோதர் மைதீன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல், சங்கர், ரம்யா ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் சன்னத் ,சதாம் முகமது உசேன், வளர்மதி சங்கரபாண்டியன், மகேஷ் பாண்டியன் அல்லாஹ் பிச்சை, ஆர்.எஸ். பாண்டியன், செல்வராஜ், கணேசன் , முருகன், பாலமுருகன், சுபேர் மேசியா சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் மன்சூர் அலிகான் பணியாற்றி வருகிறார்.
    • கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலிகான் (வயது 45). இவர் தென்காசியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

    நகை-பணம் கொள்ளை

    இதனால் அவ்வப்போது மட்டும் முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார். சமீபகாலமாக வாரத்தில் ஒருநாள் முதலியார்பட்டிக்கு வந்து நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு அவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.7 லட்சம் பணம் மற்றும் 28 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    விசாரணை

    இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாய் சிறிது தூரம் அங்கும் இங்குமாக ஓடியது. அப்பகுதியில் உள்ள 2 தெருக்களில் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    சி.சி.டி.வி. ஆய்வு

    இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இப்பகுதியில் ஆட்டோ பேட்டரி, செல்போன் திருட்டு என சுமார் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இன்று ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கிராமசபை கூட்டம்

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிராமசபைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே சிறப்பு கிராமசபை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று (17-ந் தேதி) கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இன்றும் கிராமசபைக்கூட்டத்தை 2- வது முறையாக மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் இருந்து சட்டத்தை மீறி கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

    கடையம்:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் தமிழ கத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விதிகளையும், மோட்டார் வாகன சட்டத்தையும் மீறி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளை சர்வே செய்ய வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான குவாரிகள் சட்ட விதிகளை மீறி தான் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு கனிமவள கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கனிமவள கடத்தலை தடுக்க உதவாது. சாலை பாதுகாப்பு விதி களையும், மோட்டார் வாகன சட்டத்தையும், கனிமவள சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கனிமவள கடத்தல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மாநில எல்லையில் வருவாய்துறை, கனிமவளத்துறை, போக்கு வரத்துத்துறை, காவல்துறை செக்போஸ்டுகள் இருந்தும் கனிமவள கடத்தல் தொடர்கிறது.

    அதிகனரக வாகனங்களில் விதிகளை மீறி அதிக பாரத்துடன் கனிமங்கள் ஏற்றி செல்வதால் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சாலையில் பயணிக்கவே அச்சப்படு கின்றனர். கனிமவள கடத்தல் தொடருமானால் வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை இன்னும் 10 ஆண்டுகளில் உருவாகி, வருங்கால சந்ததியினர் வெளி மாநிலத்தில் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    எனவே அரசு கனிமவள கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
    • கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கடையம்:

    பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.

    பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
    • பொதுமக்களின் நலன் கருதி சார்பதிவாளரை இடமாறுதல் செய்யக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கடையம்:

    ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த சார்பதிவாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பின்னர் சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இளநிலை உதவியாளர் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மேலப்பாளையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த குமரேசன் என்பவர் பதவி உயர்வு பெற்று கடையம் சார்பதிவாளராக நியமிக்கப் பட்டார். இவர் சார்பதிவாளராக பதவி ஏற்ற பின்னர் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார். மேலும் போலி பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் இருப்பதுடன், அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நேர்மையாக செயல்படும் இச்சார்பதிவாளரை சிலர் தங்களது சுய நலத்திற்காக வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நேர்மையாக செயல்படும் சார்பதிவாளரை மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×