என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224731"
- ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.
- ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷியா வைத்திருந்து உள்ளது.
அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.
ரஷிய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்து உள்ளன. உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்து, துன்புறுத்தியும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் பல கொடுமைகள் நடந்து உள்ளன.
ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர். இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதலால் அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. பெண் ஒருவரின் உடலை உக்ரைனின் அவசரகால குழுவினர் மீட்டனர். இந்த ஏவுகணை வீச்சில் குழந்தை ஒன்றும் உயிரிழந்து உள்ளது. ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷியாவை குறிப்பிட்டார்.
ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது.
- உலக பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என நான் நம்புகிறேன்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர்.
இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தி இருந்தார்.
இதை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சீன அதிபரை சந்திக்க முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாடு மட்டுமே எந்தவொரு அமைதி முயற்சியையும் தொடங்க முடியும். நான் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இது உலக பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்கும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என நான் நம்புகிறேன்.
மூன்றாம் உலகப்போரின் அபாயத்தை தவிர்ப்பதற்காக ரஷியாவுக்கு சீனா ஆயுத வினியோகத்தை தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு.
- ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. கடந்த 10 மாதத்துக்கு மேல் உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் காரணமாக உக்ரைனில் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டினர் வெளியேறிவிட்டனர். ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உணவு விடுதி நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலா சங்கர் என்பவர் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்.
அவர் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு மருந்து பொருட்கள், ஹெல்மெட்கள், வெப்ப உடைகள், ஷூக்கள், குண்டுகள் துளைக்காத உடைகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றை அங்குள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்று சேர்த்து வருகிறார்.
போர் மேகம் சூழ்ந்துள்ள சாலைகளில் அவர் பயணம் செய்து ராணவத்தினருக்கு உதவிகள் செய்கிறார்.
இது தொடர்பாக பாலா சங்கர் கூறும்போது, 'எனக்கு வாழ்க்கை தந்த நாட்டை இக்கட்டான காலத்தில் கைவிடமுடியாது. இந்தியா எனது தாய்நாடு, உக்ரைன் எனக்கு வாழ்க்கை தந்த நாடு. நான் என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்புகிறேன்' என்றார்.
போர் ஆரம்பித்த கால கட்டத்தில் பாலா சங்கர் தனது உணவு விடுதி மூலம் பலருக்கு உணவு வழங்கி உதவி செய்தார். பாலா சங்கரின் இந்த ஆபத்தான சேவையை அவரது குடும்பத்தினர் நினைத்து அச்சத்தில்ல் உள்ளனர். எனினும் பாலாசங்கர் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.
அவரது சகோதரர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டனர். மனைவி மற்றும் மகன் போலந்து நாட்டிற்கு இடம்மாறி உள்ளனர். பாலா சங்கர் கடந்த 2013-ம் ஆண்டு மருத்துவமாணவராக உக்ரைன் நாட்டுக்கு சென்று இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை ரஷியா இணைந்த இணைந்த பிறகு இது அவருக்கு 2-வது போர் ஆகும். படிப்பை முடித்த பிறகு பாலா சங்கர் உக்ரைன் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றார். மேலும் உணவகத்தை தொடங்கி நடத்தினார்.
கடந்த 2015-ம் ஆண்டு அவர் கார்கிவ் தமிழ்ச்சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு இதனை தனது மகன் மாறன் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
- ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதமாக நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த போரால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரஷியா அறிவித்த 36 மணி நேர போர் நிறுத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
இதைதொடர்ந்து மீண்டும் ரஷியா தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. உக்ரைன் வீரர்களும் அவர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
உக்ரைன் வீரர்களின் தற்காலிக ராணுவதளத்தின் மீது அடுத்தடுத்த ராக்கெட்டுகளை வீசினார்கள். இதில் ராணுவமுகாம் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ரஷியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு 600 உக்ரைன் வீரர்கள் இறந்ததாக ரஷியா தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கிராம டோர்லக் மேயர் தெரிவித்து உள்ளார்.
ஒரு புறம் இருநாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து வந்தாலும் மறுபுறம் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் பணியும் நடந்து வருகிறது. உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷிய வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் ரஷிய படைகளிடம் சிக்கிய 50 உக்ரைன் வீரர்களையும் அந்த நாடு விடுவித்து இருக்கிறது. இதுவரை 36 முறை கைதிகள் பரிமாற்றம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது.
- உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷியா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷியா வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது.
உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.
- புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா தொடர்ந்து நடத்திவரும் மும்முனை தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.
பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷியபடைகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில் புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் மின் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை வீச்சில் சேதவிவரம், உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
- படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.
கீவ்:
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:
உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.
இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
- கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.
இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.
அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.
- ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
- உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.
இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்.
- மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
ரஷிய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைனிடம் ரஷிய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
பின்பற்ற மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகளுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் புதினின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உக்ரைனிடம் ரஷிய வீரர்கள் சரண் அடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு சரண் அடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று ரஷிய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்
- உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது.
- உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷியா கடும் கோபத்தில் உள்ளது.
கீவ்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் படையினரும் அசராமல் போரிட்டு வருவதால் போர் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் தற்போது அந்த நகரங்கள் ஒவ்வொன்றாக உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் உக்ரைனை பிடிக்கும் ரஷியாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷியா கடும் கோபத்தில் உள்ளது. இந்தநிலையில் உக்ரைனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 லட்சம் வீரர்களை உடனே பணிக்கு திரும்பு மாறு ரஷியா அறிவித்து உள்ளது.
இந்த உத்தரவு பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடந்த 2 நாட்களாக வீதிகளில் இறங்கி பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட னர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த புதிய உத்தரவால் பீதியடைந்த முன்னாள் படை வீரர்கள் நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்து விமான நிலையங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது.
இது பற்றி அறிந்த ரஷிய அரசு 18 வயது முதல் 65 வயதுடையவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து உள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட் வழங்க கூடாது என விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் உக்ரைன் போரில் 55 ஆயிரம் ரஷிய வீரர்கள் இறந்து உள்ளனர். உக்ரைனில் நடக்கும் இந்த குற்றம், கொலைகள் மற்றும் சித்ரவதைக்கு நீங்கள் உடந்தையாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் இது போன்று நடக்கிறது.
இந்த போரால் ரஷியாவை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள், மகன்கள், பேரக்குழந்தைகளை இழந்து தவிக்கிறார்கள். ஒரு மனிதருக்காக (புதின்) இந்த போர் நடந்து வருகிறது. இப்போது தான் உங்களுக்கு சரியான நேரம் கிடைத்து இருக்கிறது. ரஷியாமக்கள் வாழ்வா? சாவா? என்பதை தேர்ந்தெடுத்து எதிர்த்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்