search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • பெரம்பலூரில் பாலம் அகலப்படுத்தும் பணியினை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்
    • 8 மாதத்திற்கு முன்னதாக முடிக்க அறிவுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு பகுதியில் சாலையின் கீழ் (சப்-வே) பாலம் குறுகியதாகவும், மழைக்காலங்களில் வாகனங்கள் சென்றுவர இயலாத நிலையில் இருந்தது. ஏற்கனவே இருந்த பாலத்தினை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், 5 மீ.அகலம், 2.5 மீ. உயரத்துடன் 37 மீ. நீளத்திற்கும் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக அகலப்படுத்தி சர்வீஸ் சாலை அமைப்பதின் முதல்கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கலைவாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணி 8 மாதத்திற்கு முன்னதாக முடிக்குமாறும், பணியை தரமாக மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் தமிழ்அமுதன், இளநிலை பொறியாளர் ராஜா, சாலை ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்,

    திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37, எம்.பி.சி, பி.சி.யினருக்கு 34, ஓ.சி.யினருக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை வருகிற 13-ந் தேதிக்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
    • இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அழகர் மலையில் உள்ள முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் நல்லதம்பி, மேலூர் ஆய்வா ளர் அய்யம்பெருமாள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

    இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
    • விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    சேலம்:

    கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி படிப்பவர்கள் உதவித் தொகை பெற நெட்- யு.ஜி.சி. தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சிக்கான நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு-2023 அறிவிப்பு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    தமிழ்நாட்டில் இந்த தேர்வு அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, ேகாவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருது நகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இந்த மையங்களில் வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ண ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.1150, ஓபிசி., பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    • தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    தமிழக மின் வாரியத்தில், உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக , கேங்மேன் பணிக்கு 10 ஆயி ரம் பேர் தேர்வு செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

    எழுத்து தேர்வில் பங்கேற்று வேலை கிடைக் காத 5,400 பேர் வேலை கேட்டு, 2 ஆண்டு களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சி னைக்கு தீர்வு காண, செய லர், 3 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழுவை, மின் வாரியம், கடந்த ஆண்டு நியமித்தது.

    அக்குழு ஆய்வு செய்து, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 54 ஆயிரம் காலி பணி யிடங்கள் இருப்பதால், எழுத்து தேர்வில் பங்கேற்று விடுபட்ட 5,400 பேரை வேலைக்கு நியமிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    பொறுப்பாளர் அக்கிம்பாபு புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அக்கிம்பாபு பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    அதிமுக குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு நியமிக்கபட்டு உள்ளார்.

    அவர் பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் ஆலோசணை மேற்கொண்டு பாசறை மகளிர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார்

    உடன் மேற்கு ஒன்றிய செயலாளரா சக்கஸ்சந்திரன் ,உதகை நகர பாசறை துணை செயலாளர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    • ரூ.1.2 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது
    • புகழூர் நகராட்சி பகுதியில் தொடங்கியது

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.விழாவிற்கு புகழூர் நகர் மன்ற தலைவர் நொய்யல் சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு புகழூர் நகராட்சி வார்டு எண்: 2,3,4,6,7,9,11,12, 17,20,22,24 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். விழாவில் மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.63 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதி வாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்-மதனத்தூர் இருவழிச்சாலையை 21 கி.மீ. வரை அகலப்படுத்துதல், 26 கி.மீ. நீளத்தில் அமையப்பெற்ற சிறுபாலத்தை திரும்பக் கட்டுதல், வடிகால், தடுப்புச்சுவர் மற்றும் சென்டர் மீடியன் கட்டுதல், கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ரூ.63 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணியினை கூவத்தூர் கிராமத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்திராண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் அருகே மூங்கில்பாடி பட்டு குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தூய்மையினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களது கிராமங்களை இளைஞர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தூய்மைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது தான் நம்ம ஊரு சூப்பரு திட்டம்.பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தும் பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மூங்கில்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பட்டுக்குளத்தினை கலெக்டர் கற்பகம், உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இப்பணியில் இளைஞர்கள் ஆர்வமுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டு குளத்தினை தூய்மைபடுத்தினர்.மேலும் கழிவு நீர் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி, அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம ஊராட்சி சேவை மையம், சத்துணவு மையம், நூலகம், மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • கடலூர் மாவட்டம் கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் கட்டபடவுள்ள புதிய கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக் குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் ரூ.7 கோடியே 97.50 மதிப்பீட்டில் புதியதாக கட்டபடவுள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு குமராட்சி ஊராட்சிக்குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் 4.02 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் , செயற்பொறியாளர் தொழில்நுட்ப பிரிவு கோட்டம் (தஞ்சாவூர்) பாலசுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டன

    • சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருச்சி அருகே ரூ.50 கோடியில் நடைபெறும் மேம்பால பணி
    • தேசிய நெடுஞ்சாலைத்துறை உறுதி

    திருச்சி,

    திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு பின்னர் மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்தின் எதிர்ப்புறம் கணேசா ரவுண்டானாவைச் சுற்றி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதில் பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். கூர்மையான வளைவுகளுடன் இருந்ததால் வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.50 கோடியில் அந்தப் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கியது. மேலும் அந்த இடத்தில் அமைந்திருந்த ரவுண்டானாவை இடித்து அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெல் நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்காக முழுமையாக வளர்ந்த சில மரங்களை சாலை ஓரத்தில் இருந்து முதல் வளாகத்தின் உள்பகுதிக்கு இடம் மாற்றம் செய்தனர்.இந்த மேம்பால திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டில் தொடங்கியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் கடந்தாண்டு தொடக்கத்தில் பணிகள் வேகம் எடுத்தன. தற்போது பாலத்தின் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ளன.இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்த மாதத்தில் இல்லாவிட்டாலும் ஜூன் மாத நடுவில் பணிகள் முடிவடையும். இந்த நெடுஞ்சாலை ஒரு பெரிய அளவிலான போக்குவரத்தை வழங்குகிறது என்றார்.பெல் தொழில்துறை வளாகம் மற்றும் டவுன்ஷிப் அமைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பெல் ஊழியர்கள் தங்கள் பயணத்திற்காக ஒவ்வொரு நாளும் நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் இந்த மேம்பாலம் பெல் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விரைவாக கடந்து செல்லவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×