search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.
    • நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பணிச்சுமையால் மரணம் அடைந்த மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலக உதவியாளர் அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதில் வடக்கு வட்ட செயலாளர் ஜெய்ராஜ், மாநில செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் மாநில தலைவர்பன்னீர்செல்வம், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
    • ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.

    மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.

    ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

    இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

    • ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம், கருப்பட்டாங்குறிச்சி, அத்தியூர், லெப்பைக்குடிக்காடு கீழப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம், தலைமையில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், லெப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி மற்று ம் ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொட ங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைியனை விரைவில் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்க எடுக்கப்படும். சிறுபான்மையினர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்

    • 1484 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளது
    • காரைப்பாக்கம் மாரியம்மன் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடும் செய்யும் பணிகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்காக நில அளவை குழுக்கள் அமைக்கப்பட்டு, நவீன நில அளவை கருவி கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1484.58 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை, ஆலயநிலங்கள் வட்டாட்சியர் கலைவாணன், திருமானூர் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு செய்து, நில அளவீடும் பணியை தொடங்கினர்.

    • பேவர் பிளாக் கற்கள் பதித்து பாதுகாப்பான பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படும்
    • பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    திருச்சி,

    திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கின்றோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறு, சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

    • தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
    • 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.

    இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.

    ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    • சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணிபுரிய வக்கீல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லீகல் எய்ட்டு டிபன்ஸ் கவுன்சில் சிஸ்டம் என்ற பிரிவிற்கு தகுதி வாய்ந்த வக்கீல்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம். இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித்தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும்
    • மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுக விரிவாக்க பணிகள் உட்பட பல்வேறு கோரிக்கை குறித்து முதல் வரை சந்தித்து குமரி மாவட்ட மக்கள் சார்பாக. விஜய்வசந்த் எம்.பி மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருவதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித் தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும். அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    குமரிமாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு கேரள அரசுடன் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும்.

    வனத்துறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து ரப்பர் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரப்பர் மரங்களை வெட்டி மாற்றுவதற்கு கேரள அரசு கொண்டு வந்ததுபோல் சட்ட திருத்தம் வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறார்களும், இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு அரங்கம் தேவை. மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு தொழில்நுட்ப பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்
    • ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்கம்

    குளித்தலை, 

    குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளான ஆலத்தூர் ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூபாய் 10 லட்சம், ராச்சாண்டர் திருமலை ஊராட்சி பகுதிகளான மேல வாளியம்பட்டியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட ரூபாய் 7 லட்சத்திலும், பில்லூர் ஊராட்சி பகுதிகளான கரிச்சான் பட்டி பகுதி வரை ரூபாய் 24 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணிக்கும், கழுகூர் ஊராட்சி பகுதியில் கே துறையூரில் புதிய நியாய விலை கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 7 லட்சம் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ரூபாய் 48 லட்சம் மதிப்பில் நடைபெற்ற பூமி பூஜையை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்,நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பள்ளிப்பட்டி கருப்பையா, தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கூழிபிறை பசுமை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது
    • 31இடங்களில் பணி நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நமக்கு நாமேதிட்டம் -பசுமை கூழிபிறை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி சீரமைப்பு பணி நடைபெற்றது. புதிய வடிகால் கால்வாய்கள், ரவுண்டு சிமெண்ட் பைப் காலவாய்கள்,வீதி பாலங்கள்(கால்வாய்கள்) அமைக்கும் பணி நடைபெற்றது. சாமி ராமதாச கல்யாண மண்டபம், குழிபிறைப்பட்டி, பஞ்சாயத்து அலுவலக தெரு, சத்தியமூர்த்தி வீதி, புத்தூரணி, பூங்காநகர், அம்மன் சந்நிதி தெரு, பொற்றாமரை நீர்நுழைவு, நீர் அவுட்லெட், கண்ணாடி வீரப்பசெட்டியார் வீதி, சிவன்கோவில், சந்திகருப்பர் கோவில், புதிய சந்தை உள்ளிட்டி 31 இடங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

    • ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆய்வு.
    • ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மான்ய நிதியின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் குஜாரத் கெமிக்கல் லிமிடெட் மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

    ×