search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று"

    • பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது
    • நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படுத்துவதால் விரைவில் மரம் வளரும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நடப்பாண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    இந்த பணியை நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

    கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்று வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், மரக்கன்று நடும் இடங்களை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    நகரை பசுமையாக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், காற்று மாசுவை குறைக்கவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    இதற்காக பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்ய ப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்:-

    பலன் தரும் மகாகனி, வேங்கை, மருது, நிழல் தரும் வேம்பு, புங்கன், முள்ளில்லா மூங்கில் கன்றுகள் நடப்பட உள்ளது.

    நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படு த்துவதால் விரைவில் மரம் வளரும்.

    இப்பணியை சேவை அமைப்புகள், தன்னார்வ ளர்கள் மூலம் செய்யப்பட உள்ளது.

    இதனால் நகரம் விரைவில் பசுமையாகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

    நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர் வசந்த், முன்னாள் கவுன்சிலர் ராமு, சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திடீரென மதியம் 3 மணி அளவில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
    • திடீரென பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர், கோவிந்தநத்தம், தச்சன் வயல், ராதாநரசிம்ம புரம், ராஜகோபால புரம், தென்பரை, பாளையக்கோட்டை, மேலநத்தம், கன்னியாகுறிச்சி, எளவனூர் ஆகிய கிராமங்களில் காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது.

    திடீரென மதியம் 3 மணி அளவில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    • காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
    • காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.

    சிவகிரி:

    சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.

    • நீர், நிலம், காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
    • நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திரி பப்ளிக் பள்ளி சார்பில், மாணவ-மாணவிகள் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    கல்வி அறக்கட்டளை நிறுவனர் கியாந்சந்த் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார், மகேஸ்வரி, சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் நீர்,நிலம்,காற்று மாசு படுவது குறித்து பொது மக்க ளிடையே விழிப்பு ணர்வை நாடகம் மூலம் நடத்தினர்.

    மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்

    • நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது.
    • சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்து தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

    நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

    சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்து தொடங்கியது.

    ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.

    தஞ்சை, வல்லம், ஒரத்தநாடு, பாபநாசம், வெட்டிக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 85.80 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு மி.மீ.யில் வருமாறு:-

    வெட்டிக்காடு -19.40, பாபநாசம் -17, நெய்வாசல் தென்பாதி - 9.40, வல்லம் -7, குருங்குளம் -6.80, அய்யம்பேட்டை -4, தஞ்சாவூர்-2.

    • பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
    • கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    நெல்லை:

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    • தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
    • பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டையில் கனமழை பொழிந்தது.

    மாவட்டத்திலே அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.

    இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 349.70 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை 9 மணி வரை முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    பட்டுக்கோட்டை-48,

    அதிராம்பட்டினம்-43.50,

    மதுக்கூர்-42,

    தஞ்சாவூர்-35,

    திருக்காட்டுப்பள்ளி-27.60,

    வெட்டிக்காடு -23.80,

    குருங்குளம் -23.

    • தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
    • மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1 வாரமாகவே கோடை வெப்பம் தணிந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறி கொட்டியது. பின்னர் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை தூறி கொண்டே இருந்தது.

    இதேப்போல் வல்லம், குருங்குளம், திருவையாறு, கும்பகோணம், அய்யம்பேட்டை, மஞ்சளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    இதில் மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 299.70 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    மஞ்சளாறு -66.80, குருங்குளம்-34, தஞ்சாவூர்-25, ஒரத்தநாடு-22.40, நெய்வாசல் தென்பாதி-16.40, வல்லம்-16, திருவையாறு-14, அய்யம்பேட்டை-14.

    • நேற்று இரவு காற்று வாங்குவதற்காக வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
    • நாச்சியார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பழவாத்தான்கட்டளை சேர்ந்தவர் முனுசாமி (வயது 40).

    இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் முனுசாமி நேற்று இரவு காற்று வாங்குவதற்காக தனது வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது காற்று பலமாக வீசியுள்ளது.

    இந்நிலையில் வீட்டின் அருகில் நின்றிருந்த தென்னை மரம் காற்றினால் திடீரென முறிந்து மாடியில் நின்று கொண்டிருந்த முனுசாமி மீது விழுந்தது.

    இதில் அவர் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து மாடிக்கு வந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நாச்சியா ர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்து போன முனிசாமி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடதக்கது.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
    • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

    அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

    நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை.
    • காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் அதிக ஒலி எழுப்பி சென்று வந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் பறிமுதல் செய்து எச்சரித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் போது சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

    காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காற்று ஒழிப்பான்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அதன் படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலை பேரில் சீர்காழியில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் செய்த போது இருபதுக்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிபான்களை பறிமுதல் செய்து இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலக பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

    • மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
    • பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதிர வேலூர், பாலுரான்படுகை பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினமும் பல லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.

    அவ்வாறு, மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் பெரும்பாலும் தார்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்து செல்வதால் காற்றில் மணல் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில இடங்களில் மணல் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர்.

    மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கண், மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    எனவே, மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கட்டாயம் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என குவாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

    அவ்வாறு, தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×