என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225556"
- பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
- தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்கிற அமைப்பு தொடங்கி கடந்த 762 நாட்களாக ரோட்டோ ரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 300 பேருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது.
அட்சயப்பாத்திரம் அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வருகை தந்தார். அங்கு அவர் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்டு பாராட்டி னார். அவருக்கு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு அட்சய சேவா ரத்னா என்கிற விருது வழங்கி கவுரவித்தார்.
பிறகு அவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் சிலை மற்றும் பாதுகைக்கு வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர்கள் சிவ பிரபாகரன், சசி குமார், சசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூகபணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 15.8.23 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர், மருத்துவர், தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் தமிழக முதலமைச்சரால் கோட்டை கொத்தளத்தில் 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
எனவே, மேற்காணும் விருதுகளுக்கு தகுதியான விருப்பமுள்ள நபர்கள் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:6, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவாரூர்-610004 என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் 26.06.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு விருது.
- மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி வழங்கும் நிகழ்ச்சி.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பசுமை சாம்பியன் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணியை 5 வருடமாக சிறப்பாக செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் பாலம் சேவை நிறுவனத்தின் இந்த பணியை பாராட்டி 2022- 23-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதை பாலம் சேவை நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை திருவாரூர் மாவட்ட கலெக்டர் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.
- கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார்.
- சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, 'இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்' என்றார்.
- வருகிற சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- வருகிற 10-ந் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்று திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய தொண்டு நிறுவனம் , சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் வருகிற சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள், நிறுவனங்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து பெற்று அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் (3 நகல்கள்) வருகின்ற 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.14, தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் -613010 ( தொலைபேசி எண் -04362-236791) என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான மணிமேலை விருது பெற புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுயஉதவி க்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர் ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். இந்த விண்ணங்கள் வட்டார அளவில் ஜூன் 25ம் தேதி வரை பெறப்படும்என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
எனவே விருதுக்கு தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- விண்ணப்பங்களை வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் மணிமேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விருதுகள் பெற்றிட தகுதி வாய்ந்த மேற்கண்ட அமைப்புகளிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதுகுறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஊரக வளர்ச்சி துறை அமைச்சரால் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்பு றங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு 2022-23-ம் நிதி ஆண்டு செயல் திட்டத்தின்படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த விருதுக்கு தகுதி யான சமுதாய அமைப்பு களிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் 26.5.2023 முதல் வரவேற்கப் பப்படுகி றது. மேலும் கீழ்க்காணும் காலஅட்டவணையினை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 26.5.2023 முதல் 25.6.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்கள் பெறுதல், 26.6.2023 முதல் 08.7.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் 12 நாட்களுக்குள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். 9.7.2023 முதல் 20.7.2023 வரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகினால் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். 21.7.2023 முதல் 31.7.2023 வரை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவில் ஒப்புதல் பெறுதல்ந நடைபெறும். 20.8.2023 கருத்துருக்கள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 3.8.2023 முதல் 18.8.2023 மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
19.8.2023 முதல் 25.8.2023 வரை மாநில அளவிலான குழுவினால் 6 நாட்களில் விருது பெற்றவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடம் இருந்து 7.7.2023 தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் பகுதி அளவிலான கூட்ட மைப்புகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 காரணிகளின் அடிப்படை யில் தரமதிப்பீடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டுக்கான அரசாணை வரப்பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2022-23-ம் ஆண்டு மணிமேகலை விருது வழங்குவதற்கான ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த விருதுக்கு சமுதாய அமைப்புகளிடமிருந்து வரப்பெறும் கருத்துருக்களை வட்டார இயக்க மேலாளர்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலித்து ஒவ்வொரு சமுதாய அமைப்புக்கும், இறங்குவரிசைப்படி பட்டியல் தயார் செய்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தினத்தையொட்டி சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரால் வருகிற 15.8.2023 நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதியுடைய தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 10.6.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகைய தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இஸ்லாமியா கல்வி நிறுவனங்களுக்கு நவாஸ்கனி எம்.பி. விருது வழங்கினார்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொரு ளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம்
இந்திய நாட்டில் முதல் கல்வித்துறை அமைச்சராக இருந்த அபுல்கலாம் ஆசாத் நினைவாக ஆண்டு தோறும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமையில் கல்வி ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக 4-ம் ஆண்டு கல்வி ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி தனியார் மஹாலில் நடைபெற்றது. நவாஸ்கனி எம்.பி தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொரு ளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், கல்வியில் சிறந்த பயிற்சியாளர், ஆசிரியர், மாணவர்கள் என 150 பேருக்கு கல்வி ரத்னா விருதுகளை நவாஸ்கனி எம்.பி. வழங்கினார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சிறந்த கல்வி சேவையாற்றி வரும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களுக்கு கல்வி ரத்னா விருதும்,துணை முதல்வர் ராமருக்கு நல்லாசி ரியர் விருதும் வழங்கி கவுர விக்கப்பட்டது.
தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இபுராஹிம், முதல்வர் மேபல் ஜெஸ்டஸ், தலைமையாசிரியர் மலைச்சாமி ஆகியோர்களை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட செயலா ளர் முகமது பைசல், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அன்சாரி, துணைச்செயலாளர் ஆசீகட உசேன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் ஆசிரியர்கள், கல்வி யாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்