search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    • மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தி.மு.க. செயலாளர் பேசினார்.
    • மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டினம்காத்தான் தனியார் மகாலில் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் அவைத்த லைவர் சத்தியமூர்த்தி தலைமையில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் பேசிய தாவது:-

    முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை மாவட்ட எல்லையான பார்த்தி பனூரில் எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தபட்சம் 25 ஆயிரம் தொண்டர்கள் வருகை தர வேண்டும்.

    நாம் அளிக்கும் சிறப்பான வரவேற்பு எட்டு திக்கும் பரவ வேண்டும். மன கசப்புகளை தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்பதற்கு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.-மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட துணைச்செயலாளர் ஆதித்தன், மாநில இலக்கிய அணி பெருநாழி போஸ், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மண்டபம் பேரூர் செயலாளர் ரகுமான் மரைக்காயர், கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து வரவேற்றார்,

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன் நன்றி கூறினார்.

    • விழாவில் 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா ஆகியோர் கலந்துகொண்டு 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர் ராஜராஜன், சிறப்பாசிரியர்கள் அனிதா, மேரி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் சுதாகர் நன்றி கூறினார்.

    • செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.

    ராஜபாளையம்

    தீபாவளியொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது.

    செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரெயிலுக்கு ராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணன் தலைமையில் என்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரெயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர்.

    ரெயில் பயனாளர்கள் சங்க செயலாளர் ஹரி, தொழில் வர்த்தக சங்கத் துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயண சாமி, செயற்குழு உறுப்பினர் வாசுதேவ ராஜா மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

    ரெயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலர் பாராட்டப்பட்டனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.
    • செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

    சுவாமிமலை:

    மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை துவக்கம்.மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.மயிலாடுதுறையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

    இதே மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். இன்று 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில் 23 பெட்டிகளை இணைத்து இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை. நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கும்பகோணம் வர்த்தக சங்கத்தினர். மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர்.அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தரணி முருகேசன் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் முன்னோர்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வாழ்ந்து வந்ததன் காரணமாக அவர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக இருந்து வந்தனர் ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான நஞ்சு கலந்த உணவுகளை உட்கொண்டு வருவதனால் ஆயுள் காலங்கள் குறைந்து 50 முதல் 60 வயதிலே சொற்ப காலகட்டத்திலேயே மரணங்கள் அதிகரித்து வருகிறது

    விவசாயி முருகேசன் தனது பண்ணைகளில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் நஞ்சு கலக்காத சிறு தானியங்களை வைத்து இனிப்பு வகைகளை தயார் செய்து தற்போது உள்ள சந்ததிகளை பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இயற்கை அங்காடி நடத்தி விவசாய பண்ணைகளில விளையும் வைக்கும் பொருட்களைக் கொண்டு பல விதமான இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அங்காடியில் கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து செயற்கைக்கு மாற்றாக இயற்கை முறையில் 7 வகையான லட்டுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு கலப்படமும் செய்யாமல் இயற்கை முறையில் பண்ணையில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம் தயார் செய்து வருகின்றனர்.

    இவைகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கலப்படமில்லாமல் உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் சுவையானதாக இருப்பதால் ராமநாதபுரத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளும், பொது மக்களும் தீபாவளிக்காக அதிகளவு நண்பர்களுக்கு கொடுப்பதற்காகவும், குடும்பத்திற்கு பயன்படுத்துவதாகவும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கு என்றே இந்த அங்காடியில் இயற்கை முறையில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டமே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இதற்காக அங்காடியில் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி என்றாலே புத்தாடைக்கு அடுத்த படியாக இனிப்புகளை இறைவனுக்கு படையல் செய்து பின்னர் உறவினர்களுக்கும் வழங்கி பரிமாறிக்கொள்வது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ரசாயன கலப்படமில்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ராமநாதபுரம் பகுதி பொதுமக்களிடம் இந்த புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.


    • நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்.
    • கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    தரங்கம்பாடி :

    மயிலாடுதுறையில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டின் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இதில் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆவணப் படத்தை கண்டு ரசித்தனர்.

    பின்னர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தி.மு.க.வின் ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

    கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன், ம.தி.மு.க நகர செயலாளர் மார்க்கெட் கணேசன், செம்பை ஒன்றிய செயலாளர் குளஞ்சிநாதன், மற்றும் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்.

    • முன்னுதித்த நங்கை அம்மன் இன்று சுசீந்திரம் வந்தடைந்தது
    • தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளி மலை குமாரசுவாமி விக்கிர கங்கள் கடந்த 24-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

    10 நாட்கள் நவராத்திரி விழாவுக்கு பிறகு சுவாமி விக்கிரகங்கள் 7-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டன. வழிநெடுக பக்தர்கள் திரண்டு சுவாமி விக்ரகங்களை வரவேற்றனர். 8-ந் தேதி காலையில் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளைக்கு சுவாமி விக்கிரகங்கள் வந்தடைந்தது.

    தொடர்ந்து குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்,இரவிபுதூர் கடை, சாமியார் மடம், காட்டாதுரை அம்மன் கோவில், அழகிய மண்டபம் , வைகுண்ட புரம், மணலி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வைகுண்டபுரத்தில் தொழிலதிபர் அழகி விஜி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணலியில் கரை கண்டார் கோணம், சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் சுவாமி விக்கிரகங்களுக்கு தால பொலியிட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பத்மநாபபுரம் கோட்டைவாசல் முன் வரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தால பொலிவுடன் தீபமேற்றி வரவேற்பளிக்கப்பட்டது.

    பத்மநாபபுரம் அர ண்மனை வாசல் முன் சுமார் ஒரு மணி நேரம் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் திரண்டு தால பொலியிட்டு சுவாமி விக்கிரகங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின் மண்டபத்தில் அமர்த்தப் பட்டார். வேளிமலை குமாரசாமி, குமார கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன் இன்று (திங்கட்கிழமை) காலையில் சுசீந்திரம் புறப்பட்டார். பக்தர்கள் சிறப்பான முறையில் வர வேற்பு கொடுத்த நிலை யில் மணலி முதல் பத்மநாதபுரம் அண்ணா சாலை முதல் பத்மநாபபுரம் வரை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது.

    இன்று காலை 9.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன், சுசீந்திரம் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி கோவிலை வந்தடைந்ததும், தமிழக-கேரள போலீசார் இசை கருவிகளை முழங்கி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் அணிவகுப்பு மரியாதையும் செய்தனர். அதன்பிறகு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தடங்கம் சுப்ரமணி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
    • 11 வாகனங்களில் அழைத்துச்சென்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தடங்கம் சுப்ரமணி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி உள்பட நிர்வாகிகள் தருமபுரிக்கு வருகை தந்தனர். அவர்களை மாவட்ட தி.மு.க. சார்பாக தாரை, தப்பட்டை முழுக்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை வரவேற்பதற்காக கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை 11 வாகனங்களில் அழைத்துச்சென்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம் பெரியண்ணன், உடன் இருந்தனர்.

    அதனையடுத்து புதிய நிர்வாகிகளுக்கு சால்வை, மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி உட்பட புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து தருமபுரி நகரின் 4 ரோடு பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கும், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனையடுத்து தி.மு.க. மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவால யத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார்.

    சிவகாசி

    தி.மு.க. அரசின் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார்.

    தி.மு.க. அரசின் விலை வாசி உயர்வை கண்டித்து மதுரை, சிவகாசியில் இன்று அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இதற்காக விமானம் மூலம் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட கட்சியினர் திரளாக திரண்டு வந்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார். விருதுநகர் மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவகாசி திருத்தங்கல் அண்ணா மலையார் நகரில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இன்று மாலை மதுரையில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி திரும ங்கலம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாளை வரவேற்பு அளிக்கும் இடங்களான மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்னதாக சிவரக்கோ ட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கன் சிவரக்கோட்டை ஆதிராஜா, உச்சப்பட்டி செல்வம், பேரவை நகர செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதில் பங்கேற்க வருகைதரும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை வாசியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொது ச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, நகரச்செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், சிவகா சிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டம் தி.மு.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், மிக்கேல்ராஜ், பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவ ணன், பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 2 நாள் பயணமாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்தார். அந்த பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக பிள்ளை யார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பத்தூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் சேதுசிவராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×