search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    • டி.எஸ்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவருக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தை ேசர்ந்தவர் விவசாயி மாரிமுத்து-முனியம்மாள். இவர்களது மகள் பாண்டீஸ்வரி. பல் மருத்துவரான இவர் வீட்டில் இருந்தபடியே குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று போலீஸ் டி.எஸ்.பி.யாக தேர்வானார். பிறந்த கிராமத்திற்கு வந்த பாண்டீஸ்வரியை கட்டாலங்குளம் கிராம மக்கள் மேள தாளங்கள், பட்டாசு வெடித்து, பரிவட்டம் கட்டி, ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அப்போது டி. வேப்பங்குளம் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சக்திவேல் மற்றும் பலர் இருந்தனர். பாண்டீஸ்வரி கூறுகையில், கலெக்டர் ஆவதே தனது லட்சியம். இதற்காக தனது முயற்சி தொடரும். டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகனுக்கு திருப்பத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று வரவேற்பு கொடுத்தனர்.

    முன்னதாக கே.ஆர்.அசோகன், செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    • ஓ.பி.எஸ் அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்று அளித்தனர்.
    • ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம் வந்தார்.அவருக்கு பூவந்தி அருகே அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்பு காரைக்குடிக்கு வந்த அ.தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகனுக்கு மாவட்ட பேரவை துணைச் செயலா ளர் பாலா, இளைஞர் அணி திருஞானம், காரைக்குடி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அங்கு ராஜ், ரவி, மகளிர் அணி ராமாமிர்தம், பத்மா, சாந்தி, இளைஞர் அணி காட்டு ராஜா, பக்கீர் முகமது, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    காரைக்குடி 5 விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஆர்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செய்தி தொடர்பாளர் மருது அழகராஜ், வழக்கறிஞர் ராமநாதன், மாணவரணி ஆசைத்தம்பி, சுமித்ரா ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது.
    • தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது.

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


    இந்தநிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஏந்தி சென்று மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக சேரிங்கிராசுக்கு வந்தது.


    அப்போது சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது ஊட்டி மத்திய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை முன்னிட்டு, தமிழகத்தின் உயர்ந்த மலை சிகரமான தொட்டபெட்டாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செஸ் போட்டி நடத்தப்பட்டது.


    மேலும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்பி ஸ்பாட்டில் மாணவ -மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ‌. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.
    • சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு பொது பயன்பாட்டு சேவை சம்மந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணிபுரிய உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யபட இருக்கிறார்.

    அவர் போக்குவரத்து சேவை துறை (பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான சாலை மற்றும் போக்குவரத்து துறை), அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் சம்மந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மருத்துவமனை மற்றும் மருந்தகத் துறை, காப்பீட்டு துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும். எனவே இந்த தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தானில் திண்டுக்கல்-மதுரை ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சோழவந்தான் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    சோழவந்தான்,

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை-திண்டுக்கல் ரெயில்கள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இதை ெதாடர்ந்து சோழவந்தான் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், மதுரை கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் மீண்டும் திண்டுக்கல்-மதுரை ரெயிலை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதைதொடர்ந்து சோழவந்தான் ரெயில் நிலையத்திற்கு வந்த திண்டுக்கல்-மதுரை ெரயிலுக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்திய பிரகாஷ், குருசாமி, செந்தில்வேல் ஆகியோர் முன்னிலையில் ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கண்ணன், ஆனந்தன், சரவணன், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன், சுப்பிரமணி, மோகன், கோபி, முத்து காமாட்சி, கனகவேல் உள்பட ரெயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் விவசாயிகள் ராமர் முருகேசன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    ரெயிலுக்கு வெற்றிலை மாலை அணிவித்து என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில் இயக்கக் கூடிய அலுவலர், ரெயில் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

    2022-ஆம் ஆண்டிற்கான சமூக சேவகர், பெண்களுக்கான சேவை விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக பணியில் ஈடுபடும் இளையதலை முறையினருக்கு ஆர்வமூட்டுதல், சமூக சேவையாளர்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சதந்திர தின விழா முதல்-அமைச்சரால் மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான "சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது" குறித்த அறிவிப்பு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளைப் பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்விருதிற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிருவாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும். இத்தகைய சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, வருகிற 30-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • இன்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
    • வாழை-பலூன் தோரணங்கள் கட்டி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று 2,166 பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், திருமோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

    இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

    இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

    • கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,531 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    இதேபோல் சிவகங்கை மாவட்டங்களிலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

    இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

    இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

    • விழுப்புரத்தில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேள தாளத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
    • தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர். அதன்பின்னர் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசும் பல்வேறு சலுகைகளும், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் தரமான கல்விகளை அளித்து வரும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியின் சேர்க்கையை கூட்டவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி முதல்வர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேள தாளங்களுடன் மாணவ-மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகள் முதல் நாள் வகுப்பிற்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.

    • திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராள மானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    கன்னியாகுமரி :

    குலசேகரத்தில் செயல்ப ட்டு வரும் பிரபல நகைகடையான ராஜா ஜூவல்லர்ஸ் மற்றும் ராஜா ஹேசல், ராஜா பெங்கட்ஹால் ஆகிய வற்றின் உரிமையாளரான தொழிலதிபர் ராஜ கோபால்-சார்லெட் பென்னி தம்பதிகளின் மகன் சி.ஆர்.கிரன். பொறியாளரான இவர் ராஜா குரூப்ஸின் நிர்வாக இயக்குனராக ராஜகுரு பிசின் இயக்குனராக செயலாற்றி வருகிறார்.

    இவருக்கும் பொன்மனை மடத்துவிளை பகுதியை சேர்ந்த செல்வன்-ராஜகலா தம்பதிகளின் மகள் எஸ். ஆர். சோணிக்கும் ஈஞ்சகோடு சகாயமாதா ஆலயத்தில் வைத்து கடந்த 9-ந்தேதி திருமணம் நடைபெற்றது அன்று மாலை குலசேகரம் அருகே செருப்பாலுர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அரசி யல் பிரமுகர்கள, மக்கள் பிரதிநிதிகள், தொழிலதி பர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ராஜாகுரூப்ஸ் உரிமையாளர் ராஜகோபால், சார்லெ ட்பென்னி மற்றும் ராஜா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.ஆர். அருண் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×