search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
    • அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.

    மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
    • எதிர்கால நலனை கருதி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

    கிருஷ்ணாபுரம்,

    தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் வட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொன்றம்பட்டி கிராமம்.

    இந்த கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட த்தின் சார்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த அங்கன்வாடி மையத்திற்கு கொன்றம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டு உள்ளது.தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் உடைந்தும் கட்டிடங்கள் சேதம் அடைந்து விட்டதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய கட்டிடம் கட்ட வேண்டி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பழுதடைந்த இந்த கட்டிடத்திற்கு பதிலாக தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நிர்வாகம் அறிவுறுத்தியதின் பேரில் தற்போது கொன்றம்பட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதிகள்,பாடம் நடத்த போதுமான வசதிகள் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி அங்கன்வாடி செயல்படுவதால் குழந்தைகளுடைய கல்வித் திறன் மற்றும் எதிர்காலம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் ஒரு சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

    எனவே இந்த நிலையை போக்க கொன்றம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்கன்வாடி மையம் மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கின்றனர்.

    • அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
    • பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஊட்டி,

    தேவா்சோலை பேரூராட்சி 3-வது டிவிசனில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து வாா்டு கவுன்சிலா் ரசீனா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கீா்த்தனாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 16-வது வாா்டில் உள்ள 3-வது டிவிஷனில் உள்ள எஸ்டேட் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். அங்கன்வாடிக்கு என தனிக் கட்டிடம் இல்லை. மேலும், எவ்வித பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா்.

    இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.

    தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 

    • ராஜபாளையம் அருகே நடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சி, வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    அதன்பின்னர் ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில், வார்டு 4 போலீஸ் ஸ்டேஷன் தெரு மற்றும் வார்டு 12 அய்யனார் கோவில் தெரு ஆகிய 3 பகுதியிலும் தாமிர பரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி தலைவர் பாலசுப்பிர மணியன், துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றியதுணை செயலாளர் குமார், பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட் கோபு மற்றும் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தினார்.
    • பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் அந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • உடன்குடி பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டு புதியகட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா ரமீஷ்பாத்திமா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணிடம் கோரிக்கை மனுஅளித்தார். இதனையடுத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத மிகவும் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அப்புறபடுத்தி விட்டு விரைவில் புதியகட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, பேரூராட்சி தலைவி ஹுமைரா, தாசில்தார் சுவாமிநாதன், செயல்அலுவலர் பாபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், பாலாஜி, அன்புராணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷாகல்லாசி, அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 34.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்.
    • ரூ. 19 லட்சம் மதிப்பில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 9 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ. 17.26 லட்சம் மதிப்பீட்டில் குரு வட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலக கட்டிடமும், பூதலூர் வட்டம் அகரப்பேட்டை ஊராட்சி, திருவையாறு வட்டம் மன்னார் சமுத்திரம் ஊராட்சி மற்றும் மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியிலும் தலா ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இதேப்போல் திருவையாறு வட்டம் கண்டியூர் ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடமும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இலுப்பைக்கோரை ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், திருப்பனந்தாள் வட்டம் அணைக்கரை ஒன்றியத்தில் ரூ. 19.00 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், திருவிடைமருதூர் வட்டம் முருக்கங்குடி ஊராட்சியில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர்தமிழ்ச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை நாகவேலு, வேளாண்மை துறை இணை இயக்குனர்ஈஸ்வர் (பொ), நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்தேவராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்முத்து, ஒன்றிய குழுத் தலைவர்கள்அரங்கநாதன் (பூதலூர்), அரசாபகரன் (திருவையாறு), சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள்
    கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்
    பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்,

    ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணி கண்டன்,
    ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சிமன்ற த்தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர்,
    ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கிள்ளியூர் பேரூராட்சிக் குட்பட்ட, மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் உள்ள பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் இந்த அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இவர்களின் கோரிக்கை யை ஏற்று மாங்கரையில் பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி, குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டி டம் அமைக்க அடிக்கல் நாட்டி பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
    • முடிகண்ட–நல்லூரில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மங்கனூர் கிராமத்தில் கடந்த 1997- 98 ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளையும் ஆய்வு செய்து வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சியில் வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது.

    அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும்போது பாலம் உடைந்து சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும்.

    ராணி:-

    திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைப்பதற்கான இடம் உள்ளது.

    அங்கு அங்கன்வாடி அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்–கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் சரியாக வடிகால் வசதி இல்லாத ஊராட்சிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் பொறியா ளர்கள் முத்து, சோமு, மாவட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொன்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இடைநிலை அலுவலர் முருகன் நன்றி கூறினர்.

    • மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும்.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், வடகால், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பொழுது திருகருக்காவூரில் இயங்கி வரும் அங்கன்வாடிக்கு சென்று அங்கன்வாடி குழந்தைகளிடம் ஒன்று, இரண்டு சொல்ல சொல்லி கேட்டு குழந்தைகளை தட்டிக் கொடுத்தார்.

    மேலும் இதைத்தொடர்ந்து எடமணலில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு புதிய கிடங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர் லலிதா கூறும்போது, எடமணலில் உள்ள 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கின் கட்டுமான பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும் என்றார்.

    பின்னர் எடமணல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மரக்கன்றுகளை நட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளியிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுகன்யா பிரேம், தன்னார்வலர் யாமினி அழகு மலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×