search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர்.
    • சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. எனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    தாராபுரம் :

    வெப்பநிலை அதிகரிப்பால் 21,22,23 ஆகிய தேதிகளில் முறையே 2,3,4 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்காக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நீனோ நிகழ்வு காரணமாக நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அக்னி நட்சத்திரம் சமயங்களில் வழக்கமாக, 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். தற்போது, 40 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி இதுகுறித்த பதிவுகள் உறுதிசெய்யப்படும்.வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருக வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையுடன், சராசரியை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.மதியம் 12 மணி முதல்4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பகல், இரவு வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2மணி முதல் 3 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
    • வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசித்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. விவசாயம் அல்லாத காலங்களில், கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.

    சுத்தமான தண்ணீரை வழங்குவதன் வாயிலாக, வெப்ப அயற்சி வராமல் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- நிழலில்தஞ்சம் அடைதல், அதிகமானதண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமானஉமிழ்நீர் வடிதல், அதிக உடல் வெப்ப நிலை யால் வாய் திறந்த நிலையில் சுவாசி த்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.கலப்புத் தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது,மாடுகளின் தண்ணீர் குடிக்கும்அளவு அதிகரிக்கும்.வறண்ட வெப்ப நிலையின்போது கால்நடைகள்அதிக ப்படியான உலர் மற்றும் நார் சத்துக்களையும், குறை வாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொ ள்கின்றன.சுத்தமான தண்ணீரை முறையாக பருகினால் கால்நடை களுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

    • கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
    • கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் விவசாயத்திற்கு கால்நடை களின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காக விவசாயிகள் அதிக அளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.

    சமீப காலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை. அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, அதில் விளைவிக்கக்கூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக இரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கால்நடை தீவன பற்றாக்குறையினால் கரூர் விவசாயிகள் பரிதவிப்பு
    • பலமடங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை

    கரூர்,

    பருவமழை சரிவர பெய்யாததால் க.பரமத்தி யூனியன் பகுதியில் கால்நடைக்கு தீவனம் கிடைக் காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். க.பரமத்தி யூனியன், கரூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளது. இங்கு, கிரஷர் மற்றும் ஜல்லி தொழிலுக்கு அடுத்தபடியாக, கால்நடைகளை நம்பியே பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான கால்ந டை கள் இப்பகுதி விவசா யிகளுக்கு வாழ்வாதாரமாக உள் ளது. பருவ மழையை நம்பியே, கால்நடை தீவன பயிர்களை விவசாயிகள் வளர்க்கின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை, தொடர்ந்து பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தீவன பயிர்கள் வளர்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    மழை இல்லாமல் கால்நடைகளுக்கு கடலை கொடி, சோளத்தட்டு போன்ற பயிர்களை விலைக்கு வாங்கி, தீவனம் அளிக்க வேண்டியுள்ளது. இவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 70 -க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமில் கோமாரி நோய் பற்றியும் அந்த நோயின் அறிகுறிகள், நோயின் பராமரிப்பு, தடுக்கும் முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    இதில் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவராஜ், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கோட்ட உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, மருத்துவர்கள் மனோஜ், குமார் பெரியசாமி, தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ வள்ளி செந்தில் வேல், துணைத் தலைவர் முருகன், மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளையும் கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் தலைமையில் மருத்துவர்கள் அன்பரசன் கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவர் தர்மராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முகாமை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இதுவரை இந்த தடுப்பூசி அனைத்து கிராமம் மற்றும் நகர் புறப்பகுதிகளில் போடப்படுகிறது .

    இதற்காக சுமார் 40 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போம் தங்களின் அனைத்து கால்நடை இனங்களுக்கும் கட்டாயம் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடை களுக்கு வெயில் மட்டும் மணி நேரங்களில் வேகமாக பரவும் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

    தடுப்பூசி போடாமல் இருந்தால் நோய் ஏற்பட்டால் மாடுகளின் வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் கொப்பளம் மற்றும் புண் ஏற்படும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாது.

    மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்படும் சினை மாடுகள் கன்று வீழ்ச்சி ஏற்படும் நோயுற்ற மாடுகளின் பால் இளங்கன்றுகள் குடிப்பதால் கன்றுகள் இறப்பு ஏற்படும். பொதுமக்களின் வேலை திறன் பாதிக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட மாடுகள் சில நேரம் இறப்புகள் கூட ஏற்படும்.

    எனவே கால்நடை வளர்ப்புக்கு தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஜோதிலட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் முருகன், ராஜ் சிவரஞ்சனி, கயல்விழி மற்றும் உதவியாளர்கள் உஷா, மூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி அளித்தனர்.

    முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி நெடுஞ்செழியன் துணை தலைவர் சவீதா கணேசன் ஆகியோ செய்தனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    • பனைக்குளத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பனைக்கும் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஜமாஅத் செயலாளர்கள் முகமது ரோஸ் சுல்த்தான், சாகுல் ஹமீது, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் செய்குல் அக்பர், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், ஒருங்கினைப்பாளர் அபு முகம்மது, உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகம்மது ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

    இம்முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவி பவுசியாபானு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அசோலா பாசி வளர்ப்பிற்கான படுக்கைகள் வழங்கப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி, ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 80 பயனாளிகளின் 146 மாடுகள், 365 வெள்ளாடுகள், 85 செம்மறியாடுகள், 175 கோழிகள், 8 நாய்கள் பயன் பெற்றன. முடிவில் சமூக ஆர்வலர் சிராஜ் மைதீன் நன்றி கூறினார்.

    • தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மட்டுமே பிரதானமாக உள்ளது. நெல்லுக்கு பிறகு உளுந்து, பச்சைபயிறு, பசலி, துவரம்பருப்பு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த சாகுபடி குறைந்துவிட்டது.

    இதனால் விவசாயத்தில் கிடைக்கும் உபரி வருமா னங்களும் குறைந்துவிட்டது.

    இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாமல் ஆடு, மாடுகள் சாகுபடி நிலங்களில் மேய்வது தான். தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.

    இதுபோன்ற நல்ல வேளாண் திட்டங்களை செயல்படுத்தி விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி. எனவே அரசு முன்பு செயல்படுத்திய கால்நடை பட்டிகளை மீண்டும் வருவாய்துறை கட்டுப்பாட்டில் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில் 300 கால்நடைகள் கலந்துகொண்டு பயனடைந்தன.
    • கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தாது உப்புகளும் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் கோவிஅய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பம்பைப்படையூர் எஸ்.கே.முத்துச்செல்வன் தலைமை வகித்து கால்நடை சிறப்பு முகா மினை துவக்கி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களுக்கு சிறந்த கன்று பரிசு, சிறந்த மேலாண்மை விருது ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மண்டல இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பு டாக்டர் பாஸ்கரன், நோய் புலனாய்வு கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேலு, கால்நடை உதவி மருத்துவர்கள் அய்யம்பேட்டை ஏஞ்சலா சொர்ணமதி, சுந்தர பெருமாள் கோவில் கார்த்திகேயன், கால்நடை ஆய்வாளர் சிவசக்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வேளாண்மை இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வேளாண்மை உதவி அலுவலர்கள் திரிபுரசுந்தரி சதீஷ்குமார், பாபநாசம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் கலீல், திமுக நிர்வாகிகள் பாலு, யூசுப் அலி, அஷ்ரப் அலி, புகழேந்தி, ஷாஜகான், அண்ணாதுரை, ராஜேஷ், ஆனந்தன், ஜாகித், அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் மாடு, ஆடு, நாய், பூனை, கோழி ஆகிய 300 கால்நடைகள் கலந்துகொண்டு பயனடைந்தன இம்முகாமில் தடுப்பூசி, சிகிச்சை, சினை பரிசோதனை, சினை ஊசி, கருசிதைவு நீக்கும் தடுப்பூசி, குடல் புழு நீக்கம் ஆகியவை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் தாது உப்புகளும் வழங்கப்பட்டது.

    முடிவில் கணபதி அக்ரஹாரம் கால்நடை உதவி மருத்துவர் சங்கமித்ரா நன்றி கூறினார்.

    ×