search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • தீவனப் பயிர் சாகுபடி திட்டங்களில் பயன்பெற கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பசுந்தீவன பற்றாக்கு றையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடை களுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2023-24) அரசு மானியத்துடன் கூடிய கீழக்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநருடன் கலந்தாலோசித்து தோட்டம், பழத் தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 20 ஏக்கர் குறியீடு பெறப்பட்டுள்ளது.

    கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் 0.25 ஏக்கர், அதிக பட்சம் 1 ஏக்கர் பரப்பில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.

    பசுந்தீவனங்கள் வீணாவதை குறைப்பதற்காக புல்வெட்டும் கருவிகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். இதற்கு முன் 10 வருடங்களில் இந்த சலுகையை பெறாத வராகவும் புல் வெட்டும் கருவி 50 சதவீத தொகையை ஏற்பவராகவும் இருக்க வேண்டும்.

    எல்லா இனங்களிலும் 30சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்த வர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். மேலும் குறுவிவ சாயிகள் மற்றும் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.

    மேலும் தங்கள் கால்நடை களுக்குத் தேவையான தீவன விதைகளை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிணற்று பாசன முறையில் கொடி வகை தாவரங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • அவரை கிலோ 89க்கு விற்பனையாகி வருகிறது.

     உடுமலை :

    உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். பருவமழை பெய்யும் போது வானம் அளிக்கும் மழைநீரையும் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவற்றில் ஏற்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்று பாசன முறையில் ஒரு சில விவசாயிகள் புடலை, பாகல், பீர்க்கன், அவரை, அரசாணி, வெள்ளரி, பூசணி உள்ளிட்ட கொடி வகை தாவரங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தளி பகுதியில் தற்போது அவரை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில்:- சைவ பிரியர்களின் விருப்ப உணவாக திகழ்கின்ற அவரை அபரிமிதமான புரதச்சத்தை உலகுக்கு அளிப்பதுடன் எடையை குறைப்பதற்கும் உதவிகரமாக உள்ளது. ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கு சாகுபடி செய்யப்படுகின்றன. அவரை செடி மற்றும் கொடி வகையாக பயிரிடப்படுகிறது. பட்டை கொட்டை, சட்டை சிவப்பு, நெட்டை சிவப்பு, மூக்குத்தி அவரை, கோழி அவரை என பல்வேறு வகைகள் உள்ளது. நாட்டு அவரை 120 நாட்களுக்கும், செடி அவரை 740 நாட்களுக்கும் பலனளிக்கக்கூடியது. அவரைப் பிஞ்சி துவர்ப்புச் சுவை உடலிலுள்ள நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது. மயக்கம் ,தலைச்சுற்றல், கை கால் மரத்துப்போதல் உள்ளிட்டவற்றை குணமாக்குகிறது. அதுமட்டுமின்றி நார்ச்சத்து மிகுந்த அவரைக்காய் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை தீர்ப்பது, மனஅழுத்தம் மற்றும் சுவாச பிரச்சனை சீராக உதவி புரிகிறது. இதனால் பொதுமக்கள் அவரைக்காயை விரும்பி வாங்கிச் சென்று அன்றாட உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது அவரை கிலோ 89க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பூவும் பிஞ்சும் காயுமாக உள்ள செடிகளை பராமரித்து கூடுதல் விளைச்சல் ஈட்டுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றோம் என்று தெரிவித்தனர். அன்றாட உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருளான தக்காளி கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை கண்டு வந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். ஒரு சில விவசாயிகள் தக்காளி செடிகளை பழங்களுடன் அழித்தும் வந்தனர். இந்த நிலையில் வரத்து குறைந்து விட்டதால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 14 கிலோ கொண்ட பெட்டி ஒன்று ரூ. 380 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி செடிகளை பராமரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    • குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • தலா 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் தூத்துக்குடி மற்றும் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி நேற்று குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1250 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகள் ஏற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதே போல் இன்று தஞ்சையில் இருந்து தலா 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள் மற்றும் பாலாறு, திருமூர்த்தி மலை ஆறு ஆகியவற்றின் மூலமாக மழை க்காலங்களில் பெறப்படும் தண்ணீரும் அணையின் நீராதாரங்க ளாகும்.அதைக் கொண்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. திருமூர்த்தி அணை பாசனத்தில் அம்மாபட்டி குளம், செங்குளம், தினைக்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம், வளைய பாளையம் குளம், உள்ளிட்ட ஏழு குளம் பாசனம் வழங்கும்.இந்த குளங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுக மாகவும் நீராதாரங்களை நீர்வரத்தைப் பெற்று நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவக்கூடிய கோடைகாலத்தில் கூட ஏழு குளம் பாசனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளால் சாகுபடி பணி மேற்கொள்ள ப்படுகிறது. அதன்படி தென்னை, வாழை, கரும்பு போன்ற நிலைத்து நின்று பலன் அளிக்கும் பயிர்களும் பரவலாக காய்கறிகள் சாகுபடியும் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக திருமூர்த்தி அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வருகிறது. ஆனால் அதன் மூலமாக நீர்வரத்தை பெற்ற 7 குளங்கள் போதுமான அளவு நீர் இருப்பைக் கொண்டு உள்ளது. இதனால் அவ்வப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்ப டுவதால் சாகுபடி பணிகளும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. மேலும் குளத்தை ஆதாரமாகக் கொண்ட கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகளிலும், நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. வறட்சியின் கோரத்தாண்ட வத்திற்கு நீராதாரங்கள் பாதிக்கப்படும் சூழலில் கோடை காலத்தில் சாகுபடி பணிகளுக்கு கை கொடுக்கும் அளவிற்கு 7 குளங்களில் நீர்இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
    • ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவாகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், பூ பூத்து காய் காய்க்கும் தருவாயில் செம்பேன் காய்புலுவால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

    பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம்பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வருகின்றனர்.

    மேலும் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு காரணமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது தனியார் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவு ஆகிறது.

    எனவே வேளாண்மைதுறை மூலம் இலவசமாக அல்லது மான்ய முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • மீன்பிடி தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும்.

    தண்ணீர் திறந்துவிடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் செய்யவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    பொதுமக்கள் யாரும் ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று செல்பி எடுக்க வேண்டாம். குழந்தைகள் எவரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் இறங்கி விடாமல் தடுத்திடுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் திறந்து விடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாத்திட விவசா யிகளுக்கு அறிவுறுத்தப்படு கிறது. 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

    • ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
    • தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துரைத்தார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டாரம் அக்கரைவட்டம் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

    விழாவில் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் பேசியதாவது:-

    குறுவை சாகுபடி நெல் சாகுபடியில்மற்ற பருவங்களை விட குறுவையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை உள்ளதால் ஆழ்குழாய்வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும்.

    குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 37, ஆடுதுறை 53, ஏஎஸ்டிடி 16 டி பி எஸ், கோ 5, போன்ற குறைந்த வயதுடைய ரகங்களின் சான்று பெற்ற விதைகளை குறுவை பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளையும் எடுத்துரைத்தார்.

    முன்னதாக அக்கரை வட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் வரவேற்றார்.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர் பதிராஜன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமரன், உதவி தொழில் நுட்ப மேலாளர் அணு, பவதாரணி, ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
    • வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.

    உடுமலை :

    தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.

    இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.

    • 13 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 26-ந் தேதி வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.359.16 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    மேலும் கூட்டுறவு துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.456.65 கோடி கடன் வழங்கி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் ஒன்று முதல் மே 26 வரை ரூ.14.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான 6512.07 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
    • விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த வீரமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள சாகுபடி வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டும், சாகுபடி பருவத்தின் போதும் இதேபோல், நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியதாகவும், இந்த ஆண்டும் இதேபோல் நடைபெற்று வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிடாமல் இருக்க வைக்கோல் மூட்டம் போடப்பட்டுள்ளது. அதையும் களைத்து, நாற்றங்காளை காட்டு பன்றிகள் நாசமாக்குகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

    இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டு பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.

    இந்த சூழலில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களுக்கு (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வரு–கிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு 2,074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். 

    • நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கை மான் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 /டிபிஎஸ் 5 மற்றும் இதர ரகங்களும் குடவாசல், வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 - 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும்.

    மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

    மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

    தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

    விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும். 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

    10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×