என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண்மை"
- 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
- வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
கும்பகோணம்:
வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.
இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.
ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
- சிங்கம்புணரியில் வேளாண்மை விற்பனை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை, நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை பார்வையிட்டார். நேரடி கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டத்தின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படும் விதம், மக்களின் ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டத்தின் முதல் தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் எண்ணெய் உற்பத்தி வெளிநாடுகளுக்கு ஏற்படும் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (மேலாண் வணிகம்) சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சாந்தி, வேளாண்மை அலுவலர் காளிமுத்து, கனிமொழி, புவனேசுவரி, விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாயாண்டி, வேளாண் உதவி அலுவலர்கள் ராதா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், தி.மு.க. நகர தலைவர் கதிர்வேல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரத்னகாந்தி செய்திருந்தார்.
- மதுரை அருகே கூட்டுறவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.
மதுரை
மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது.
பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் வரவேற்றார்.
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜீவா, கூட்டுறவுச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்துரைத்தார். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தர்மராஜ் கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மதுரை கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.
- மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
- பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கட்டிமேடு ஊராட்சி இணைந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் பெறுவது எவ்வாறு என விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் விழிப்புணர்வு நடைப்பயணம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி இரவிச்சந்திரன் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைசாமி கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் ரவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உழவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
வேளாண்மை உதவி பொறியாளர் கௌசல்யா பேசும்போது,கிராம அளவில் வேளாண்மை வாடகை இயந்திரங்கள் வாடகை சேவை மையங்களில் மானியத்தில், அமைப்பது வேளாண்மை இயந்திரங்கள் வாடகை முன் பதிவிற்கு இ-வாடகைக்கு திட்டம் அமைப்பது பற்றி விரிவாக பேசினார் .
உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் வீட்டில் பின்புறம், மாடித்தோட்டம் பழ வகை மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் வேளாண்மை உதவி ஆலுவலர்கள் ரமேஷ், சுவாமிநாதன் மற்றும் விவசாயி சங்க தலைவர் அப்துல் ரஹ்மான் செயலர் செந்தில்குமார், தீவிர விவசாயிகள் முகமது மஸ்கின், ஹலீல் ரஹ்மான்,அப்துல் சலீம் ,அப்துல் சலாம் , அப்துல் முனாப் ஆசிரியர் சாகுல் ஹமீது கல்வியாளர் ரவிச்சந்திரன் , தண்டபாணி ஊராட்சி உறுப்பினர்கள் இளம் விவசாயி பகுருதீன் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உழவு மெசின், பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் விழிப்புணர்வு பிரச்சார நடைபெறும் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் செயலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.
- கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.
- மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகளின்அனுபவங்களை கேட்டறிந்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கோபுர ராஜகோபுரம் கிராமம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தஞ்சை ஆர். வி.எஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் 11 மாணவ மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சூரிய பிரியா, பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகள் குறித்தும், அனுப வங்களை கேட்டறிந்தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் பாரதிராஜா, திவ்யா, ரம்யா, ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செயல்பட்டனர்.
ஏற்பாடு களை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஜெனோ அபிஷா, கன்னிகா லாவண்யா, ஜெயதாரணி கிருத்திகா, லட்சுமி ஸ்ரீ உள்பட கலந்து கொண்டனர்.
- பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
- தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை
தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.
- முசிறியில் வேளாண்மை பயிற்சி பெறும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
- முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.
முசிறி:
முசிறி வடுகப்பட்டியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளங்கலை வேளாண் மாணவி யோகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்
. நிகழ்ச்சியில் முசிறி வேளாண் அலுவலர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன், இணை பேராசிரியர் குணா, உதவி பேராசிரியர் கனகராஜ், உதவி பேராசிரியர் சீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 75 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் முசிறி வட்டாரத்தில் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.முடிவில் இளங்கலை வேளாண் மாணவி நந்திதா நன்றி கூறினார்.
- ஐ.நா. அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்
- இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்சி:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயி–கள் சங்க மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலகெங்கும் வாழும் மக்கள் சர்க்கரை நோய், இதய நோய், வாத நோய், எலும்புருக்கி நோய் போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய உணவு உற்பத்தி இல்லாததே காரணம் என்பதை ஐ.நா. பொது சபை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அதி–கம் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் சிறு–தானிய உணவு பொருட்களை பயிர் செய்யும் ஆண்டாக 2023-ம் ஆண்டினை ஐ.நா. சபை அறிவித்துள்ளது வர–வேற்கத்தக்கது. கேழ்வரகு, கம்பு, வரகு, சின்ன சோளம், தினை, சாமை, குதிரைவாலி, கொள்ளு, எள்ளு, துவரை, கொத்தமல்லி போன்ற சிறுதானியங்கள் மனித உயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வல்லமை கொண்டது.
எனவே இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவ–டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா. பொது சபை அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக விவசா–யிகளின் நலன்கருதி இந்தி–யாவில் சிறுதானிய பயிர்களை உற்பத்தி செய்து தீராத பல நோய்களிலிருந்து நாட்டு மக்களையும், விவசாயிக–ளையும் காப்பாற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை கொண்டு வர–வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
- பாரம்பரிய விதை கண்காட்சி நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டம் அரசு ஏந்திர கலப்பை பணிமனையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பாரம்பரிய பயிர்கள் மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அதில் நம்முடைய பகுதியில் விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் நம்முடைய பகுதியில் என்னென்ன வகையான முறைகளை கையாண்டு நாம் வேளாண்மை துறையில் செய்து வருகின்றோம்.
அந்த முறைகளுக்கு தேவையான கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பெருமக்கள் அறிய ரக பயிர்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை பொறுத்தவரை வெப்பமண்டலத்தில் அமைந்திருக்கக்கூடிய பகுதி.
இந்த பகுதியில் கோடைகாலத்தில் உச்சபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 14 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்பொழுது நாம் குளிர்காலத்தில் மையப் பகுதியில் உள்ளோம். இந்த பனிக்காலத்தில் நோய் தாக்குதல் என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறுதானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம்.
வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில் இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்செந்தூர் வட்டாரத்தில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
- விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467 செலுத்த வேண்டும்.
உடன்குடி:
விவசாயிகளுக்கு திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிர மணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-
திருச்செந்தூர் வட்டா ரத்தில் தற்போது நவரை கோடை பருவத்தில் சுமார் 1700ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பூச்சி நோய் நிவாரணம் அளிக்கும பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு த்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.
இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஓரே பிரிமியத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.
நவரை/கோடை பருவ நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467மட்டும் செலுத்த வேண்டும்.
இதுகடன் பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள் பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமா க்கப்பட்ட வங்கி கள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் செலுத்தலாம்.
இதுகுறித்து விவசாயி களிடையே கிரா மங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண்அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
- பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவகம் 60, 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
பழைய கட்டிடம் என்பதாலும் தானிய கிடங்கு சிறிய அளவு உள்ளதாலும் கடந்த அ,தி,மு,க ஆட்சியில் புதிதாக வேளாண்மை கட்டிடம் கட்ட இடம் பார்த்து வந்தனர்.
பின்பு சூளகிரியில் இருந்து உத்தனபள்ளி சாலை செல்லும் வழியில் சூளகிரி காவல் நிலையம் அருகே அரசு இடம் இருந்தது. 5 அடி பள்ளமான இடத்தில் அவசர அவசரமாக ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
பின்பு பழைய அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலக பொருட்களை ஏற்றி வந்து புதிய அலுவலகம் இயங்கி வந்தது. கழிவு நீர் கால்வாய் அருகே பள்ளத்தில் கட்ட பட்ட கட்டிடம் என்பதால் அனைத்து கழிவு நீர்களும் புதிய கட்டிட வளாகத்தில் புகுந்ததாலும், மழை வந்தால் அனைத்து மழை நீரும் வந்து சேர்வதால் அலுவலர்கள் ,விவசாயிகள் வர முடியாததாலும் மீண்டும் பழை ய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.
- வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்டகலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
- அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது
கள்ளக்குறிச்சி:
வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதல்படி, வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இப்பணியில் சேகரிக்கப்படும் விவரங்களி ன்அடிப்படையில் புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும். முதல் முறையாக இணையமுகப்பு மற்றும் கைபேசி செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள 596 வருவாய் கிராமங்களுக்கான நில பதிவேடுகளில் உள்ள விவரங்களிலிருந்து நில உபயோகம், பாசன ஆதாரம், பரப்பு விவரம் தொடர்பான விவரங்கள் இணையவழி வாயிலாக சேகரிக்கப்பட்டுமுதல் கட்ட பணிகள் முடிவடைந்தது. இப்பணியில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது. மேலும் 2-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும் பயிர்முறை மற்றும் நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.அதனை தொடர்ந்து 3-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும்உபயோகப்படுத்தப்பட்ட உள்ளீடுகள், விளைச்சல், உபயோகிக்கப்பட்ட வேளா ண்உபகரணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிமேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.