search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர்.
    • அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.

    ‌ராசிபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பெரிய அளவிலான செஸ் போர்டு வரைந்திருந்தனர்.

    இதனை நாமக்கல் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் தெய்வம், வட்டார இயக்க மேலாளர் முருகேசன், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாகரன், கலைச்செல்வி, கலா, மணிமேகலை மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பெரிய செஸ் போர்டை பார்வையிட்டனர்.

    • இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஸ்டிக்கர்களால் அலங்கரிக்ப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    கே.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மேல்நிலைப்பள்ளி, செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • நாம் தமிழர் கட்சி ஆா்ப்பாட்டம் நடந்தது.
    • கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது கபடிப் போட்டிகள் கிராமங்களில் நடத்துவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் கபடி போட்டியின் போது சில ஊா்களில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக கபடிப்போட்டிகள் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். போட்டி நடத்தத் தடையும் விதித்துள்ளது.

    போலீசார் நடவடிக்கையால் கபடிப் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜு தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட செயலா்கள் கண். இளங்கோ, காமராஜ், மாவட்டத் தலைவர் நாகூர் கனி, மாநில பேச்சாளர் வினோத் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கபடிப் போட்டிக்கு அனுமதி கோரி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

    • சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • போட்டி–யில் கலந்து கொண்ட மயிலாடுதுறை வாலிபால் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    சீர்காழி:

    தமிழ்நாடு ஸ்டேட் வாலிபால் அசோசியேஷன் நடத்திய கிழக்கு மண்டலங்களுக்கான சீனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டு முதல்முறையாக போட்டி–யில் கலந்து கொண்ட வாலிபால் விளையாட்டு வீரர்கள் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினரை மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பொன்செந்தில், எடின்.ராகுல், ரவீந்திரபாரதி, வாஞ்சிநாதன், சரவணன், வளவன், பழனிவேல், முரளிதரன், பாரி, அணிமேலாளர் சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாட மயிலாடுதுறை அணி தேர்வாகியுள்ளது.

    • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் ஸ்ரேயாபிசிங் தலைமையில் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி. எ.கே.பி.சின்ராஜ் , நாமக்கல் எம்.எல்.ஏ. .ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி அவர்கள், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்க ர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளையும், விழி ப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்தினையும் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மதிவேந்தன் செல்பி எடுத்துக்–கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.

    • ராமேசுவரத்தில் நடந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடந்தன.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம் நகராட்சி முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் ராமேசுவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாக சார்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.
    • இதில் 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.

    ஓவியம், மாறுவேட போட்டிகள் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலை பள்ளிலும், மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கட்டுரை போட்டியும், ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் சாத்தான்குளத்தில் உள்ள 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை ஜான்ராஜா, ராஜேஷ், வேணுகோபால், நேசக்குமார், சுடலைமணி,அருண்குமார், ஏசா,விஜேந்திர பாண்டியன், ஜெபாஸ் ,முத்து சோபன், கண்ணன், முத்துவேல், பாலா , ஆசிர்வாதம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தேதி பின்னர் அறிவிக்கப்படும்

    கரூர்:

    கரூரில் 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி பல்வேறு பிரிவுகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருப்பதால், இந்த மாபெரும் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் கேரம் போட்டியினை நடத்திட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி லோகோ சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
    • இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    இதை தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் "தம்பி" என்கிற சின்னத்தினையும் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி அறிமுகப்படுத்தினார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்து அனைத்து தரப்பி–னரிடையேயும் விளம்பரம் செய்யும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னம் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், உழவர் சந்தை, பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் இது வைக்கப்பட்டு உள்ளது.

    • 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாக அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இதற்கான லோகோ சதுரங்க குதிரை வடிவம் தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த லோகோ பொறித்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் குழுவினர் தேர்வு செய்தனர். இதில் பிரிவு வாரியாக முதல் பரிசு ரூ.6 ஆயிரம் , இரண்டாம் பரிசு ரூ.4,500 மற்றும் 3-வது பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டது.

    இசைக்கருவி இசைத்தல் பிரிவில், நாதஸ்வரம் - கோவிந்தராஜ் (அவிநாசி), தவில் - சங்கிலிதுரை (அலங்கியம்), நாதஸ்வரம் - கிருஷ்ணகுமார் (முத்தூர்).பரதம் பிரிவில், மோனிகா ஜெயஸ்ரீ (அனுப்பர்பாளையம்), சக்தி பிரியா (பாளையக்காடு), யாஷ்னா (முதலிபாளையம்). பாட்டு - மகிழன்பருதி (கருமாரம்பாளையம்), சண்முக பாக்யஸ்ரீ (திருப்பூர்) மற்றும் காயத்ரி (ராக்கியாபாளையம்).கிராமிய நடனத்தில், ஸ்ரீவர்தினி, சன்மதி, சங்கர் ஆகியோரும் ஓவியத்தில் சரண், திரிநேத்ரா, ஜெகன் ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    • வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியது.
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன் னிட்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வா லிபால் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், செ ன்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவ ல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

    போட்டியை மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

    தமிழ்நாடு வாலிபால் கழகமானது 3 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட் டு இருந்தது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அ ந்த கழகத்தினரிடம் பேசி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆ ணையத்தின் அனுமதியையும் பெற்று தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.விளையாட்டு துறையில் அனைத்து பிரிவுகளிலும் தமி ழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.

    இந்திய ஹாக்கி அணியில்கூட தமிழகத்தைச்சேர்ந்த 2 வீரர்கள், ஆசிய அளவில் பதக்கம் பெறுவதற்கான பங்களிப்பை செய்திருக்கிறா ர்கள். சென்னையில் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவானது உலகமே வியக்கும் வ கையில் நடைபெற உள்ளது.

    இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் உள் விளையா ட்டு அரங்கம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.சென்னையில் ரூ.700 கோடியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் உருவாக்கப்பட உள்ளது.

    இதேபோன்று தமிழகத்தில் தொகுதிக்கு ரூ.3 கோடியில் சர்வதே தரத்தில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்,

    வாலிபால் போட்டியை கான அப்பகுதியைசேர்ந்த சுமார் 3000 ஆ யிரத்திற்கும் அதிகமானோர் தொடக்க விழாவில் கலந்து கொண்ட னர் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் அழகம்மை(பொ)தலமையிலான போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×