search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா  முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

    • வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி நடைபெற உள்ளது.
    • அமைச்சர் தொடங்கிவைக்கிறார்

    புதுக்கோட்ைட:

    புதுக்கோட்ைட மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு நேசிய அள விலான வாலிபால் போட்டி வரும் 8-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைக்க உள்ளார்.

    வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவாக அணிகளாக கலந்துகொள்ள உள்னனர்.

    அதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல்துறை சென்னை எஸ்ஆர் எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூரு அணி ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கே எஸ் இ பி அணி, கேரளா காவல்துறை, சென்னை எஸ் ஆர் எம், சென்னை ஐ சி எப் ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன

    போட்டியை ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இரவை பகலாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட அதிக ஒளி உமிழும் மின்விளக்கு கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர வாகனங்களை நிறுத்துவத ற்காக ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை போட்டி நடைபெறும். அண்ணா கைப்பந்து கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவாக நடைபெறும் இந்த போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையா ட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.

    மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமை ச்சர் எஸ் .ரகுபதி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

    வெற்றி பெறும் அணியினரு க்கு ரொக்க பரிசு, அண்ணா கைப்பந்து கழகத்தின் மறைந்த வீரர்களின் நினைவாக பரிசு கோப்பை ஆகியன வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான முன்னேற்பாடுகளை அண்ணா கைப்பந்து கழகத்தினால் செய்து வருகின்றனர்.

    • தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது.

    அருப்புக்கோட்டை

    தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் தாமோதரன் கலந்து கொண்டு கேரம் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

    இதைத்தொடர்ந்து அவர் இந்த மாத இறுதியில் கோவாவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற தாமோதரன் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சவுந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினமான ஜூலை 15-ந்தேதி ஆண்டுதோறும் கல்வித்திருவிழாவாக நாடார் மஹாஜன சங்கம் கொண்டாடி வருகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அரசு, அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. இதில் பட்டிமன்ற புகழ் அவனி மாடசாமி, மதுரை பிரமுகர் சக்தி செல்வம், நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் மோகன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன பொறுப்பாளர்கள் பெரியகருப்பன், சேது, பரம்பை மயில்நேசமூர்த்தி, வேதாளை முருகேசன், குஞ்சார்வலசை ஜெயக்குமார், வட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கு கொண்டனர். தேர்வான மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுசும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வடமலையான் மருத்துவமனை, என்.எம்.எஸ். கல்வி வழிகாட்டி அகாடமி ஆகியவை இணைந்து சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட என்.எம்.எஸ். கல்விக் திருவிழாகுழு பொறுப்பாளர் குகன் செய்திருந்தார்.

    • ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு செல்லும்சேலம் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது.

    சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.

    தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி, வீரர்களுக்கு பயணப்படி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அகிலாதேவி, ராஜாராம் இணைச் செயலாளர் வடிவேல், தொழிலதிபர் விஜயராஜ், வளர்ச்சி குழு தலைவர் வேங்கையன், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்க–லாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சென்னை மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதற்காக 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடுவதற்காக தமிழகம் முழுவதும் இளம் வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் வருகிற 25,26 ஆகிய தேதிகளில் சேலம் உடையாப்பட்டி நோட்டரி டாம் ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன 9 சுற்றுகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 15 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனை, மகாபலிபுரத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகளில் தங்கும் இடம், உணவு, மற்றும் பயணச் செலவுகள் சதுரங்க கழகத்தின் சார்பில் செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான போட்டி அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ளது.

    • வாசிப்புத்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்துக்களை வேகமாக நெடுநேரம் வாசிக்கும் போட்டி நடந்தது.

    இதில் அதிக புள்ளிகளைப் பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டதன்னார்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் பரிசுகள் வழங்கினார்.

    ஆசிரியர் ஒருங்கிணைப் பாளர்கள் மந்திர மூர்த்தி, திருப்பதி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வருகிற 25,26-ந் தேதிகளில் நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் எனப்படும் பிரமாண்டமான 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிசிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற ஜூன் 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஏ.பி. செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவியரை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியை நேரில் கண்டுகளிக்க தமிழக அரசு மற்றும் அணைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 8வயது, 11 வயதிற்குட்பட்ட 3 சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வெகு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் இல்லை. அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பில் பதிவு செய்திருந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய இன்று (22-ந் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கணேஷ்பாண்டி (98437 57767), இன்பராஜலிங்கம் (70106 56213) ஆகியோரது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆத்தங்கரைபட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி கிராம தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன. வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
    • மாணவ -மாணவிகளை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டினர்.

    தென்காசி:

    தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 44-வது பிடா செஸ் ஒலிம்பிக் - 2022 போட்டிகளில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    அதில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும், மாணவன் ஜகத்பிரபு 17-ம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனர்.

    மாணவன் சமேரியா மாவிஸ் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். மாணவன் வசீகரன் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
    • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

    • போட்டிகளை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி இணைந்து நடத்திய இந்த போட்டியானது ஆலங்குளத்தை அடுத்த பனையங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

    முக்கூடல் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.

    இதனை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஸ்டஅக் பள்ளி தாளாளர் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரி தலைவர் மதிவாணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர், பள்ளித் தலைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×