search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.
    • விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்‌.

    நாகர்கோவில்:

    தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் திட்டுவிளை சேகரத்துக்கு உட்பட்ட எட்டா மடையில் புதிதாக சி.எஸ்.ஐ. ஆலயம் கட்டப்பட்டது.

    புதிய ஆலய அர்ப்பணம் விழா இன்று நடந்தது. விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சபை போதகர் பிரைட் ஜெப நேசஸ் முன்னிலை வகித்தார். புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.

    விழாவில் பேராய மாமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட பொருளா ளருமான கேட்சன், சபைச் செயலாளரும் நாகர்கோ வில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜெயஷீலா கேட்சன், சபை பொருளாளர் சாம் செல்வராஜ், சபை கணக்கர் ஐசக், உறுப்பினர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடந்தது.

    • இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன
    • 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 2-ம் கட்டமாக உடையார்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கோடாலிகருப்பூர் அருள்மொழி, கார்குடி, கங்கை கொண்ட சோழபுரம், காடுவெட்டி, சுத்துக்குளம், கோவிந்தபுத்தூர் மற்றும் முட்டுவாஞ்சேரி, செந்துறை வட்டத்தில் குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் கூடலூர், அரியலூர் வட்டத்தில் கண்டிராதீர்த்தம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் கொள்முதல் நிலையங்கள் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
    • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் மெய்குடி பட்டி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட தி.மு.க. செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொடுத்து உரிய தொகை வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சக்தி.விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
    • கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற அழைப்பு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் படி கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான வி.முத்துகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையின் படி கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி.
    • 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    விழா நாட்களில் வேதாரண்யம் கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடந்தது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கன்னியாகுமரி விேவகானந்தபுரத்தில் உள்ள விவேகான ந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்பட்ட வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் பூலங்கிசேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை போன்றவை நடந்தது. இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் குமரி மாவட் டத்தில் திருப்பதிசாரம் திருவாழிமார்பன் திருக்கோ வில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், மகாதானபுரம் நவநீத சந்தாண கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 5-ந் தேதி தொடக்கம்
    • தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது. பின்னர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி இன்று (2-ந்தேதி) முதல் 4 -ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ந்தேதி திறக்கப்படும். மேலும் இந்த நாட்களில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இடம்பெறாதவர்கள் பள்ளிகளில் உள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான விடுமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இன்று (2-ந்தேதி) அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    • மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி 3-வது மண்டலக்குழுத்தலைவரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், உதவி ஆணையர் தயாநிதி, வன்னை அரங்கநாதன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர் கோவிந்தராஜன், மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

    • கொரடாச்சேரி ஒன்றியத்தில் பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் அபிவிர்தீஸ்வரம் மையத்தான் கொல்லையில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    ரூ.60 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

    கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது
    • மருதங்கோண் விடுதியில் கட்டி முடிக்கப்பட்ட

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் மறமடக்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருதங்கோண்விடுதயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்த துணை சுகாதார நிலையத்தை அங்கிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சுகாதார நிலையத்தின் சாவினை மருத்துவரிடம் வழங்கினார்.

    மருதங்கோண் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலாராஜேந்திரதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பாப்பாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகா, ஹெல்த் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் நிலோபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயா பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, ரஞ்சனி , அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாகுல் ஹமீது, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அரங்கதங்கமணி நன்றி கூறினார்.

    • காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.

    சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    ×