search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபநாசம்"

    • திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.
    • நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத்.

    தமிழில் கமல் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுபோல 'தூங்கா வனம்' உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

    இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.

    திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.

    விருந்தினர்களை வரவேற்கும் விதத்தில் நடந்த இந்த நடனத்தை திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

    இதற்கிடையே திருமண விழாவின் வீடியோவை சமீபத்தில் நடிகை ஆஷா சரத் வெளியிட்டார்.

    அதில் நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர். மகளின் திருமணத்தில் தாய் நடனம் ஆடியதற்கு பாராட்டும் குவிகிறது.

    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.

    • சென்னை -திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    சென்னை-திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கும், மறுமார்க்கமாக அங்கிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    நாளை முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

    அடுத்த வருடம் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த சோதனை முறை அமலில் இருக்கும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர நிறுத்தமாக மாற்றப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
    • 29, 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    பாபநாசம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே (மும்பை), சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயிலை (வண்டி எண்: 09419/09420) ரெயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.

    இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்பதையும் அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி, 6.11.2022,13.11.2022, 20.11.2022, 27.11.2022 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25 க்கு வந்து சேரும். பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் 29-ந்தேதி, 5.11.2022, 12.11.2022,19.11.2022, 26.11.2022 ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரெனிகுண்டா), புனே, (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும்.

    தற்சமயம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ள இந்த வண்டிக்கு கிடைக்கும் பயணிகளின் வரவேற்பைபொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

    எனவே இந்த வாய்ப்பினை அதிகம் பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    • இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பாபநாசம் கீழ கஞ்சிமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 30) மனைவி கவிதா (22) சேர்க்கப்பட்டார்.

    இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கவிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த கவிதாவி னன் உறவினர்கள் மருத்து வமனை முன்பு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் துணை சூப்பிரண்ட் பூரணி, பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் - இன்ஸ்பெக்டர் இளமாறன், மண்டல துணை தாசல்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா இறப்பு குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொ ண்டனர்.

    உறவினர்கள் திரண்டு வந்து கவிதாவின்உடலை வாங்க மறுத்து மருத்துவம னையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதாவை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தேங்கினால் அவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
    • கொட்டாங்குச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப், அம்மிக்கல், ஆட்டுக்கல், ப்ரிட்ஜில் பின்புறம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதிக ளில் உள்ள கபிஸ்தலம், பண்டாரவாடை, சக்கரா ப்பள்ளி, வீரமா ங்குடி, ஆதனூர், ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் டெங்கு எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு தினந்தோறும் அனைவரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் சென்று வீடுகளில் பின்புறம் கொட்டாங்குச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப், அம்மிக்கல், ஆட்டுக்கல், ப்ரிட்ஜில் பின்புறம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

    தண்ணீர் தேங்கினால் அவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக், தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து, சுவாமிநாதன் மற்றும் மஸ்தூர்கள் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார்.
    • இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம்அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி தலைமை வகித்தார். விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி கலந்துகொண்டு 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜனனி, ஹேமதர்ஷினி, ஐஸ்வர்யா ஆகியோருக்கும், 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த லிதனியானா, சுமனா, காவியா, லாவண்யா ஆகிய மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.இவ்விழாவில் பாபநாசம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் செல்வராஜ், பாபநாசம் அன்னை சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகி, சம்பந்தம், சமூக ஆர்வலர் பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர்கள் விஜய், சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பேசினார்கள். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
    • வருகிற 26-ந் தேதி பாபநாசத்தில் ஒன்றிய மாநாடு நடைபெறும்

    பாபநாசம்:

    பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். ஒன்றிய பொருளாளர் சேகர் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    முன்னதாக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் கொடியினை ஏற்றி வைத்தார். இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சந்திரா, கிளை செயலாளர்கள் ஜெகநாதன், இலங்கேசன், ராஜ், ரவி, ராஜேந்திரன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இம்மாநாட்டில் வருகிற 26-ந் தேதி பாபநாசத்தில் ஒன்றிய மாநாடு நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 24-வது மாநாட்டில் குடும்பத்தோடு அனைவரும் கலந்து கொள்வது எனவும், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு ஆகிய இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து வழங்க பட்டா வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் புதிய ஒன்றிய செயலாளராக பொன். சேகர், ஒன்றிய துணைச் செயலாளராக கனகராஜ், ஒன்றிய பொருளாளராக சாமு. தர்மராஜன் உள்ளிட்ட 13 புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • பாபநாசத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    இப்பேரணி பாபநாசம் பேரூராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்தது. இதில் துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×