என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 228524"
- மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
- கம்யூனிஸ்டு, தி.மு.க., தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆண்டுதோறும் மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்பட உள்ளது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் அரிசிக்கடை வீதியிலும், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் ராயபுரத்திலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அ.தி.மு.க. சார்பில் பெரிச்சிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் திருப்பூர் மாநகர போலீசில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு, தி.மு.க. தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் அணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து கமிஷனர், தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கேயனை தொடர்பு கொண்டு அ..தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து விளக்கங்கள் கேட்டார். பின்னர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். அனைத்து கட்சிகளின் மே தின பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.
- இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது.
திருப்பூர் :
திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் வரிவசூலை தீவிரப்படுத்தி வருகிறது. நகராட்சி அலுவலகம் மற்றும் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் வரி, சாக்கடை கால்வாய் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், நகராட்சியில் இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது. இதுவரை வரி செலுத்தாதவர்கள் இன்று மாலைக்குள் வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த கிராந்திகுமார், கோவை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தாராபுரம் சப்-கலெக்டராக பணியாற்றியவர். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் திருப்பூர் மாநகராட்சியின் கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.
- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
- திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
- முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார்.
அனுப்பர்பாளையம் :
திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக இருந்த முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கமிஷனராக இருந்த தாமரை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாமரை திருமுருகன்பூண்டி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கமிஷனராக பொறுப்பேற்ற தாமரை, மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார். முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்ட கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு வழியனுப்பு விழாநடைபெற்றது .
இதில் தலைவர் குமார் தலைமையில் துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அனைவருக்கும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
- தேவண்ணக்கவுண்டனுாரில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர்மேட்டூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவும்யா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, சாக்கடைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 74 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.
அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி
வைத்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார். முகாமில், சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது.
- ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர போலீசில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.
இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
- ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து ஆணையர் அலுவலக பண்டகப்பிரிவில் இருந்தது.
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு), தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
- மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- வணிக வரித்துறை உதவி கமிஷனர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டுபட்டுள்ளது.
- வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
மதுரை
மதுரை கே.கே.நகர், லேக் வியூ கார்டன் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 64). வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
மகாலிங்கம் கடந்த 3-ந் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பொருட்கள் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்