search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது.
    • அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது. அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று திடீரென அந்த மரம் முறிந்து விழுந்தது. அது மகாலிங்கத்தின் வீட்டின் மேற்கூரையை தொட்டபடி காம்பவுண்ட் சுவற்றுக்குள் விழுந்தது. அந்த நேரத்தில் சிறுவர்கள் யாரும் அந்த பகுதியில் விளையாடாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் அருகில் இருந்த பொதுமக்களுடன் இணைந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தி வீட்டில் மாட்டிக்கொண்ட மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். 

    • எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்ச்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் எலக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பெங்களூர் ஸ்மார்ட் டிவி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.

    தேர்வில் கலந்து கொண்ட 23 மாணவர்களில் கணினித் துறையை சேர்ந்த இசக்கிமணி, சூர்யா, எலக்ட்ரானிக்ஸ் துறையில் மதன் ஆகிய 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. தேர்வுபெற்ற மாணவர்களை கல்லுரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்ரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத் தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பராட்டினர். நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகளை காலூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் செய்திருந்தார்.

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
    • பயணிகள் அமரும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து அதனை பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ்கள் மூலம் நெல்லை,தென்காசி,சுரண்டை பகுதிகளுக்கு வேலைகளுக்காக செல்கின்றனர்.

    இதனால் மோட்டார் சைக்கிள் நிறைந்து காணப்படும் பயணிகள் அமரும் பகுதியை பஸ் பயணிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் தற்போது மோட்டார் சைக்கிள் நிறுத்தும் காப்பகமாக பஸ் நிலையம் காட்சி அளிப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன.
    • கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே சாலையின் குறுக்கே இருந்த குடிநீர் பைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகே உயர் அழுத்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    போக்குவரத்து மிகுந்த சாலை என்பதாலும் அருகில் சிறிய மின்கம்பங்கள் இருப்பதாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த சாலையில் மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'கள் சாலை நடுவே நின்றிருந்த நிலையில் அதனை மாற்றி அமைக்காமல் அப்படியே புதிய சாலை அமைக்கப்பட்டதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையின் நடுவே அச்சுறுத்தும் வண்ணம் நிற்கும் மின்கம்பங்களின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது.
    • ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை 1903- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டு 1904-ல் இந்த வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    அப்போது நிலக்கரி என்ஜின் மூலமாக ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நெல்லை -தென்காசி -கொல்லம் வழித்தடமானது இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக செல்வதால் இந்த வழித்தடத்தில் ெரயிலில் பயணிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    அகலப்பாதையாக மாற்றம்

    நெல்லை -தென்காசி மீட்டர் கேஜ் ரெயில் வழித்தடம் 31 டிசம்பர் 2008- ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டது.

    பின்னர் 2012 செப்டம்பர் 21- ந்தேதி முதல் மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த ரெயில் வழித்தடத்தில் சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட 16 ரெயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்படும்.

    119 -வது ஆண்டு விழா

    பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தின் 119-வது ஆண்டு விழா கேக் வெட்டியும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. ரெயில் ஓட்டுனர்கள், ரெயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னா டை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த ராமச்சந்திரன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர் சேவியர் ராஜன், தெற்கு ரெயில்வே மண்டல ஆலோ சனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

    • இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
    • இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.

    இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த அருணாச்சலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோரை கட்டிப்போட்டு 140 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சததிரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது.
    • பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி சாலையினை தற்பொழுது நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் உள்ள கடைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. பின்னர் வட பகுதியிலும் கடைகள் அகற்றப்பட்டன. அந்த பகுதிகளில் வாறுகால் கட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

    இந்த நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    புதிதாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ரெயில்வே கேட்டில் கிழக்குப் பகுதியில் 450 மீட்டரும் மேற்குப்பகுதியில் 450 மீட்டர் அளவு கொண்டதாக அமைய உள்ளது.

    இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின்பு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் புதிய பால பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ஆனந்த செல்வன்மற்றும் தேவராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன்படி பாவூர்சத்திரம் அருகே சின்ன குமார்பட்டியை சேர்ந்த ஆனந்த செல்வன் (வயது 25) மற்றும் செட்டியூர் அருகே பஞ்சபாண்டியூரை சேர்ந்த தேவராஜ் (40) ஆகிய இருவரும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

    தகவலின்பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • குழந்தை அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
    • போலீசார் சிறுவன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் அஸ்வந்த் என்ற 1 ½ வயது மகன் உள்ளனர்.

    நேற்று சிறுவன் அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன் பக்கத்தில் குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக அவன் தவறி விழுந்தான்.

    வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை காணாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தான். அதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் விளையாடி க்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெத்தநாடார்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் கடையை சீல் வைத்தனர்.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகிலும், கடை வீதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதன்படி பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் பள்ளி அருகில் நடராஜன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் அதிகாரிகள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் கூட தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சசிதீபா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் மற்றும் பாவூர்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் அங்கிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடையை சீல் வைத்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை சீல் வைப்பது முதன்முறை ஆகும்.

    • கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரபட்டி பஞ்சாயத்து குறும்பலாப்பேரி 7வது வார்டு உலகாசிபுரத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவரின் வீட்டின் முன்பு பாழடைந்த பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இதனை பலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதாலும் இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் பாழடைந்த கிணறு முழுவதும் நீர் நிரம்பி விடுவதால் கிணற்றின் அருகே செல்லும் பாதையை தினமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வரும் சூழ்நிலை இருப்பதால் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பலமுறை குலசேகரபட்டி பஞ்சாயத்து மற்றும் கீழப்பாவூர் யூனியனிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    பாழடைந்த கிணறு முழுமையாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×