search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேன்டீ"

    • டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கெண்டார். அப்போது, தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சனை, குடியிருப்பு வசதி, மற்றும் டேன் டீயை எவ்வாறு லாபத்தில் கொண்டு செல்வது ஓய்வு பெற்ற டேன் டீ ஊழியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி வீடு கட்டி கொடுப்பது மற்றும் ரேஷன் கடைகளில் டேன் டீ யில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளை விற்பனை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வற்புறுத்தினர்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரித்தார்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டேன் டீ ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் டேன்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்வது என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ரேஷன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன் டீ தேயிலை தூளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்தனர்
    • பேரணியாக சென்று அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்

    ஊட்டி:

    தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டேன்டீ தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி அன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

    திடீரென அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்க கொடிகளுடன் ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ×